உள்ளம் தேடுதே



இதயத்தின் காதலை என்னவள் இயம்பிட/
இமைகளின் இசையை இன்பமாய் இணைத்திட /
உதயமான பாடலை உள்ளன்பு உணர்த்திட/
உணர்வுகளின் உருவை உள்ளம் தேடுதே/

ஏழையின் குடிசை/ எட்டிப் பார்க்கிறது/ அவரைக்கொடி/


வைகறை இன்பம்

குயிலின் நாதம் கும்மிருட்டை கலைக்க/
வயலின் ஓரம் வான்மதியும் கடக்க/
தையலின் உணர்வில் தைத்த மனதோ/
வைகறை பொழுதில் வசியம் செய்ததே/

கதிரவனின் வருகை காதலை அலங்கரிக்க/
கற்பகச் சோலை ஊடலை தடம்பதிக்க/
மௌனமொழி பேசும் மன்மத பொழுதில்/
மங்கல கீதம் பாடும் நேரமிது/

இன்பத்தில் எல்லை இரண்டற கலக்க/
இல்லாளின் சொல்லை இன்புற கேட்க/
இதயத்தின் இன்னிசை இனிதே ஒலிக்க/
இளமையின் அகவை கரையும் கணப்பொழுது/

பறவைகள் ஒலியும் பரவையின் அலையும்/
பாசத்தின் பிணைப்பை படமோ பிடிக்கும்/
பான்மையின் வரவும் பழகிய இரவும்/
வாலிபக் கனவே வைகறை இன்பம்/





நதிக்கரை /
அங்குமிங்கும்  நகர்கிறது/
வானத்து மேகம்/

தன்முனைக் கவிதை

வள்ளுவரும் வாசுகியும்/
இணைபிரியா இல்லறத்தார்/
இயல்பாகவே இயம்பினார்
இருவரியில் திருக்குறள்/





கடல் வாழ்க்கை

பறவைகள் பறக்கும் வான வீதியிலே/
பரவையில் அசைப்போம்
துடுப்பின் கைகளிலே/
குடும்பத்தின் சுமையை
மனதில் சுமந்தே/
கொத்து கொத்தாய்
மீன்பிடிப்போம் நிதமே/

மனையின் காதல்
மனதில் மிதக்க/
கடலின் காதல் 
நாசியில் கலக்க/
உயிரை மாய்த்து
வயிற்றை நிரப்பி/
வணிகம் செய்யும்
வாலிபம் யாமே/

மக்கள் நினைப்போ
மன்னவன் மீது
மன்னவன் நினைப்போ
மக்கள் மீது/
அலைகளைப் போலே
அசைந்து வந்து/
அன்றாட வாழ்வை
கடக்குது இங்கே/

கடலின் வாழ்க்கை கரைசேரும் வரை/
கர்ணனின் வாழ்வோ கொடை வழங்கும் வரை/
உடலின் வழியே
ஒட்டாத உயிராய்/
நலமாய் வாழ
நாணயம் தருமே/