ஹைக்கூ


நிலாமுற்றம் கவியரங்கம்

https://m.facebook.com/groups/1695984020630329?view=permalink&id=2610247919203930

ஹைக்கூ


ஹைக்கூ


நிலாமுற்ற கவியரங்கம்-198





















தமிழ் வணக்கம்
*****************முத்தமிழ் சித்திரமே
முழங்கிடும் வெண்சங்கே
சித்திரப் புதுத் தேரே
சிந்தனையின் கனிச்சுடரே
எத்திக்கும் ஒலித்திடுமே
இன்பமழை பொழிந்திடுமே
அன்னைத்தமிழ் உந்தனையே
அடியேனும் மகிழ்வாய் வணங்குகின்றேன்

தலைமை வணக்கம்
****************************
தமிழின் சுவை அறிந்தவரே
தனித்துவ திறனால் மிளிர்பவரே
இருவரி பாடிய வள்ளுவரே
இருந்தால் திகைக்க செய்பவரே
தீந்தமிழ் அழகில் கலந்தவரே
திடமாய் நயமாய் கவியுரைப்பவரே
அன்பால் ஈர்த்த அருந்தமிழே
பண்பால் சேரந்த பாவலரே
உந்தனுக்கு எந்தன் எண்ணத்தாலே
ஒரு கோடி வந்தனம் செப்புகிறேனையா

அவை வணக்கம்
***********************
அவைதனிலே வீற்றிருக்கும்
அன்புத்தமிழ் உறவுகளே
கன்னல் மொழி சுவைத்திடவே
காத்திருக்கும் பெரியோரே
விழிகளுக்கும் செவிகளுக்கும்
விருந்துபடைக்கும் கவியோரே
அத்தனை செம்மொழி உயிர்களுக்கும்
அடியேனின் கோடி வந்தனங்கள்

கவிதைக்கு தேவை
சொல்நயம்
****************
சொல்லின் பொருளை சூட்சுமாய் பாடிடவே
சுந்தரத் தமிழும் இனிதாய் கலந்திடவே
எண்ண ஓலையில் இன்பம் பரப்பிடவே
வண்ண மலர்களே வாயுரைக்கும் சொல்லாகும்

மாந்தரின் மனமோ நாளும் மகிழ்திடவே
மந்திரச் சொல்லால் சந்தமும் முழங்கிடவே
தூவிய வார்த்தைகளோ துள்ளிசை பாடிடவே
ஆழமாய் பதிந்த ஆணிவேராய் ஆகிடுமே

அன்று முதல் இன்று வரை
ஆன்றோர் உரைத்த நம் மொழியில்
பாலும் தேனும் கலந்தாற் போல
பாவலர் சொல்லாய் பவனி வருகுதிங்கே

சொல்லின் நயமே சிறப்பு என்போம்
சொல்லவே விளங்கும் இதுதானென்போம்
தெள்ளுத் தமிழிலால் கவி பாடிடுவோம்
செம்மொழிப் பலனை உலகில் உணர்த்திடுவோம்

கவிமழை யான் பொழிய
களமமைத்த நிறுவுனரே
தனித்தழிலால் கவிபாடும்
தார்மீக தலைமையாரே
பாவினிலே நானுரைத்த
கவிப் பாகுதனை சுவைத்தோரே அவையோரே
அனைவருக்கும் அன்புத்தமிழின் நன்றியையா
அடுத்த வாரம் மீண்டும் சங்கமிப்போமையா
ஆண்டவனும் அருள்மழை பொழிவாரையா
நன்றி வணக்கம்

ஹைக்கூ

கிராமிய பூசையில்/
விபூதி தரித்து நிற்கிறது/
பலி கொடுக்கப்படும் கடா/


அம்மை நோயால்/
அவதிப்பட்டு கிடக்கிறது/
தேயிலைச் செடி/

வீசிய காற்றில்/
மெதுவாக தொட்டுச் செல்கிறது/
திடீரென வந்தச் சாரல்/
 


மாலைநேர வேலையில்/
மனதை வெகுவாக கவர்கிறது/
வளைந்திருந்த வானவில்/


குளிர்கால பயணத்தில்
மேலெழுந்து நிற்கிறது
கையிலுள்ள முடிகள்

சிரித்தாலே இனிக்கும்


குருதியின் குதூகலம்/

குடும்பத்தில் கும்மாளம்/
மகவையின் மாநகரம்/
மங்கலத்தின் நிறைவகம்/
தேனகத்தின் தேனாமிர்தம்/
தெருவெங்கும் ஆரவாரம்/
சின்னவளின் ரீங்காரம்/
சிரித்தாலே இனித்திடும்/

முதற்சொல் கவிதை-கோயில்


கோயில் உணர்த்தும் கோபுர தரிசனமே
குவலய வாழ்வின் குன்றாத செல்வமே
மனதினில் பதிந்த மங்கல கருவறையே
மறுமையிலும் நீயே எந்தன் திருமறையே

ஹைக்கூ

குளிர்கால பயணத்தில்
மேலெழுந்து நிற்கிறது
கையிலுள்ள முடிகள்


உனக்காகப் பூத்திருக்கின்றேன்..



மொட்டில் உறங்கும் தேன் துளியாய்
முகமனுக்கு காத்திருக்கும் விருந்தோம்பலாய்
மார்கழி குளிரின் மன்மத ராகமாய்
மாமனே உன்னை மனதில் பதித்தேனே

கல்யாண வீட்டில் காத்திருக்கும் பாலும்
முதலிடம் பிடிக்கும் முக்கனி ஒன்றும்
எதிர்கால வாழ்வின் தத்துவ நிலையை
இரட்டை அர்த்தமாய் இயம்புதே இங்கே

பிஞ்சிலே மலர்ந்த வஞ்சியாய் நானும்
பேதமை அறியா நெஞ்சிலே நீயும்
தங்கமாய் உதித்த காதல் சுடரே
கட்டிளம் பாடும் கானம் கேட்கலையோ

பூவை மொய்க்கும் வண்டினமாய்
தேனைக் குடிக்கும் காவலனாய்
உன்னை நாடும் காரிகையை
திண்ணை தேடி வருவதெப்போ

காலங்களும் ஓடி மறையும்
கண்ணுக்குள்ளே காதல் உறையும்
வாடிப்போகும் முன்னே வந்து
வசந்த காற்றை நுகர்ந்து விடு

எண்ணில்லா வாசனையை
ஈர்க்கும் மலரோ நானல்ல
அனிச்சை மலராய் காத்திருக்கேன்
துணிச்சலாய் நீயும் தூக்கிச்செல்லு


நினைவெல்லாம் நீயே


என் வாழ்க்கைச் சோலையில் மலர்ந்தவளே

இல்லற சுகந்தம் இனிதாய் வீசியவளே
சொந்த உறவில் பந்தமாய் நுழைந்தவளே
சுந்தரக் கிளியே சூசகமாய் உலாவுகிறாயே

கனவிலும் நீதான் நினைவிலும் நீதான்
கந்தனின் வள்ளியாய் காசினியும் நீதான்
உணவிலும் நீதான் உணர்விலும் நீதான்
வாசகமும் நீதான் வசந்தமும் நீதான்

உயிரின் காதலாய் ஊடுருவும் தேவதையே
தயிரின் வாசமாய் தாகம் தனித்தாயே
உந்தனது நினைவாலே உலாவும் மாருதமாய்
எந்தனது நினைவினிலே எல்லாமே நீதானே

ஹைக்கூ

இறுதிக் காலம்/
பின் தொடர்ந்தே வருகிறது/
மரண பயம்/

இணைத்தின் வாசல்



உடலெல்லாம் இரத்த ஓட்டம்

ஒரு நாளும் பார்க்காத கூட்டம்
எப்போதும் உன்மீது நாட்டம்
இதுவே என் பூந்தோட்டம்

காலத்தின் தேவையிலே
கடுகதியாய்
பிறந்தவனே
உன்னை பார்த்து கற்றதனால்
உலகில் மிளிரும் தங்கம் ஆனேன்

கல்லாருக்கு தெரியாது
கற்பது எப்படி உன்னிடமென்று
நல்லார் உலாவும் பந்தியில்
நானும் முதலிடம் பெற்றேன் அன்பே

கல்விச்சாலை சென்றதுண்டு
கரிசனையோடு கற்றதுமுண்டு
ஏட்டுசுரக்காய் கரிக்கு உதவாதென்று
எத்தனையோ பேர் சொன்னார்கள் அன்று

அத்தனை பேரும் சொன்னதையெல்லாம்
அடிமனதில் பதியமிட்டு
உந்தன் விதையால் பயனடையும்
ஊர்க்குருவி நானன்றோ


தீயவைகளை கண்டு
இங்கே தித்திக்கும்
வாலிப கூட்டம்
நல்லதை கற்றுக்கொள்ள
நல்மனமும் இல்லை இங்கே

வாழ்வுதனின் தத்துவத்தை
வசிய செய்ய ஆசைப்பட்டு
உந்தன் காலடியில் சரணடைந்து
ஓராயிரம் விடயம் கற்றோம் யாமே

பல்கலைக்கழகம் நீதான் எனக்கு
பகுத்தறிவும் கலந்த மிடுக்கு
சிவனின் கிருத்தியமும் கிருபை நமக்கு
கிடைத்ததாலே நல்ல அறிவு பெருக்கு

ஹைக்கூ


ஹைக்கூ

ஒளிரும் விளக்கு
பிரகாசமாய் இருக்கிறது
குழந்தையின் முகம்.

சீரும் சிறப்பும்

என்னுயிரே
இல்லறத்தின் நறுமணமே/
இனிய வாழ்வின் தனியழகே/ எந்தன் பாதியில் நீ கலந்து/
சொந்தம் சுமக்கும் சுந்தர துலாபாரம் நீயடி/





தற்கால அரசியலை தழுவிய ஹைக்கூ சில






1. ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல்/
பாதுகாப்பாகவே இருக்கிறது/
மேடைப்பேச்சி/

2.வாக்கு பதிவு/
குறையாமலே தொடர்கிறது/
சுட்டுவிரல் மை/
3.தேர்தல் பிரசாரம்/
சூடு பிடிக்கிறது/
பொய் வாக்குறுதி/
4.வாக்களிப்பு நிலையம்/
அமைதியாக இருக்கிறது/
கதைக்க முடியாத ஊமை/

5.
உலங்கூர்தி வந்ததும்/
பின்னோக்கி செல்கிறது/
சிறுபராய காலம்/

ஐக்கூ

கொழுந்து கூடைக்குள்/
தேடிக் கொண்டே இருக்கிறார்கள்/ 

வரலாற்று முகவரியை/

உலங்கூர்தி வந்ததும்/ 

பின்னோக்கி செல்கிறது/ 
சிறுபராய காலம்/

உன்னால் ஒரு மயக்கம்


கட்டிளம் பருவத்திலே
காதலை சுமந்தோமே
காதலித்த பின்னாலே
கனவுகளில் கலந்தோமே
பதினைந்து நிமிடத்திலே
பதியமான வாரிசுதனை
பார்த்திடவே நாளும்
தவம் கிடந்தோமே
காதலின் அடையாளமா இது
இல்லறத்தின் வேதமா அது
வசந்தக்காற்று வாசலில்
நின்று கொண்டு
சதா ரனமான வாழ்வுதனை
சாதாரணமாக்க கேட்டதிங்கே
மறுமொழியும் சொல்லாமல்
மயங்கி நின்றேன் உன்னாலே
இத்தனையும் கடந்து
இல்லற மழையில் நனைந்து
இன்ப ஊஞ்சலில் ஆடியபோது
ஒவ்வொன்றாய் நானும் மறந்தேன்

#ஹைக்கூ

#ஹைக்கூ _ஒரு சின்ன அறிமுகம்..
ஹைக்கூ பலரையும் கவரும் எளிய கவிதை வடிவம்.
மூன்று வரிகளில் பல விசயங்களை பல கோணங்களில் வெளிபடுத்தி நகரும் ஆற்றல் கொண்டது ஹைக்கூ.
மூன்று வரிகளில் முதலிரண்டு வரிகள் ஒரு கூறு..ஈற்றடி ஒரு கூறு..கவிஞன் முதலிரண்டு வரிகளில் ஒரு கருத்தினைக் கூற வந்து...வாசகன் எதிர்பாராத ஒரு ஈற்றடியினைத் தந்து கவிதையை நிறைவு செய்தால்( இவ்விடத்தில் முதலிரண்டு வரிக்கான கருத்து சிதைந்து புது கருத்தும் கவிதையில் மலர்ந்து விடும்)

அது ஹைக்கூ.
சமீபத்தில் 1.11.2018 அன்று நடந்த ஹைக்கூப் போட்டியில் வெற்றி பெற்ற ஒரு ஹைக்கூ..
அழகான சிலை
அலைமோதிக் கொண்டிருக்கிறது
இங்கு முதல்வரி ..அழகான சிலை என வருகிறது..அந்த சிலை எதுவாகிலும் இருக்கலாம்..அழகிய பெண்ணுடையதாகவோ..விலங்கு..பறவை..கடவுள் என எந்த ரூபத்தை தாங்கியும் அந்த சிலை இருக்கலாம்..
இரண்டாவது வரி...அலைமோதிக் கொண்டிருக்கிறது ..என்றவுடன் படிக்கும் வாசகனுக்கு..ஓ..கடலில் நிறுவப்பட்ட சிலையாக இருக்கும்..அதனால் தான் அலைமோதிக் கொண்டிருக்கிறது என எண்ணத் துவங்குவான்..ஆனால்..
கவிஞரோ..ஈற்றடியில்..
திருடியவனின் மனது..! என முடிக்கிறார்.
ஆக..அலைமோதிக் கொண்டிருப்பது..திருடனின் மனதாகி..வாசகனின் முந்தைய எண்ணத்தை தவிடுபொடியாக்கி விடுகிறது..ஆம் நண்பர்களே..ஹைக்கூ இத்தகைய மாயாஜாலம் செய்து மனதை மயக்கும் ஒரு கவி வடிவம்..இதனை சற்றே உள்வாங்கி நீங்கள் எழுதத் துவங்கினால்..ஹைக்கூவும் எளிதாய் வரும்.
இந்த கவிதையின் சொந்தக் காரர்..காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா..அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்..
அழகான சிலை
அலைமோதிக் கொண்டிருக்கிறது
திருடியவனின் மனது..!
_ காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா.
#அனுராஜ்..

மாமனே ஒன் நெனப்புதான்

மாமனே ஒன் நெனப்புதான்
மனசுல புகுந்து வாட்டுதடா
காதலிச்ச நேரத்துல
கருத்த பாலத்து வீதியில
பாசமழ பொழிஞ்சி நாமும்
நேசவழி தொறந்தோமே
காதலிச்ச காலத்துல
காட்சியெல்லாம் நீயாயிருந்த
தாலி கட்டின பின்னால
தட்டான்பூச்சா பறந்துப்போக
ஒன்ன நெனச்ச ஏமனசு
ஊசலாடிய தனிமரமா
நெனப்பு மட்டுமே மாறாம
நெசமா காதல தேடுதிங்க

ஹைக்கூ


தமிழா எழுவது எப்போது


வீழ்ந்து கிடக்கும் வீர மண்ணில்

விதைத்தோம் தமிழ் விதைகள் அன்று
விருட்சமாகி நிழல் தரும் முன்னே
போர்களமாகிப் பொய்த்துப் போன தேனோ

அநியாயம் கண்டு அதிர்வை ஒழித்து
நியாய மலையை நெஞ்சில் அமைத்து
மறவன் என்ற தமிழை வார்த்து
மண்ணிலே நீயும் செயித்து காட்டு

பிறப்புகள் எல்லாம் ஒரு வகுப்பு
பிரிவினை இல்லா உயிர்த் துடிப்பு
தமிழின் தடமாய் களம் அமைப்பு
தனித்துவமே நமது கடும் உழைப்பு

வானத்தை கண்டு நாம் பயந்தால்
வரும் மழையைத் தாங்குவது யார்
அருகம்புல்லாய் மீண்டும் உயிர் பெற்று
தளிராய் தமிழா எழுவது எப்போது

முகம் காணா நட்புகள்

அகமும் முகமும் அருவமாய் கலந்து
ஆழ்மனதில் அன்பாய் பதிந்து
சிந்தனை வடிவில் வளரும் நட்பே
சிந்தையில் மலர்ந்த அழியா கற்பே
தீந்தமிழின் சுவைதனை
செவ்வனே யானும் சுவைக்க எண்ணி
முகம் காணா நட்புகளுடன்
அகம் குளிர ஆசைப்பட்டேன்
வார்த்தைகளில் நிதம் பிறந்து
வண்ணத்தமிழால் காதில் நுழைந்து
தென்றலாய் வீசும் தேனினமே
தெவிட்டாத அன்பின் மறுதோற்றமே
அகிலத்திலே தடம் பதித்த
எத்தனையோ உறவுகளும்
நித்தமும் கவிபடித்து
நீண்ட பயணம் செல்லுதிங்கே
பௌர்ணமியின் ஒளியினிலே
பாசாங்கு காட்டும் காதலரே
பாசத்தின் மொழியறிய
பாசமழைப் பொழிய வாருங்களே

ஹைக்கூ

இருட்டிய பொழுது
இடையில் பிரிந்து செல்கிறது/
கூடவே வந்த நிழல்/

ஒற்றை ரோஜா




உறங்காத இரவுகள்


வாலிப உணர்வு வாசலில் கோலமிட/
வயதின் தாகமோ
மெதுவாய் மோகமிட/
தென்றலின் தீண்டலாய்
தேகத்தில் நுழைந்தவளே/
சேற்றிலே மலர்ந்த
செந்தாமரை நீயடி/ இலைதனிலே
ஒட்டிக்கொள்ளா இருதுளியாய் யாமிருக்க/
இரவுகளின் பசிகளுக்கு
இனிமை தர யாருமிலர்/
உன்னினவை சேமித்தபடி
ஒவ்வொரு நொடியும் கழிகையிலே/
உறங்கா இரவுகளை
உடனே மீட்டிக்கொடு/

ஐக்கூ


4ஆம் ஆண்டுவிழா பாடல் போட்டி - 1 பாடல் : காற்றின் மொழி



தலைப்பு-வாழ்வின் தேடல்
*************************************
பல்லவி:

வாழ்வின் கனி சுவையா சுமையா
மீனின் வழி கடலா திடலா
மடலின் வரி சிலையா வலையா
தேடல் இனி மதியா விதியா

தமக்கையின் தொனிகள் தெரிந்துவிடில்
தம்பியின் பணிகள் வேறுயில்லை
உதயத்தின் உளிகள் மழுங்கிவிடில்
புனிதர்க்கு தொழிலே சேவையெல்லை

வாழ்வின் கனி…

சரணம் 1:

தோற்று கோரும் தூது விதிகள் மதியாது
கூடல் கூசும் மாது வழிகள் அறியாது
தாயின் வீட்டைக்காண தவமும் கிடையாது
பெண்கள் தேடும் வாழ்க்கை பயமும் நுகராது
மனதிற்பதியும் மாமனுக்கு பருவம் மீட்ட விடியாது
தேடல் கூடும் வலியெல்லாம் சொற்பப் பாட்டில் விளங்காது

தமக்கையின் தொனிகள் தெரிந்துவிடில்
தம்பியின் பணிகள் வேறுயில்லை
உதயத்தின் உளிகள் மழுங்கிவிடில்
புனிதர்க்கு தொழிலே சேவையெல்லை

வாழ்வின் கனி…

சரணம் 2:

தென்றல் தீண்டும்போது தீயும் அணையாது
திங்கள் நீந்தும்போது வலியும் உணராது
உரித்த வாழைத் தோலால்
தண்ணீர் தெளிவாகும்
பெண்மை கீதை நூலால்
வானம் விழியாகும்
வாழத் தெரிந்த மனிதனுக்கு வாக்குவாதம் ஆகாது
சோகம் நீழும் ஆயுளுக்கு சொர்க்கம் கூட வடிவேது

தமக்கையின் தொனிகள் தெரிந்துவிடில்
தம்பியின் பணிகள் வேறுயில்லை
உதயத்தின் உளிகள் மழுங்கிவிடில்
புனிதர்க்கு தொழிலே சேவையெல்லை

வாழ்வின் கனி…

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
23.08.2019

காடு வெளஞ்சென்ன மச்சான் - நமக்குக் கையும் காலுந்தானே மிச்சம்



பெண்:
கனவுகள் பல நீயும் கண்டு
நினைவுகள தெனம் நெஞ்சுல சுமந்து
நித்தமும் வயலுக்கு போற மச்சான்
சித்தமும் மகிழ்ந்து இருந்தாயே மச்சான்
காசுபணம் தேடி நாமும்
கல்யாண வேற நடத்த முன்னே
வெறுங்கையா நீயும் இருக்குறீயே
வேதனையில் கண்ணீர் வடிக்கிறீயே

ஆண்:
சேர்த்த பணத்த எல்லாத்தையும்
செலவு செய்ய மனசுவச்சி
அள்ளிப் போட்டேன் அறுவடைக்கி புள்ள
அத்தனையும் வீணாப் போச்சி புள்ள
செட்டியார்க்கிட்ட கடன வாங்கி
கெட்டியா புடிச்சி வேலைய தொடங்க
நேர்மறை எண்ணம் விளையுற மாரி
நிறைவான வார்த்த சொல்லு புள்ள

பெண்:
கவல ஒன்னும் வேணா மச்சான்
கடவுள் தொண இருக்கு மச்சான்
நெஞ்சுல தைரியம் வளத்துகிட்டா
நிம்மதி தானா வந்திடும் மச்சான்
கையுங் காலுங் மிச்சந்தானே
பையும் நாளும் நெரையும் தானே
ஊக்கத்தோட உழைக்கப் பாரு
தேக்கா நானும் இருக்கேன் தேனு

ஆண்:
ஊக்கந் தந்த தேக்கு மரமே
உந்தன் வாக்கு போதுமெனக்கு
கனகதாரா பாட்டுப்பாட
கனகம் பொழிவார் கடவுள் நமக்கு

பெயர்-காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

ஐக்கூ


பொறுமை இழந்தால் வெறுமை


மொட்டு மலர் காய் கனியாய்/
முழுநிலையின் பொறுமை உணர்ந்தே/
உன்னதக் குணத்தால் பூமிதனிலே/
தின்னமாய் மிளிரும் கனகமிங்கே/
புகழைத் தேடும் மானிரிடையே/
இகழும் நிலை மாறிடவென்று/
நிலத்தைப்போல பொறுமைக் காத்து/
வளத்தைப் பெருக்கி வாகைச் சூடு/
பொறுமைத் தாயே நீயும் வந்திடு/
வெறுமை நிலையை விரட்டித் தந்திடு/

தலைப்பு:வணங்குகிறேன் தாயே


பாசத்தையும் பாலையும் ஒன்றாய் கலந்து
பத்துத் திங்களாய் தவமும் கிடந்து
உதிரத்தின் ஊடே உடலைத் தந்தவளே
உத்தமியே பத்தினியே உன்னை வணங்குகிறேன்


வறுமையை தினம் பொறுமையாய் கற்றுணர்த்தி
சிந்தையில் செதுக்கிய சிலையாய் ஆற்றுப்படுத்தி
பண்பாய் பட்டைத் தீட்டிய பார்வதிக்கு
இதயச் சேயாய் இருகரம் கூப்புகின்றேன்

சுவாசம் எனும் சுந்தரக் காற்றை
சுக்கில வடிவில் கருவில் ஏற்றி
ஒளித் தந்த உயிருள்ள தெய்வமே
ஒவ்வொரு நொடியும் உன்னைப் பணிகின்றேன்

மண்தரையில் மலரும் தங்கம் போலே
கருவறையில் உலகைக் காட்டியத் தாயே
அட்சயபாத்திரமே நீதான் அழகுச் சிலையே
ஆயுள்வரை உன்னை வணங்குகிறேன் அம்மா

#கவியுலகப்_பூஞ்சோலை_4ஆம்_ஆண்டு_விழா_பாடல்_ #போட்டி_2 பாடல் : ஆராரிரோ பாடியதாரோ

தலைப்பு-மழைத் தேடும் மானிடன்
***********************************************
பல்லவி:

கார்மேகமே தேடியநீரே நீங்கி போகலாமோ
ஆறோ வேரோ குளிராதோ பாரோ
வான் மேகமே தினம் கை நீட்டவே
பார் எங்குமே தனி சந்தோசமே

கார்மேகமே தேடியநீரே நீரே…

சரணம் 1:

மரம் வெட்டும் மானிடா
மதியைத் தீட்டடா
மழைக் காலை ஊன்றவே
மரத்தை கூட்டடா
காட்டை விட்டு ஓடிடும் விலங்கு முன்னே
கவலையில் மிதக்குதே மரக்கன்று கண்ணே
பொன் பூமியே நாளும் குளிர மேக நாதனைத் நாடு
ராவணனத் தேடு

கார்மேகமே தேடியநீரே நீரே…

சரணம்:2

மழை வேண்டிப் பாடவே
மண்ணும் வாழ்த்துமே
விதையோடு வாழவே
பாரும் சீதமே
கூட்டில் கூடும் குருகுக்கு வழியில்லையோ
நீரூற்றி தேற்றியே வாழ்வூட்டலாமோ
நன்மை செய்யவே சாதகப் பறவையை நாளும் தேடிப்பாரு
கனகதாரம் பாடு

கார்மேகமே தேடியநீரே நீரே…

தாய்மையின் தியாகம்

குருவிகளின் குக்கியில் குடல்கள் சுருங்கிட
குவலயத்தில் எங்குமே இரைகளை தேடிட
தாய்மையின் பந்தமோ தரணியில் ஓங்கிட
சேய்களின் வாழ்வுக்காய் தியாகம் செய்யுதே

#நற்பண்புகளின்_பக்கம்_பிள்ளைகளை #அழைத்தல்





 பள்ளிக்கு நாமும் சேர்ந்து சென்றிடுவோம்
பாதையில் பாடல் பாடியே ஆடிடுவோம்
துள்ளிப் பாய்ந்திடும் வெண் முயலினமாய்
தூய சிந்தனைகளை நாளும் நுழைத்திடுவோம்
ஓடி ஆடி விளையாடிய நேரம்
ஒற்றுமை கீதம் பாடிய வாரம்
பாடி ஆடி வந்தப் பறவையாய்
பண்பாய் நடந்தே பாரில் மிளிர்ந்திடுவோம்
வகுப்பறையில் நித்தம் வசந்தம் வீசிடவே
வண்ணத் தமிழால் நல்லதை கற்றிடவே
எண்ணத்தில் நம்பிக்கை வளர சகாவே
இனிய மனதுடன் இன்றே வந்திடு

சான்றிதழ்


சலங்கை ஒலி கேட்குமா















காதலை நீயும் மனதில் சுமந்து/💚
காதலனை கவரும் சலங்கையும் அணிந்து/
நடந்து நடந்து வருகையிலே அன்பே/
அன்னமும் நடைபயில ஆவலோடு வந்திடுமே/
இதமான இனிய ஓசை மழை/
எங்கும் அழகாய் ஒலித்து பொழிகையிலே/
அகத்தில் பதிந்த அளவில்லா அன்பினை/
புறத்தில் உணர்த்திடும் புதுமையான சலங்கையோ/

ஐக்கூ


கலாம் கண்ட கனவுகள்






















ஐயா கண்ட கனவுகள் பல/
அதில் ஆயிரம் சுவடுகள் தொட/
ஆழ்மனதில் பதிந்த நினைவுகளை கோர்த்து/
அற்புதமாய் பல அறிவியல் படைத்து/
இளைஞர்களின் எதிர்காலம் இனிமைப் பெற/
எப்போதுமே கண்டாரே இலட்சிய கனவு/
அவ்வப்போது தோன்றிய கானல்நீரல்ல கனவு/
சிகரம் தொட்டிடும் சிந்தனைக் கனவு /

எரியும் நெருப்பு/
இருட்டாகவே இருக்கிறது/
ஒளிவட்டம்





















ரயில் பயணம்/
முடிவுறாமலே நிறைவடைகிறது/
புத்தக வாசிப்பு
                                         
                                                                 




































                                                                

ஐக்கூ

எரியும் நெருப்பு/
இருட்டாகவே இருக்கிறது/
ஒளிவட்டம்

திறந்த கோழிக் கூடை/
மூடப்படாமலே இருக்கின்றன/
குழந்தையின் கண்கள்

ஐக்கூ

பாலை நிலம்/
பார்த்ததும் மனதை கவர்கிறது/
ஒற்றைச்செடி /

ஐக்கூ

தடியை கண்ட சிறுவனுக்கு/
உடனே வந்து விடுகிறது/
சிறுநீர்

எழுத்துக்களால் ஆயுதம் செய்வோம்














உணர்ச்சிகளை உள்ளத்தில்
ஊற்றெடுக்கும் அருவியாய்/
உண்மைதனை உலகறிய                                              
செய்யும் ஊடகமாய்/
உரிமையெனும் வேட்கைதனை
வென்றிடும்
எழுத்துக்களே/
பதியை வென்றிடும்
பக்குவமான
ஆயுதமே/
மாற்றத்தை மாற்றாது
மறவனாய் களமிறங்குமே/
ஒவ்வொரு நொடியும்
உள்ளத்திலே உலாவிடுமே/
ஊருக்கே உத்தமனாய்
சேவை செய்திடுமே/
உடலை அழிக்கும்
ஒரு  ஆயுதமுமல்ல/
இடரை பதிக்கும்
எழுத்துகளே ஆயுதம்/
ஆதிமுதல் இன்றுவரை
அவைதனிலே வலம்வரும்/
ஆக்கிரமிப்பு செய்திடும்
அற்சரமெனும் அசகாயசூரனே/
நாட்டைக் காக்கும்
இராணுவப்படையல்ல இது/
எண்ணத்தை தாக்கும்
எழுத்துப்படையே இது/
எழுத்துகளால் உண்டான
ஆயுதங்கள் பல/
இன்றும் கூட
துவம்சம் செய்து/
இ(எ)ம்மை காக்க
இறவாமல் வாழுதே

நேர்மை


நேரே வளர்ந்திடும் வாதுகளை
கூரையிட வெட்டும் மாந்தரிடையே
கேண்மை எனும் தேனெடுத்து
கிங்கினியில் ஊற்றி வைத்து
ஞாலமெங்கும் கீர்த்தி பரப்பும்
நண்பர்களின் நேர்மை வாழ்கவே


செய்யும் தொழிலை சிரத்தையுடனே
மெய்யும் மலர பூத்தால் தினமே
நன்மை நம்மை காதலிக்கும்
நம்மவர்க்கும் மகிழ்வு தானே பிறக்கும்

மெய்ப்பிரம் கலைந்து
பொழிந்திடும் மழைத்துளியே
மீலம் பார்த்து மெய்ச் சிலிர்க்கும்
நேர்மை பக்கம் விளைச்சல் துளிர்க்கும்

நேர்மறை சிந்தனைகள்
நின்மனதில் நாளும் உதித்தால்
நேர்மையெனும் பகலவனும்
நிம்மதி தர மறுப்பதில்லை

நல்வழி காட்டி வாழ்ந்த
நம்மவரிடையே நித்தம்
நேர்மையெனும் விதை விதைத்து
நேசமரம் வளர்த்திடுவோம்

தண்ணீர்


மலைதனில் ஊற்றெடுக்கும் மகத்தான தண்ணீரே/
மாந்தரின் தேவைகளை தீர்த்திடும் பன்னீரே/
நீயின்றி உயிர்கள் நிம்மதி அடையாது/
காடின்றி மழையும்
மண்ணில் பொழியாது/

யாழ்



இசையால் ஈர்க்கும் யாழ் ராகமே/
பசையாய் ஒட்டிய பரவச நாதமே/
ஓசையாய் உள்ளத்தில் ஊடுருவிய வேதமே/
காலத்தால் அழியாத காவிய மானயே/

கனாக்காலம்


கட்டுசோறு கட்டி தலையில் சுமந்து

கடகடவென கழனிப் பக்கம் விரைந்து
நெல்லுக்கு நீரை பாய்ச்சு முடித்ததுமே
நிறைவாய் உண்ட காலம் கனாக்காலமே

வான்மதி

மெய்ப்பிரத்தில் நீந்தி வளரும் வெண்ணிலாவே/
நுதலினிலே பதிந்து ஒளிரும் பெண்ணிலாவே/
சீதமதில் சேர்ந்து ஆடும் முழுநிலாவே/
சிந்தையெங்கும் மகிழுதடி  உன் வருகையாலே/

கிறுக்கல் #சித்திரம்



எழுதுகோலின் பெருமை அறியாப் பாலகனே/
கிறுக்கவே ஆசை கொண்டான் சுவரினிலே/
பிறந்ததே வண்ணச்
சித்திர உருவங்களே/
சிறந்ததே வருங்கால நம் செல்வங்களே/

மழலை உலகம்


மழலைச் செல்வங்களோடு மகிழ்வாய் ஒன்றுகூடி/

அழகிய பரவைதனிலே ஆனந்தமாய் நீராடி/
அந்திமாலை வேளையிலே ஆடிப்பாடி விளையாட/
குதூகலம் நிரப்பிடும் குழந்தைகள் உலகமே/

தனிமை

நினைவுகளை பரிசாய் கனவுகளில் தந்து/
உறவுகளை நீடிக்க பிரிவுகளை உணர்ந்து/
உன்னையே எந்நேரமும் மனதில் நுகர்ந்து/
உத்தமனாய் வாழ்வது தனிமையில் இனிமையே/

தலைப்பு-தாலாட்டு


ஓராட்டு கீதம் நான் இசைக்க/

உன் கண்களோ துயில் சுமக்க/
என் வேலைகளோ மீதி கிடக்க /
தாலாட்டு கேட்டு தூங்குடா கண்ணா

உழைப்பு



உருவமற்ற உன்னத கடின உழைப்பே/

உன்னை நேசிப்பதே எனது விருப்பே/
எதிர்கால வாழ்வில் இனிமை சேர்க்கவே/
என்னோடு கலந்தாயே
இன்னொரு மனைவியாய்/

தலைப்பு -கனாக்காலம்


கட்டுசோறு கட்டி தலையில் சுமந்து

கடகடவென கழனிப் பக்கம் விரைந்து
நெல்லுக்கு நீரை பாய்ச்சு முடித்ததுமே
நிறைவாய் உண்ட காலம் கனாக்காலமே

பௌர்ணமி நிலவு



சீதமான உடலோடு சிவக்காமல் வந்தாயே/

செந்தமிழ் வடிவாய் சீதேவியாய் கலந்தாயே/
உந்தனது வருகையாலேஉவகையும் தந்தாயே/
உள்ளத்திலே காதல் குளிர்ச்சியை பொழிந்தாயே/

சிந்தையில் சுமந்த தந்தை

#தியாக உணர்வை மனதில் சுமந்து
#சிசுக்களையே உயிராய் நினைந்து
காலத்தால் அழியாத #கற்பக விருட்சமே
#கனகராஜாவின் கருணைத் தந்தை

தனியே வாழ்வில் நீச்சலடித்து
தலைக்குனியா கம்பீரமாய் திகழ்ந்து
வாணியே நாவில் தவழ்ந்திட
#அமிர்தமாய் தமிழை நுகர்ந்திட
உயிரணுக்களுக்கு உயிரூட்டம் தந்த
உன்னத தெய்வமே #தகப்பனார்

#நகைச்சுவை பேசுவதில் நாகேசை தள்ளி
தாத்தாவின் செயல்களை #தமயனிடம் சொல்லி
கொஞ்சிப் பேசும் #பிஞ்சி உறவே
அறிவுத் #தந்தையே ஔசத மகவையே

விண்ணில் இருந்தால் #வீரமகனுக்கு ஆசி
மண்ணின் இருந்தால் #மகனுக்கு ராசி
எங்கிருந்தாலும் என்னை #தினம் பேசி
தங்கிவாழும் மனசே #அழகிய காசி

#தகப்பனார் என்பதோ தகப்பன் ஆனார்
#தத்துவம் சொல்லவே #மடலில் பதிந்தார்
#உண்மையான உணர்வை #உயரில் கலந்தார்
#உடம்பில் நுழைந்தே #நிமலனாய் பதிந்தார்

நினைக்காத நேரம் #நிலவும் மலரும்
மனைக்காக வீரம் தினமும் வளரும்
சிந்தையில் வாழும் அன்புத் தந்தையே
எ(இ)ன்றுமே வாழ்வின் #சுடரொளியே

அன்பென்றால்



அன்பின் அட்சயபாத்திரமானவளே
பண்பின் பாச கோர்வையானவளே
சித்தமெல்லாம் ரத்தம் நிரப்பி
சிறியதாய் பிம்பம் உருக்கி
காதலாய் வார்த்த திருமகளே

உயிரையும் உடலையும் கருவில் பூட்டி
வயிறையும் வாயையும் நிதமும் கட்டி
நினைவுகளும் கனவுகளும் அகத்தில் காட்டி
நிறையுணவாய் அன்பூட்டினாயே
எல்லையில்லா பாசம்
இனிதான பால் வாசம்
சிகரமெனும் உயிர் நேசம்
சித்தரித்தாயே முதல் சுவாசம்
உயிர்கள் வாழும் இவ்வுலகில்
ஒவ்வொன்றும் மாயைதானே
உன்னை மட்டும் கண்டேனம்மா
உண்மையான தெய்வமாக
தன் கவலையெல்லாம் மறந்து
என் நிலையை தினமும் உணர்ந்து
அன்பென்ற கோயில் கட்டி
அனுதினமும் பூசை செய்தாயே தாயே

சோலைக்குயிலே மாலையிடவா

சோலைக்குயிலே மாலையிடவா
மாலைவெயிலே மயங்கிடவா
அந்திமாலை நேரத்திலே
சந்திவெளி நடப்பவளே
உந்தனது இடையினிலே
குடம் ஊஞ்சலுந்தான் ஆடுதடி


உன்மேல பாசமெனக்கு
உடம்பெல்லாம் ஒட்டிக்கிடக்கு
நெத்தியில பொட்டு வைக்க
நேரங் குறிப்போம் வாவேடி பொன்னு

வைகாசி மாச திங்களிலே
மையல் பேசும் உன் விழியும்
காந்தமா மெதுவா இழுக்குதடி
கழுத்த நீட்ட வந்திடுடி

சொந்தம் பந்தம் ஒன்னா கூடி
சொகுசா வண்டியிலே ஆடிப்பாடி
பொன்னும் பார்க்க வாறோம் புள்ள
பொறுமையா நீயும் வந்திடு மெல்ல

அந்தநேரம் எல்லாம் கூடி
அம்சமா பேசி மகிழ்ந்திடவே
மாலைப்பொழுது வேளையிலே
மாலையிட நானும் வாறேன்

சோளக்காட்டு பக்கத்திலே
சோலியோட வெட்கத்திலே
வெட்கத்தோட நீயிருக்க
முக்காடு போட நானும் வாறேன்

சோலையிலே தனியா இருந்தா
பாலைவனமா மாறும் மனசு
மூனுமுடிச்சி போட்டாதானே
முடங்கி கிடக்கும் இளவயசு

மாலையிட நான் வரவா
காலையிலே தேன் தரவா
பானையிலே மிதக்கும் பதனிப்போல
பொங்குதடி என் மனசு

அட்சயபாத்திரம்

ஆசைகள் பல மனதில் நினைந்து
ஐயிரண்டு திங்கள் என்னை சுமந்து
கனவுகளில் கண்ட சிறு விம்பமே
கனகராஜா எனும் ஒரு கும்பமே

கிருஷ்ணனின் கிருபை நுதலில் பட்டு
கிருஷ்ணலீலா பிறந்தாளே முதல் சிட்டு
தங்கத்தில் உயர்ந்த  தங்க அம்மாவே
தவமிருந்து பெற்ற தங்கராஜா யான்தானே

இம்மையின் அழகை காணும் முன்னே
கருவறை வாழ்வை காட்டியவளே அம்மா
கலை ஆன்மீகம் கல்வி கவியென
எல்லாம் புகட்டிட என்னதவம் செய்தீரோ

சித்தமெல்லாம் முத்தமிட்டு பெற்றிடவே என்னை
சத்தமெல்லாம் இதயத்திற்கு  தந்தவளே அன்னை
பிறந்தபோது நானும் பேரின்பம் கொண்டாயே
கனகம் எனும் அர்த்தம் கோர்த்து
(கனக)ராஜாவென அழைத்து ரசித்தாயே

அன்பின் இலக்கணமான அட்சயபாத்திரமே
அப்பாவின் வழி நடத்திய இரத்தினமே
முத்தமிழ் வடிவத்தின் முதல் அகரமே
ஆலாபனம் பாடி மகிழ்வோம் இத்தினமே

#ஞாலமே #எதற்காக #நீ


ஈசன் பார்வதியின் அருள் பெற்று
இனிதே மலர்ந்த பெரும் உலகே
இன்னுமேன் வாழுகின்றாய்
இக்கட்டான நிலைதனிலே


ஆலயங்கள் அமைத்து அனைவரையும் அழைத்து
அமைதியை நாடிய மனங்களை எல்லாம்
சிதறிய துண்டுகளாய் சிதைத்தது ஏனன்று

ஒன்றும் அறியாத பாலகன் கூட
ஓடி ஆடி ஒன்றாய் செபிக்க
தேடி வந்த யமனை நீயும்
தெருவில் நிறுத்த மறுத்த தேனோ

பொறுமையிலே எண்மடங்கென
புலவர்களும் பாடியதுண்டு
புத்தம் புதிய நாள்தனிலே
குப்தனுக்கு நீயும் பயந்ததேனன்று

இனியும் எதற்காய் நீயும் இருக்காய்
எல்லோர் அகத்திலும் விடத்தை விதைத்தாய்
நல்லதை செய்திட நாட்கள் வேண்டுமா
உள்ளதை தேற்றிட வாழ்வும் மிளிருமா?

நாத்து நடப் போற மச்சான்


நாத்து நட போற மச்சான்
நாலு நாலா காணோம் மச்சான்
மூத்த பொண்ணு கல்யாணத்துக்கு
சேத்த பணம் அரிது தானே

ஆயிரக் கணக்குல செலவு செஞ்சி
அடுத்த வீட்டுல கடன வாங்கி
வேலையால விதைக்க வச்சி
வேர்வ சிந்த உழச்சோம் நாமே

சீதனும் கூட கேக்குறாங்க
சிக்கல மெதுவா கூட்டுராங்க
வயசு வந்த புள்ள நால
வரம்புக் கட்டவும் வேணுந்தானே

மழையும் நல்லா பொழிய வேணும்
மனசும் கூடவே குளிர வேணும்
கல்யாண நாளா எண்ணி எண்ணி
கணக்கு நாமும் போட வேணும்

பங்குனி மாச தேதி பாத்து
பாட்டாளிக்கெல்லாம் சொல்லிப் போட்டு
மாங்கல்யத்த மாப்ள கட்ட வேணும்
மகிழ்ச்சியில நாமும் மூழ்க வேணும்

ஆண்டவன் கண்ண தெறந்து பார்த்து
அருள்மழைய பொழிஞ்சாருன்னா
அறுவடையும் பெருகி போகும்
அத்தன பேருக்கும் வயிறும் நிறையும்

பரிசம் போட வருவதற்கு
பல மாசம் காத்துக்கிடக்கு
நாத்து நட்டு வெளச்சல் வந்தா
நாடறிய தேவய செய்வோம் மச்சான்

உயிர்த்த ஞாயிறு

கருணையும் அன்பையும்
கல்லறையில் சுமந்து/
கர்த்தரின் நாமத்தை
எந்நேரமும் நினைந்து/
சமாதானம் தேடி
வந்த சகோதரத்துவமே/
எதிப்பார்ப்போ இயமன்
அவதாரம் எடுத்து/
இத்தனை உயிர்களையும்
காவுக் கொண்டதேனோ/

ஐக்கூ

எரியும்  மெழுகுதிரிகள்
வெளிச்சத்திற்கு வருகின்றன/
காதல் தியாகங்கள்.

புதுக்கவிதை விருதுகவி

புதுக்கவிதை
**************
எண்ணத்திலே உதித்த வார்த்தைகளை
இன்புடனே கோர்த்து எடுத்து
யார்த்து பாடும் கவிநடையே
யதார்த்தம் உணர்த்தும் புதுக்கவிதை

பாமரர் முதல் பண்டிதர்வரை
பக்குவமான மொழிநடையில்
வாசித்து நாளும் பயனடையும்
வசந்தகவி இதுவன்றோ

உவமையும் உண்மையும் கோர்த்து
உத்திகளை ஏட்டில் பதித்து
சமூகம் விரும்பும் சந்தக்கவி
அங்கதமாய் ஒலிப்பது இக்கவியே

எதுகையு மோனையும் இதிலிருக்கும்
இனித்திடும் சந்தங்களும் மலர்ந்திருக்கும்
படிமமும் தொன்மமும் கலந்திருக்கும்
சிலேடையும் முரணும் சிறப்பளிக்கும்

இருண்மையும் கூடவே நுழைந்து
எல்லையில்லா நயம்தனை படைத்து
அத்தனையும் சங்கமிக்கும் திடலாய்
அழகிய வெளிப்பாடே புதுக்கவிதை

வாசிப்போருக்கு நன்மை அளித்து
வாஞ்சையுடன் மனதில் பதித்து
மாந்தரெல்லாம் மகிழ்வாய் வாழ
மகிமை அளிப்பது புதுக்கவிதையே

முழுப்பெயர்-பழனியாண்டி கனகராஜா

புனைப்பெயர்-காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

திகதி-07.12.2018

முகவரி-கோணக்கலை தோட்டம்,
காவத்தை பிரிவு,
பசரை.

இது எனது சொந்த படைப்பென்றும் வேறு படைப்புகளின் பிரதியல்லவென்றும் உறுதிமொழி அளிக்கின்றேன்

கையூட்டு


முகமூடிதனை அணிந்து கொண்டு
முழு உலகை ஆக்கிரமிக்கும்
சூசகமான கையூட்டே
சுகத்தை தந்தாய் தனியே புறப்பட்டே

எந்தவொரு வேலை செய்வதற்கும்
இனிமையாக உடனே பிறக்கும்
அந்தரங்கமான அசட்டு செயலை
அனைவரும் இங்கே கையூட்டென்போம்
மாயை நிரம்பிய வாழ்க்கையிலே
நோயை பரப்பிய சடப்பொருளாய்
எங்கும் வியாபிக்கும் விருட்சமே
இதுவே நாளை கிளை பரப்புமே
கல்வி விலையோ அதிகரிக்க
கயவர் கூட்டமோ நித்தம் பிறக்க
பிணியை தீர்க்கா வைத்தியனாய்
தனியே நின்று அழிக்கும் வியாதி
இம்மையில் நீயும் வளர வேண்டாம்
எல்லா நன்மையும் அழிக்க வேண்டாம்
எதிர்கால சந்ததியோ இன்புடன் வாழ
இன்றே மறைந்திடு இழிவான கையூட்டே

தாய்நாடு ************


தாய்நாடு என்றும் எம் தாய்வீடு
மூவின மக்களும் செறிந்து வாழும்
முழங்கும் சங்காய் என்றும் திகழும்
முத்தாய் விளங்குவதே இத்திருநாடு


உரிமையை உடனே கேட்டு பெற்றிட
சுதந்திர குருகாய் எங்கும் பறந்திட
இறைமையை தந்த இதயநாடாம்
இதுவே எமது சொந்த வீடாம்

உலகெங்கும் வாழும் உறவுகளிடையே
பாலமாய் இணைந்து பாசம் பிணைத்திட
குடியுரிமை அனுமதி வழங்கிய நாடாம்
கூட்டுறவால் ஞாலத்தை வென்ற நாடாம்

தொழிலை நித்தம் தூய்மையாய் செய்ய
தொந்தரவின்றி மனையோடு வாழ
நாம் வாழும் நாடே ஈழத்திருநாடு
உரிமை போராட்டம்
உச்ச நிலையை அடைகிறது
பேரினவாத ஆக்கிரமிப்பு

பாடல்: தை பொறந்தா வழி பொறக்கும்

தாய்ப்பாசம்
****************
பல்லவி
சேய் சிரித்தா தாய் மகிழும் சொந்தமே சொந்தம்
அன்பிருந்தா தேன் வடியும் சொந்தமே சொந்தம்…(2)
சேய் சிரித்தா…

சரணம்-1:
கருவினிலே பால் கொடுத்தாய் சொந்தமே சொந்தம்
இடுப்புவலி தான் பொருத்தாய் சொந்தமே சொந்தம்…(கருவினிலே)
வறுமையினை தோற்கடித்தாய் சொந்தமே சொந்தம்
வறுமையினை தோற்கடித்தாய் சொந்தமே சொந்தம்
வயிற்றினிலே எனை சுமந்தாய் சொந்தமே சொந்தம்
சேய் சிரித்தா …
சரணம்-2
தந்தையரின் சிந்தையாலே சொந்தமே சொந்தம்
மதிமழையோ பொழியுதமா சொந்தமே சொந்தம்…(தந்தையரின்)
சின்னவனின் திறமையிலே சொந்தமே சொந்தம்
எண்ணமெல்லாம் குளிருமம்மா சொந்தமே சொந்தம்…(சின்னவனின்)
சேய் சிரித்தா…
சரணம்-3
கலைஞனையே ஈன்றெடுத்தாய் சொந்தமே சொந்தம்
காசினியில் புகழ் நுகர்ந்தாய் சொந்தமே சொந்தம்…(கலைஞனையே)
வயித்தகட்டி வளர்த்தெடுத்தாய் சொந்தமே சொந்தம்
வயித்தகட்டி வளர்த்தெடுத்தாய் சொந்தமே சொந்தம்
வாழ்வதற்கே உயிர்கொடுத்தாய் சொந்தமே சொந்தம்…
சேய் சிரித்தா...

#அந்திப்பொழுதும் #அவளின் #நினைவும்

அந்தி சாயும் வேளையிலே/
மரத்தின் நிழல் தொடுகையிலே/
இருவரும் ஒன்றாய் கூடி அமர்ந்து/
இனியசொல் பகிர்ந்தோமடி/

தென்றல் வந்து தொட்டு பார்க்க/
தேவதை நீயோ தோளில் சாய/
எத்தனை சுகம் நம்மில்
மலர்ந்து/
இதயகீதம் மீட்டியதே/
நினைவுகள் என்றும் நிசமானவை/
நீயோ எந்தன் வசமானவள்/
எதிர்கால வாழ்வுதனை/
எதிர்ப்பார்த்த காலமது/
ஊடலும் மோதலும் ஒரு நொடியில்
தோன்றி மறையும்/
உண்மைகாதல் மட்டும்
உன் பெயரை சொல்லித் திரியும்/
கலாட்டா வந்த நேரமெல்லாம்
கண்ணியமாய் நாம் இருந்தோம்/
காலங்கடந்து போனதுமே
துரோகம் செய்தது ஏன் கிளியே/
சாயங்கால நேரத்திலே
தலைசாயும் சூரியனும்/
சத்தியகாதலை
பறைசாற்ற
சாகாவரம் பெற்றது அன்றே/
அந்தகால கால நினைவெல்லாம் /
ஆயுள்வரை தொடரும் கண்ணே/
நல்லெண்ணம் மலர்ந்திடவே/
அந்திமாலையில் பூத்திடு பெண்ணே/

காற்றுவெளி


அனைத்துயிரும் வாழ்ந்திடவே
அத்திவாரமான காற்றலையே
நீயின்றி எவ்வுயிரும்
நிம்மதியாய் வாழாதிங்கே

இதயம் மெல்ல துடித்திடவென்று
இன்னிசை நாதமாய் நீ புகுந்து
சந்தோச வாழ்வில் பயணித்திடவே
சகலருக்கும் வாழ்வு கொடுத்தாய் தாயே
இயந்திர வாகனங்கள் ஏராளம் உருவாக்கி
இயற்கையின் வெளியில் புகைதனை கக்கி
எண்ணற்ற நோய்களை பரப்பும் திட்டம்
இனியும் வேண்டாம் உனது நாட்டம்
நல்ல மரங்களை நாளும் நேசித்து
செல்ல வாரிசுகளாய் கூடி அரவணைத்து
நல்ல காற்றை நாசினில் நுழைத்திடுவோம்
சூழலை காத்து சுகமாகவே வாழ்ந்திடுவோம்

சந்தப்பாவில் சிந்திப்போமா


வாடா மலரே வாசனை இதழே
தேடா நதியே தேவதை வடிவே
நாடா உறவே நாடிட வருதே
சூடா மணியே சூடிட எழிலே
அன்பென்ற வலைவீசி
தூண்டிலிட்ட காதலியே
அங்கமெல்லாம் பத்துதடி
அடியே நீ மூட்டிய நெருப்பாலே
பொய்யை பேசும் இவ்வுலகில்
பூத்து கருகும் மலர்செடியாய்
காத்திருந்து காசு பறிக்கும்
கன்னியரே நீ தான்டி
எண்ணத்தில் மலர்ந்த இனிய கவியே/
கவியே உயிராக கவர்ந்த உணர்வே/
உணர்வே  கலந்த உடலின் தமிழே/
தமிழே நுழைந்தாயே என் எண்ணத்தில்/
அன்பாலே
மொழி பேசி/
அற்புதமாய் வலை வீசி/
காதல் பந்தம் வளர்த்த காரிகையே/
காலம் எல்லாம் நம் காதல் வாழ்கவே/

செயலாய் நான்


கல்வி கற்க ஆவல் பிறந்து
கற்றேன் நாளும் தினமும் பயின்று
ஏழ்மை வந்து கண்ணில் பதிந்து
வாழ்வும் செழிக்க வழி காட்டியதே

தந்தை மட்டுமே வேலை செய்து
தரணியில் உயர அறிவும் தந்து
உலகம் போற்றும் உன்னத மகனாய்
உருவாக்கிய பதியே தந்தை என்பேன்

எண்ணில்லா துயரை யான் தகர்த்து
சிந்தையிலே பயிரை தான் வளர்த்து
முயற்சி மலரில் முளைத்த முள்ளை
பிடுங்கி எறித்த பிள்ளை நானே

இலக்குதனை விளக்காய் இதயத்தில் ஏற்றி
ஏழ்மையின் வரவை தைரியமாய் விரட்டி
செம்மையான வாழ்வை சிறப்பாய் களிக்க
கரையினை கண்டேன் செயலாய் நானே

முழுப்பெயர் -பழனியாண்டி கனகராஜா

ஊர்- கோணக்கலை, காவத்தை, பசரை

செயலாய் நான்


அன்பையும் பண்பையும் மனதில் நிறுத்தி

அகச் சிந்தனைகளை மெழுகாய் உருக்கி
தீந்தமிழின் வாசம் திக்கெங்கும் வீச
தியாகம் செய்தே வளர்த்தேன் தமிழை

தமிழென்ற கடலில் தவறாது நீந்தி
கரையென்ற இலக்கை சிந்தையில் பதித்து
முகநூலின் வழியே முத்தமிழ் பரப்ப
அகநூலில் விதைத்தேன் அருந்தமிழ் விதைகளை

எண்ணற்றோர் எப்போதும் இயற்றமிழ் அழகென்று
போற்றாதோர் யாருமிலர் பூவுலக வாழ்வினிலே
தமிழாழியிலே கண்டெடுத்த தங்கத்தமிழ் அற்சரத்தை
வெளியுலகில் வேரூன்ற விரைந்தேன் கவியாக

நற்றமிழின் புகழோங்க நாற்றிசையும் தூதுவிட்டு
இசைத்தமிழின் பெருமைதனை இனிமையாக பதியமிட்டு
இன்னுமின்னும் தமிழ் இம்மையில் ஓங்கிடவே
வண்ணத்தமிழால் படைப்பதுவே வரகவியின் செயலென்பேன்

வயல் பாடும் தெம்மாங்கு


நிறம் மாறும் மனிதர்கள்


இலாபங்களுக்காய் இம்மண்ணில் வாழும்
பயங்கர விலங்கே பச்சோந்தி மனிதன்/
தேவைகள் முடிந்ததும்
தெருவிலே வீசும் எச்சியிலைப் போல/
கூடவே உறவாடி கொடுமை செய்பவனே
கொடுக்குள்ள விசமனிதன்/
இன்பத்தில் அரவணைத்து 
துன்பத்தில் தூக்கியெரிந்து/
மெய்யை பொய்யாய் மாற்றும்
மேகவலையே இம்மனிதன்/
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து
உதாசீன வார்த்தையால் அசிங்கப்படுத்தும்/
ஊனமானவனே இம்மனிதன்/
காலத்தின் தேவையறிந்து
கமுக்கமாக செயற்புரிந்து/
அனைவரும் முன் அலட்சியபடுத்தும்
அரைமனிதனே இம்மனிதன்/
மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல
நேரத்துக்கு நேரம் பேச்சை மாற்றும்
பேதமை தோற்றமே இம்மனிதன்/
நல்லுள்ளம் என நம்பி
நாமும் மதிப்பு வழங்கியபோது/
குரங்கிடம் கிடைத்த மாலைபோல/
குதரிப்போட்ட பாவியடா நீ/
இடங்கள் மாறும் இவ்வுலகில்
குணத்தை மாற்றும் நிறமடா நீ/
இறைவா இனியும் படைக்கும்போது/
இழிவாய் மனிதனை படைத்திடாது/
பண்புள்ள மனிதனை பாரில் படைத்து/
அன்புள்ள குணத்தை அரங்கேற்றி காட்டு/