காடு வெளஞ்சென்ன மச்சான் - நமக்குக் கையும் காலுந்தானே மிச்சம்



பெண்:
கனவுகள் பல நீயும் கண்டு
நினைவுகள தெனம் நெஞ்சுல சுமந்து
நித்தமும் வயலுக்கு போற மச்சான்
சித்தமும் மகிழ்ந்து இருந்தாயே மச்சான்
காசுபணம் தேடி நாமும்
கல்யாண வேற நடத்த முன்னே
வெறுங்கையா நீயும் இருக்குறீயே
வேதனையில் கண்ணீர் வடிக்கிறீயே

ஆண்:
சேர்த்த பணத்த எல்லாத்தையும்
செலவு செய்ய மனசுவச்சி
அள்ளிப் போட்டேன் அறுவடைக்கி புள்ள
அத்தனையும் வீணாப் போச்சி புள்ள
செட்டியார்க்கிட்ட கடன வாங்கி
கெட்டியா புடிச்சி வேலைய தொடங்க
நேர்மறை எண்ணம் விளையுற மாரி
நிறைவான வார்த்த சொல்லு புள்ள

பெண்:
கவல ஒன்னும் வேணா மச்சான்
கடவுள் தொண இருக்கு மச்சான்
நெஞ்சுல தைரியம் வளத்துகிட்டா
நிம்மதி தானா வந்திடும் மச்சான்
கையுங் காலுங் மிச்சந்தானே
பையும் நாளும் நெரையும் தானே
ஊக்கத்தோட உழைக்கப் பாரு
தேக்கா நானும் இருக்கேன் தேனு

ஆண்:
ஊக்கந் தந்த தேக்கு மரமே
உந்தன் வாக்கு போதுமெனக்கு
கனகதாரா பாட்டுப்பாட
கனகம் பொழிவார் கடவுள் நமக்கு

பெயர்-காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

0 comments:

Post a Comment