மாமனே ஒன் நெனப்புதான்

மாமனே ஒன் நெனப்புதான்
மனசுல புகுந்து வாட்டுதடா
காதலிச்ச நேரத்துல
கருத்த பாலத்து வீதியில
பாசமழ பொழிஞ்சி நாமும்
நேசவழி தொறந்தோமே
காதலிச்ச காலத்துல
காட்சியெல்லாம் நீயாயிருந்த
தாலி கட்டின பின்னால
தட்டான்பூச்சா பறந்துப்போக
ஒன்ன நெனச்ச ஏமனசு
ஊசலாடிய தனிமரமா
நெனப்பு மட்டுமே மாறாம
நெசமா காதல தேடுதிங்க

ஹைக்கூ


தமிழா எழுவது எப்போது


வீழ்ந்து கிடக்கும் வீர மண்ணில்

விதைத்தோம் தமிழ் விதைகள் அன்று
விருட்சமாகி நிழல் தரும் முன்னே
போர்களமாகிப் பொய்த்துப் போன தேனோ

அநியாயம் கண்டு அதிர்வை ஒழித்து
நியாய மலையை நெஞ்சில் அமைத்து
மறவன் என்ற தமிழை வார்த்து
மண்ணிலே நீயும் செயித்து காட்டு

பிறப்புகள் எல்லாம் ஒரு வகுப்பு
பிரிவினை இல்லா உயிர்த் துடிப்பு
தமிழின் தடமாய் களம் அமைப்பு
தனித்துவமே நமது கடும் உழைப்பு

வானத்தை கண்டு நாம் பயந்தால்
வரும் மழையைத் தாங்குவது யார்
அருகம்புல்லாய் மீண்டும் உயிர் பெற்று
தளிராய் தமிழா எழுவது எப்போது

முகம் காணா நட்புகள்

அகமும் முகமும் அருவமாய் கலந்து
ஆழ்மனதில் அன்பாய் பதிந்து
சிந்தனை வடிவில் வளரும் நட்பே
சிந்தையில் மலர்ந்த அழியா கற்பே
தீந்தமிழின் சுவைதனை
செவ்வனே யானும் சுவைக்க எண்ணி
முகம் காணா நட்புகளுடன்
அகம் குளிர ஆசைப்பட்டேன்
வார்த்தைகளில் நிதம் பிறந்து
வண்ணத்தமிழால் காதில் நுழைந்து
தென்றலாய் வீசும் தேனினமே
தெவிட்டாத அன்பின் மறுதோற்றமே
அகிலத்திலே தடம் பதித்த
எத்தனையோ உறவுகளும்
நித்தமும் கவிபடித்து
நீண்ட பயணம் செல்லுதிங்கே
பௌர்ணமியின் ஒளியினிலே
பாசாங்கு காட்டும் காதலரே
பாசத்தின் மொழியறிய
பாசமழைப் பொழிய வாருங்களே

ஹைக்கூ

இருட்டிய பொழுது
இடையில் பிரிந்து செல்கிறது/
கூடவே வந்த நிழல்/

ஒற்றை ரோஜா




உறங்காத இரவுகள்


வாலிப உணர்வு வாசலில் கோலமிட/
வயதின் தாகமோ
மெதுவாய் மோகமிட/
தென்றலின் தீண்டலாய்
தேகத்தில் நுழைந்தவளே/
சேற்றிலே மலர்ந்த
செந்தாமரை நீயடி/ இலைதனிலே
ஒட்டிக்கொள்ளா இருதுளியாய் யாமிருக்க/
இரவுகளின் பசிகளுக்கு
இனிமை தர யாருமிலர்/
உன்னினவை சேமித்தபடி
ஒவ்வொரு நொடியும் கழிகையிலே/
உறங்கா இரவுகளை
உடனே மீட்டிக்கொடு/

ஐக்கூ