காதல்


இதயங்கள் இணைந்திடும்
இன்ப நேரம்/
இன்னிசை பாடிடும்
இளமைக் கோலம்/
உணர்வுகள் ஊறியே
உள்ளத்தை நாடும்/
ஒன்றையே ஒலிக்கும்
ஊமைக் காலம்/
உறவுகள் அன்பை
உன்னிடம் பொழியும்/
உண்மைக் காதலை
ஊட்டியும் மடியும்/
காமத்தின் வேகம்
கண்களில் படரும்/
காதலின் மோகம்
கானங்கள் பாடும்/
தனிமையில் தரணி
வெறுமையாய் தெரியும்/
தன்னவன் வருகையால்
மனதும் குளிரும்/
ஈருயிர் பாடும்
இனிய கானம்/
இல்லற வாழ்வின்
இன்னொரு பாகம்/

ஹைக்கூ