ஹைக்கூ

விடியல் வேளை/
கதவைத் திறக்க வருகிறது/
நீம்பல் சத்தம்/




இதயவானிலே ஓர் இளைய நிலா



அல்லி மலரும் பொழுதினிலே
அழகாய் பொழியும் வெண்மதியே
தரணியெங்கும் மணம் பரப்பி
தண்மையினை தந்திடுவாயே
இதயமெனும் மீலத்திலே
உதயமான பெண்ணிலவே
இன்பவொளி நீ சிந்தி
இதமாக நகர்ந்தாயே
காதலெனும் ஒரு உருவம்
காணாமல் தினம் வாட
கண்ணியமாய் காத்திருந்து
கானங்களும் பாடியதே
நீ சிந்தும் புன்சிரிப்பும்
நிதம் குளிரும் நிலப்பரப்பும்
நிரந்தரமாய் நின்று கொண்டு
நிம்மதியை நீட்டியதே
மாதத்திலே இருமுறையும்
மங்காத திருநடையும்
நான்கறையில் நாணமிட்டு
நலம்வாழ கூறுதிங்கே
எண்ணங்களும் எழுத்துகளும்
இதயவானில் உலாவுகையில்
வண்ணமின்றி நீந்திவரும்
வாலிப நிலவும் நீதானே


தன்முனைக்கவிதை

மதநல்லிணக்கம்
***********************
நல்லெண்ணம் இருந்தாலே
நல்லிணக்கம் உருவாகும்//
நையாண்டி செயலாலே
நற்குணமும் மாறிவிடும்//



அன்பில் நிறைந்தவளே


மனமென்னும் மாளிகையில்
    மார்கழியாய்த் திகழ்பவளே//
மங்காதத் தாரகையாய்
    மாலையிலே குளிர்பவளே//
 அன்பென்ற ஆணிவேராய்
        அடிமனதில் நிறைந்திருக்க//
ஆண்டவனின் படைப்பினிலே
            அதிசயமும் நீதானே//
 இதயங்களும் இயற்கையுமே
          இருவடிவ மூச்சாகி/
ஆழியான அன்புணர்வு
      ஆட்சியுமே நடத்திடுதே// 
ஊற்றெடுக்கும் காதலிலே
        உயிரூட்டும் உன்னன்பு//
நானிலத்தின் நாயகனாய்
       நல்லாட்சி நடத்திடவே//
காதல்மொழிப் பேசிடவா
    காற்றலையில் மிதந்திடவா//
அன்பென்ற மொழிப்பேசி
     ஆயுள்வரை வாழ்ந்திடுவோம்//