ஹைக்கூ

பறக்கும் பலூன்கள்/
அங்குமிங்கும் அசைகின்றன/
வானத்து மேகங்கள்/



ஹைக்கூ

உழுத நிலம்/
ஒட்டிப்போய் கிடக்கிறது/
உழவனின் வயிறு/




வாழத்தண்டு கறியாக்கி


வயல்காடு மத்தியிலே
வாய்க்காலு பக்கத்துல
வழக்கம்போலே வந்தவளே
வசியக்கார குலமகளே

தூக்குச்சட்டிய தூக்கிக்கிட்டு
துள்ளிவரும் கண்மணியே
ஏமனச தூண்டியிட்டு
இழுக்குதடி கறிவாசோம்

வாழத்தண்டு கறியாக்கி
வாத்தியாரா வினாவெழுப்பி
கீரிசம்பா சாதத்துல
கேட்டு கேட்டு பரிமாறயில
ஊறுகாயி சுவப்போல
உள்ளமெல்லாம் புளிக்குதடி

கட்டுனவன் கழனியில
காலவெயில் சுடுகையில
வேர்வயெல்லாம் மேனியில
விறுவிறுனு மொளைக்கிறதே

ஆக்கி எடுத்த கறியெல்லாம்
ஆறிப்போகும் முன்னாலே
வந்து நீயும் சாப்பிடுயையா
 வாழத்தண்டும் ருசிக்குமையா

விதவிதமா நா சமைச்ச
     வீட்டுல காச்ச வாழத்தண்டு
ஒன்நாக்குல ஒட்டனுமுனு
 ஒத்தக்கால்ல நிற்கையில
ஓடிவந்து சாப்புடுவே
    உடம்ப நல்லா பாத்துக்கவே



பழைய சோறு பச்ச மொளகா

வல்லரசோட உண்டியிலே வாடிக்கையான ஆகாரமாய்/
தமிழேன் சொன்ன தனி மருந்தே/
தைரியமா உலாவும் பழைய சோறே/
தயிரும் மோரும் தமுக்கோம் அடிக்க/
தமிழைத் தானே சேர்த்து குடிக்க/
காலையிலே நானும் கண் விழிக்க/
கட்டில் பக்கத்துல மொளகா மணக்க/
குடும்பத்தோட நாளும் ஒன்னா கூடி/
குடிச்ச கதைய சொல்றேன் கேளு/
அதுதான் நம்ம அடித்தளம் மானு/


குறள்வெண்செந்துறை-பொது இலக்கணம்



இயற்கையே வாழ்வினில் இனிமை
***************************

இயற்கையே வாழ்வில் இன்பத்தை தந்திடும்/
இறைவனின் படைப்பால் இன்னலை போக்கிடுமே/

இயற்கையின் பாடம் இம்மையில் உணர்த்தும்/
இணைந்தே பயணிக்க இன்னலை விரட்டுமே/

இயற்கையின் அழகில் இறைவனும் உறைவான்/
எளிமையின் வடிவில் எப்போதும் துணையே/

மாருதம் வீசி மாந்தரை வெல்லும்/
மாசற்ற செயலால் 
மாணிக்கமாய் ஒளிருமே/