ஹைக்கூ


ஹைக்கூ

வாங்கிய புதுச்சட்டை/
எடுத்து ஒளித்து வைக்கிறாள்/
பொம்மைக்கு அணிய சிறுமி/

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா 

newly purchased shirt
girl keeps concealed 
for putting onto toy.

Trans: Bommidi Mohandoss.



ஹைக்கூ

வாடிய தேயிலையில்/
பரவிக் கிடக்கிறது/
வேலையாட்களின் உழைப்பு/

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

in faded tea leaves
be getting spreaded
toil of labourers.

Trans: Bommidi Mohandoss



ஹைக்கூ

வானத்து சூரியனை
தன் வசமாக்கி அள்ளும்
கிணற்றிலிருந்த வாளி

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

enticing the sky sun
takes out from well
the water bucket.

Trans: Bommidi Mohandoss.




ஹைக்கூ

அரசியல்வாதி வீடு
முற்றுகை இடுகிறது
அதிகாலை மூடுபனி

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

politician 's house
gets besieged
morning fog.

Trans: Bommidi Mohandoss.






புரட்சிக்கவிதை-குருதி படிந்த மண்


செந்தமிழ் ஊரின் செம்மை சென்னியே/
செறிந்து தமிழூரும் யாழ்நதியே/
அதிகாரம் கொண்டு அடையாளம் கேட்டதுமே/
ஆக்கிரமித்து அழிக்க நினைத்த பாவியே/

மண்ணின் மகிமை புரியாத மானிடனே/
மாங்கனி சுவைத் தெரியாத சாதியே/
குண்டு மழைப் பொழிந்த உன்னால்/
குருதி படிந்த மண்ணாய் மாறியதே/

உரிமையை கேட்பது உனக்கு கோபமா/
உடல்களை அழிப்பது பகைமை சாபமா/
உதிரம் காட்டாறாய் மாறிய இடமா/
உண்மை வெல்லும் ஒருநாள் வேகமா/

எங்கள் எண்ணம் தங்க மகுடம்/
சங்காய் முழங்கும் சத்திய சபதம்/
குருதிப் புனல் கொட்டிய இடம்/
பசுமையாய் மாறும் எங்களின் தாகம்/



ஹைக்கூ

நிசப்த இரவு
நீண்ட நேரம் பயணிக்காது
கனவு

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

silent night
doesn't travel long-term
dream.

Trand: Bommidi Mohandoss.

ஹைக்கூ

மழைச்சாரல்/
அங்குமிங்கும் அசையும்/
குடையின் நிழல்/

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

showering rain.
moves here and there
shadow of umbrella.

Trans: Bommidi Mohandoss.



ஹைக்கூ

அதிகாலை தேநீர்/
ஒன்றாய் கலக்கும்/
மூடுபனியும் நீராவியும்/

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா 

 early morning tea
mixing together 
mist and vapour .

Trans: Bommidi Mohandoss.

பேரன்பின் பெருநன்றி Bommidi Mohandoss. ஐயனே



ஹைக்கூ

கவிதை தோன்ற/
கருத்துகளை சொல்லி குவிக்கும்/
எழுதும் தூவல்/

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

as poem gets arise
compiles describing thoughts
scattered writing.

Trans: Bommidi Mohandoss.

பேரன்பின் நன்றி Bommidi Mohandoss



ஹைக்கூ

அர்த்தசாமம்/
திடீரென வந்து பிறக்கும்/
கவிதை/

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

midnight
suddenly gets arised
poem.

Trans: Bommidi Mohandoss.

தன்முனை

மனிதத்தோடு வாழ
மகத்தான பூமி புன்னகைக்கும் //
மாறாமல் தொடர்ந்தால்
மனிதநேயமோ கைகள் தட்டும்//