விழி தேடுதே உன்னை


மூவாறு வயதினிலே முக்கனியாய் சுவைத்தவளே/
முத்தமிழின் வடிவினிலே மூச்சாகி
திகந்தவளே/
திக்கெல்லாம் உன்னுருவம் திருவிழாக் காட்சியாக/
தேடியே அலையுதடி
திருட்டுபோன மகவையாக/
அன்பை விதைத்து நீ உறங்க/
ஆசைக் காதலை நான் பருக/
பாதுகாப்பு வேலிதனை பார்வையிலே இட்டதாரோ/
மனதில் ஓடும் காதல் நதி/
மாமனைத் தேடி விழி யசைக்க/
விண்மீனின் விழியாலே விவேகமாய் தேடுதடி/

ஹைக்கூ


அந்தாதி கவிதை


துள்ளி விளையாடும் செல்ல தேவதையே/
தேவதையே குடும்ப
சீதேவி மொட்டே/
மொட்டே மலர்வாய்
முழுநிலவு ஒளியே/
ஒளியே கற்பின்
உண்மை அணிச்சையே/
அணிச்சையே வாடா
அழகு செல்லமே/
செல்லமே சீதனக்
கல்வி மழையே/
மழையே பொழிந்து
மகிழ்வே தருமே/
தருமே நிதமே
தங்கமாய் மிளிருமே/




மெய் வடித்த சிற்பி

உடல்
வடித்த
உன்னத சிற்பியே❤

உள்ளத்தில்
ஓடும்
உண(ர்)வு நதியே💙

அன்பையும்
அறிவையும்
ஒன்றாய் கலந்தவரே💛

அழகாய்
ஆற்றுப்படுத்தும்
       அற்புத ஆசானே💙

குறைகளை 
      கண்டால் 
           நிறைவாய் சொல்லி💗

மறைகளை 
         உணர்த்திய 
                மாபெரும் மாதாவே❤

கருவறையில் 
        கற்பித்த 
               கனகத்தின் சித்தமாய்💚

கண்டதும்  
        தந்த 
            முதல் முத்தமாய்💓

வார்த்தைகளில் 
         தவழும் 
               வடிவுத் தெய்வமே❤

வாழ்நாளில் 
             கிடைத்த 
                      என் பொக்கிசமே💛

காலமெல்லாம் 
         களிப்போடு 
                 வாழ்ந்திடவே💜

கனகமெனும் 
   சேயாய் 
        வாழ்த்துகிறேன் 
                💛தாயே💛