கரிசக் காட்டு குயிலே

காட்டினிலே உலாவி வரும்
கரிசக் காட்டு குயிலே நீ/
பாட்டினிலே கலந்த சுதிபோல
பாதியாத்தான் இருக்குறீயே/
எண்ணத்துல பலக்கனவு
எல்லத் தாண்டி பறக்கையில/
கன்னத்துல முத்தமிட
காத்துருக்கேன் நாந்தானே/
வீசிவரும் காற்றலையும்
விலாசங் கேட்டு தவழயில/
நாசியெங்கும் உன் வாசோம்
நறுக்குனுதான் இருக்குதடி/
ஒன் அழக நான்கண்டு
ஒத்தையா வர நெனச்சபோது/
செத்தையெலாம் காதலமெல்ல
செவிக்குள்ளே சொன்னதடி/
பரிசோம் போட நாமும் வாறோம்
பாதாம் பருப்பும் கலந்து தாறோம்/
தேனா இனிக்கும் ஓங்குரலால்
தேவகானங் பாடு குயிலே/



0 comments:

Post a Comment