தன்முனைக்கவிதை


கடின உழைப்பால்/
கிடைப்பது விருதாகும்/
காலம் கடந்தும்/
மனதிலே அசைபோடும்/



ஹைக்கூ


தன்முனைக் கவிதை



வசந்த காலமென்றால்/
வாழ்வோ மகிழ்வாகும்/
வானத்து தேவதைகளோ/
வாழ்த்தி கீதம் பாடும்/


ஹைக்கூ



ஹைக்கூ

பரீட்சை நேரம்/
பாதியில் வந்து போகும்/
வகுப்பறை நினைவு/



ஆத்மேட்டு ஆலமரம்


ஆத்துமேட்டு ஆலமரம்
அடியினிலே களுங்கடியான்/
ஊருமக்கள காத்திடவே
ஒத்தயாக காவலிருப்பான்/
பள்ளிக்கால பருவத்திலே
துள்ளி நாங்க வந்ததுமே/
வாதுல தொங்கி ஆடிடவே
வசதியாக எமக்கு இருந்ததுவே/

ஆடிப்பாடி முடிஞ்சதுமே
அடிவயிற பசி கிள்ளியதும்/
காய்ச்சிருந்த ஆலம்பழம்
    கனிவா பசி போக்கியதே/
எங்க ஊரு ஆலமரம்
   எல்லோர் மனசிலும் வாழும்மரம்/
எல்லையில்லா இன்போம் தந்து
  எப்போதும்  நிழல் பரப்பும் மரம்/

ஒத்தயா நாங்க போனாலும்
ஒட்டுமொத்தமா ஆடிப் பாடினாலும்/
பெத்த புள்ளகல போல எம்மை
     பேதமின்றி  ஆதரிக்கும் மரம்/




தன்முனைக் கவிதை

அன்பு
********
தூய அன்பினால்/
வாழ்வோ செழிப்பாகும்/
போலி பாசத்தால்/
பிரிவோ குடிகொள்ளும்/


Hykki world record


ஹைக்கூ


உழைப்பாளர் சிலை/
ஒதுங்கியே இருக்கிறது/
ஊதிய பேச்சுவார்த்தை/