வாழ்வின் ஒளியே தீபாவளி


வாழ்க்கையிலே   வாகைச்சூட
வளர்மதியாய்  ஒளிபரப்பி/
வந்ததிந்தத் தீபாவளி
வழமையான தோரணையில்/

குடும்பத்திலே குதூகலமும்
 கூடியுண்ணும் பலகாரமும்/
இனிப்பான ஒளிபரப்ப
இன்பமாய்ப் பிறந்ததுவே/

இருளென்ற சிந்தனைகள்
இதயத்திலே குடியிருக்க/
இறையுணவில்  விரட்டிடவே
இன்பவொளி மலர்ந்ததுவே/

நற்குணங்கள் உள்ளவனாய்
நானிலத்தில் வேடம்போடும்/
நரகாசூரனை அழித்திடவே
நந்தவனமாய் பூத்தாளிங்கே/

செல்வங்கள் பெருகிடவே
செழிப்புடனும் வாழ்ந்திடவே/
ஐப்பசியின் திங்களிலே
ஐயம்நீக்க உதித்ததுவே/

தீபாவளி என்றாலே
தீவினைகள் நீங்கிவிடும்/
தீபவொளி அழகாலே
நல்வினைகள் பெருகிவிடும்/

அரக்ககுணம் நீக்கிடவே
அவதரித்த தீபமகள்/
அனைவரையும் காத்துநிதம்
அகந்தையினை அகற்றிடுவாள்/

வாழ்வின் ஒளியே தீபாவளி
வசந்தகால ஞானவொளி/
வாத்தியாரைப்போல இனி
உணர்த்திடுமே நல்லவழி/

ஹைக்கூ

உடைந்த கண்ணாடியில்
உள்ளே தெரிகிறது
வறுமையின் நிழல்



ஹைக்கூ

இரவு மழை/
சுவாரஷ்யமாக நகரும்/
தூக்கத்தில் கனவு/