கடல் வாழ்க்கை

அதிகாலைச் சூரியன் 
எப்போது உதிப்பான்/
அந்திச் சாய்கையில்
எப்போது மறைவான்/
மீனவர் வாழ்வை மீட்டும் போது/
மின்னலாய் ஏழ்மை மின்னி மறையுதே/

வலைகளின் சிக்கும்
மீனின் இனமும்/
வாஞ்சையில் திளைக்கும்
மீனவன் குணமும்/
ஒருமனதாய் சேர்ந்து
ஒத்துழைப்பு நல்குதடா/

பறவைகள் பறக்கும் 
வான வீதியிலே/
பரவையில் அசைப்போம்
துடுப்பின் கைகளிலே/
குடும்பத்தின் சுமையை
மனதில் சுமந்தே/
கொத்து கொத்தாய்
மீன்பிடிப்போம் நிதமே/

மனையின் காதல்
மனதில் மிதக்க/
கடலின் காதல் 
நாசியில் கலக்க/
உயிரை மாய்த்து
வயிற்றை நிரப்பி/
வணிகம் செய்யும்
வாலிபம் யாமே/

மக்கள் நினைப்போ
மன்னவன் மீது
மன்னவன் நினைப்போ
மக்கள் மீது/
அலைகளைப் போலே
அசைந்து வந்து/
அன்றாட வாழ்வை
கடக்குது இங்கே/

கடலின் வாழ்க்கை 
கரைசேரும் வரை/
கர்ணனின் வாழ்க்கை
 கொடை வழங்கும் வரை/
உடலின் வழியே
ஒட்டாத உயிராய்/
நலமாய் வாழ
நாணயம் தருமே/

ஹைக்கூ


நீயும் நானும்


இரவும் பகலும் இணைந்தே கடக்க/
எண்ணத்தில் எளிதாய் காதலும் பிறக்க/
ஈருயிர் சேர்ந்து இரண்டறக் கலக்கும்/
இல்லற வாழ்வோ நல்லறமாய்ச் சிறக்கும்/
மூச்சினில் கலந்த முக்கண் நிமலனே/
பேச்சினில் தவழ்ந்து பேரின்பம் அருள்வாயே/






கதிரறுக்கும் சின்னப்புள்ளே
***********************************
கழனியிலே விளைஞ்ச நெல்லு/
காலையிலே அறுத்த நெல்லு/
கடங்காரன் கேட்கும் முன்னே/
கடனை அடைக்க வாடிப்பொண்ணு/
கதிரறுக்கும் சின்னப்புள்ளே/
காதலன் சொல்றேன் கேளு மெல்ல/
நாளை முதல் நம்ம கவல/
நாளடைவில மறையும் புள்ள/
மனையெங்கும் செல்வம் பொழியும் புள்ள/
மகிழ்ச்சியில் மனதோ நெகிழும் புள்ள/








ஹைக்கூ


கரிசக் காட்டு குயிலே

காட்டினிலே உலாவி வரும்
கரிசக் காட்டு குயிலே நீ/
பாட்டினிலே கலந்த சுதிபோல
பாதியாத்தான் இருக்குறீயே/
எண்ணத்துல பலக்கனவு
எல்லத் தாண்டி பறக்கையில/
கன்னத்துல முத்தமிட
காத்துருக்கேன் நாந்தானே/
வீசிவரும் காற்றலையும்
விலாசங் கேட்டு தவழயில/
நாசியெங்கும் உன் வாசோம்
நறுக்குனுதான் இருக்குதடி/
ஒன் அழக நான்கண்டு
ஒத்தையா வர நெனச்சபோது/
செத்தையெலாம் காதலமெல்ல
செவிக்குள்ளே சொன்னதடி/
பரிசோம் போட நாமும் வாறோம்
பாதாம் பருப்பும் கலந்து தாறோம்/
தேனா இனிக்கும் ஓங்குரலால்
தேவகானங் பாடு குயிலே/



ஐந்திணைக் காதல்

குறிஞ்சி
*********
குறிஞ்சி மலை அடிவாரத்திலே
குடியிருக்கும் சிலையழகே/
உன் காந்த பார்வையிலே
உள்ளமெங்கும் நெகிழுதடி/
பாய்ந்துவரும் நதியினூடே
தேய்ந்துபோகா கூலாங்கல்லாய்
தைரியமாய் வாழும் காதல்
தனித்துவத்தின் நம்பிக்கையடி/
வசந்தகால பொழுதினிலே
வந்தமர்ந்த அறுவடையாய்/
காதல் ராகம் பாடியுந்தான்
தேடல் வேகம் கூட்டுதடி/
சில்லென்ற குளிர்காற்றும்
சிவந்த வான முகவழகும்/
நெஞ்சமெல்லாம் நிறைகுடமாய்
நிறைவுதனை வழங்குதடி/
சங்கு போன்ற உன் கழுத்தும்/
சாந்தமான திருமுகமும்
கயல்விழியின் பொய்கையிலே
காதல்மொழி பேசுதடி/
மார்கழியின் கடுங்குளிரும்/
மங்கையரின் நீராட்டும்/
குவிந்த மலர் சோலையாக
குறிஞ்சிக் காதல் இயம்புமடி.....








ஹைக்கூ

கூட்டுக்குடும்பம்/
முதலிடத்தை பிடிக்கிறது/
எல்லோருடைய விட்டுக்கொடுப்பு/





ஏற்றம் தந்திடும் ஏணியே ஆசான்



வாழ்வில் என்றும் வசந்தம் வீசவே/
வாத்தியார் பணியால் வழியும் திறக்குமே/

தியாகம் செய்த திருமலை குருவாய்
திவ்விய நாவில் தினமும் குந்தியே/

நல்வழி புகற்றும் நாமகள் வடிவாய்
நற்றமிழ் கற்று நாளும் உரைக்கவே/

எண்ணிலும் எழுத்திலும் திகழ்ந்தடும் ஈசனாய்
ஏற்றம் தந்திடும் ஏணியே ஆசான்/



ஹைக்கூ


தன்முனைக் கவிதை

எண்ணமிகு செயல்
********************
எண்ணமிகு செயலால்
ஏற்றம் காணலாம்/
நேர்மறை குணத்தால்
நிறைவை உணரலாம்/



அந்தாதி கவிதை


மழையே
***********
மழையே மார்கழியில்
நீயும் பொழிந்தாலே

பொழிந்தாலே பூமியும்
பூரிப்பு அடையுமே

அடையுமே அறுவடை
பெருகிய செல்வமே

செல்வமே சீதேவியாய்
சீக்கரம் நுழையுமே

நுழையுமே வாழ்வில்
துன்பம் கலையுமே

கலையுமே கதிர்கள்
குவிந்து நிறையுமே

நிறையுமே நிம்மதி
நீடி வளருமே

வளருமே வசந்தமும்
நாள்தோறும் பெருகியபடியே


ஹைக்கூ

விடியல் வேளை/
கதவைத் திறக்க வருகிறது/
நீம்பல் சத்தம்/




இதயவானிலே ஓர் இளைய நிலா



அல்லி மலரும் பொழுதினிலே
அழகாய் பொழியும் வெண்மதியே
தரணியெங்கும் மணம் பரப்பி
தண்மையினை தந்திடுவாயே
இதயமெனும் மீலத்திலே
உதயமான பெண்ணிலவே
இன்பவொளி நீ சிந்தி
இதமாக நகர்ந்தாயே
காதலெனும் ஒரு உருவம்
காணாமல் தினம் வாட
கண்ணியமாய் காத்திருந்து
கானங்களும் பாடியதே
நீ சிந்தும் புன்சிரிப்பும்
நிதம் குளிரும் நிலப்பரப்பும்
நிரந்தரமாய் நின்று கொண்டு
நிம்மதியை நீட்டியதே
மாதத்திலே இருமுறையும்
மங்காத திருநடையும்
நான்கறையில் நாணமிட்டு
நலம்வாழ கூறுதிங்கே
எண்ணங்களும் எழுத்துகளும்
இதயவானில் உலாவுகையில்
வண்ணமின்றி நீந்திவரும்
வாலிப நிலவும் நீதானே


தன்முனைக்கவிதை

மதநல்லிணக்கம்
***********************
நல்லெண்ணம் இருந்தாலே
நல்லிணக்கம் உருவாகும்//
நையாண்டி செயலாலே
நற்குணமும் மாறிவிடும்//



அன்பில் நிறைந்தவளே


மனமென்னும் மாளிகையில்
    மார்கழியாய்த் திகழ்பவளே//
மங்காதத் தாரகையாய்
    மாலையிலே குளிர்பவளே//
 அன்பென்ற ஆணிவேராய்
        அடிமனதில் நிறைந்திருக்க//
ஆண்டவனின் படைப்பினிலே
            அதிசயமும் நீதானே//
 இதயங்களும் இயற்கையுமே
          இருவடிவ மூச்சாகி/
ஆழியான அன்புணர்வு
      ஆட்சியுமே நடத்திடுதே// 
ஊற்றெடுக்கும் காதலிலே
        உயிரூட்டும் உன்னன்பு//
நானிலத்தின் நாயகனாய்
       நல்லாட்சி நடத்திடவே//
காதல்மொழிப் பேசிடவா
    காற்றலையில் மிதந்திடவா//
அன்பென்ற மொழிப்பேசி
     ஆயுள்வரை வாழ்ந்திடுவோம்//




ஹைக்கூ

மலைத்தொடர்/
மனதை வெகுவாக கவர்கின்றன/
அணில் முதுகின் கோடுகள்/



ஹைக்கூ




தன்முனைக்கவிதை


எங்க ஊருத்திருவிழா


ஒலிபெருக்கிச் சத்தங்கேட்டு உற்சாகமாய் நாமெழும்பி/
உள்ளுர் முருகனை உள்ளத்தில் நினைந்து/
உடனே போனோமே ஊர்த்திருவிழா கொடியேற்றத்திற்கு/
புரோகிதரும் கிரியைகள் செய்து முடிய/
இனிதே விழா தொடங்கி மகிழ/
இதயத்தில் சந்தோசம்
உதித்த தருணமே/
இறைவனின் இன்னருள் புரிந்த மகுடமே
கிராமத்து மக்கள் கிளம்பி வந்து/
ஆடிவிழாவில் கலந்து மனம் மகிழ்ந்து/
காவடியாட்டத்தில் ஆடிப் பாடிய இடமே/
காலத்தால் அழியாத அழகியத் தடமே/




அணி பணி கணி மணி


இன்பத்தை இசைக்க இழைகளை அணிந்தே/
ஏமாற்றும் பேர்வழியை கணித்தே/
பண்பான சான்றோரைப் பணிந்தே/
பாரினில் ஒலித்திடு பாக்கியசாலி மணியே/



பள்ளிப்பருவம்



விடியல் பொழுதின் வெளிச்சம் வீச/
விரைந்துச் செல்லும் மாணவர்க் கூடி/
ஆடிப்பாடி கதை பலப் பேசி/
ஆரம்ப மணிக்கு செல்வோம் நாமே/
காலை வணக்கம் சொல்லும் நண்பன்/
கலந்து பட்டப் பெயரும் விளம்ப/
மனதில் பதித்த வடுவைப் போலே/
மாறா வைராக்கிய மாண்பை உணர்ந்தேன்/
பட்டப் பெயரோ துணிவைத் தந்து/
பாவலர் விருது பெற்றதும் மகிழ்வே /




தந்தையின் தாய்மை

ஆயுள் வரை எமை சுமந்து/
அத்தனைத் தியாகத்தையும் வாழ்வினில் கடந்து/
நிறைமாதத் தாயாய் நேரிலே உதித்த/
நிமலனே உன் பணி நிறைகுடமே/




முத்தம்


கருவறை தூளியிலே களிப்போடு விளையாடி/
முன்னூறு நாட்களிலே முழுமையாக வெளியேறி/
அன்னையின் அரவணைத்த முத்த மழையும்/
ஆனந்த ஊஞ்சலிலே ஆடிய உணர்வும்/
மீண்டும் பிறந்து பெற்றால் சுகமே/








நோய்களே வெளியேறு

உலகையே ஆட்டிப் படைக்கும்
உயிர்க்கொல்லியே//

உன்னைப் பிரசவித்த
கருவறையும் தெரியலையே//

அரைமுதல் அம்பலம்வரை
ஆவேச உன்னாட்சி//

அழிவை நோக்கி
பயணிப்பதா உன்முயற்சி//

மண்ணுலகில் வாழ்ந்திடவே
ஆசையுறும் மாந்தர்களை//

கண்களிலே காட்டாதபடி
கண்முன்னே மாய்ப்பதேனோ//

வந்தவழி திரும்பி விடு
வசந்தகாலம் திருப்பிக் கொடு//

உன்பெயரை உச்சரிக்க
உள்ளுணர்வு வெறுக்குதிங்கே//
உடனடியே உலகை மறந்து
ஓடிவிடு பெருபிணியே//

நோகாமலே வெளியேறு நுண்மியே//

நோய்களையெலாம் நொடியில் விரட்டியே//



தன்முனைக்கவிதை


ஊஞ்சல்

மாலையில் மயக்கும் மன்மத கானமும்/
மாருதம் தேடும் மங்கையின் தேகமும்/
ஒய்யாரம் ஆடும் ஊஞ்சலின் அழகும்/
ஆரோக்கிய வாழ்வில் ஆன்றோர் உரைத்தும்/
நவீன உலகில் நடத்துபர் யாரோ/






மின்னலாய் ஒரு பின்னல்

ஆரணியம் என்றால் அர்த்தமோ காடு/
அழகாய் மேயுதே ஆடு/
மழையின் வரவையே நாடு/
மகிழ்வாய் நனைந்தே கீதம் பாடு/

ஹைக்கூ


ஹைக்கூ


காதலும் காதலியும்


இதயங்கள் பேசிய இனிய மொழி/
இரண்டற கலந்த இன்ப ஒளி/
அன்றில் புள்ளாய் அரவணைத்த நதி/
ஆனந்தமாய் ஓடுதே காதலும் காதலியும்/



விழி தேடுதே உன்னை



மூவாறு வயதினிலே முக்கனியாய் சுவைத்தவளே
முத்தமிழின் வடிவினிலே மூச்சாகி
திகழ்ந்தவளே//

திக்கெல்லாம் உன்னுருவம் திருவிழாக் காட்சியாக
தேடியே அலையுதடி
திருட்டுப்போன மகவையாக//

அன்பை விதைத்து நீ உறங்க
ஆசைக் காதலை நான் பருக
பாதுகாப்பு வேலிதனை பார்வையிலே இட்டதாரோ//

மனதில் ஓடும் காதல் நதி
மாமனைப் பாடி விழி யசைக்க
விண்மீனின் விழியாலே விவேகமாய் தேடுதடி//