பேனாவும் கானாவும்

வரலாற்று கதைபல சொல்லி
வாழ்க்கையின் தத்துவம்  எழுத
வந்து பிறந்த வாரிசுகளே நாங்கள்

பாலகனாய் இருந்துபோது-
படங்குனிலே மணல் பரப்பி
''அ''எனும் அமிர்தத்தோடு
அகரத்தை பருக ஆரம்பித்தேன்

அறியா பருவம் என்பதாளே
அழிந்து போகும் தன்மையறியா
அவ்வப்போது சீவி போட்டேன்
அருமையான சென்னிதனை

காலங் கடந்து ஓடி மறைய
பாலங் கூட பற்களிடையே-
பலதிங்கள் வந்து நிதம்
பட்டப்பெயராய் பதிந்ததுவே

கட்டளிந்த பருவம்தனில்
மொட்டவிழ்ந்த பாசம் வந்து
காதல் என்ற நாமம் சொல்லி
கச்சுதமாய் மனதை கிள்ளி
இதய வீட்டுக்குள்ளே புகுந்து
இன்பம் தர தொடங்கியதே

வானலையில்  நான் பேச-
வசிய வார்த்தை அவர் பேச-
கவிநயமோ
உனக்கிருக்கு-நிதம்
கவி இயம்பு என்றான் தோழன்

கண்ணீரை வடித்து வடித்து
கவியெழுத வந்தான் பேனா
கற்பனைகள் பல வடித்து-பட்ட
கஸ்டம்தனை அதில் இடித்து
கசக்கி பிழிய வேண்டுமென்று
காத்திருந்தான் கானா தினம்

சமூக,காதல்,எழுச்சி என
புரட்சி கவி பலபடைக்க
முயற்சி தினம் தான்கொண்டு
பயிற்சி பல தானெடுத்து-நட்பு
பேனா முனைகளோடு நன்றாய்
கலந்தான் கானா நிதம்

அரங்கம் பல தானேறி
கவிசுரங்கம் பல தான்தோன்றி
ஒழிந்திருந்த மாணிக்கம்தனை
உலகம் பார்க்கவைத்தான் கானா

சோதனைகள் முடியவில்லை -
சாதனைகள் புரியவில்லை
வேதனைகள் தீரும் வரை
வீரநடை தொடருவோமே.........