இருமனம் இணையும் திருமணம்


இருமனம் இணையும் திருமணம்
இல்லறம் எனும் நந்தவனம்
என்றும் வீசனும் நறுமணம்
அக்கினி சாட்சியாய் சுற்றிய மனம்
ஆயுள்வரை தொடரும் அன்பு பாலம்
அனைத்து உலக மானிடர்களுக்கும் அருந்தவம்
குழந்தைகள் பிறந்ததும் குதூகலம்
கூடி ரசிப்பதால் சிம்மாளம்
பள்ளிச் செல்வது பசுமைகாலம்
பாடிப்பாடி மனையை அடைந்ததும் பரவசம்
இல்ல விளையாட்டு இன்பம் தரும்
இலக்கை அடைந்தும் மகிழ்ச்சி முழங்கும்
மங்களம் பொங்கும் மைதானம்
மார்புத் தட்டி மகிழ்வு பெறும்
நலமுடன் பயணித்தால் நல்லறம்
நாளு பேர் புகழுவது இல்லறம்
அன்புக்கு அர்த்தமண்டபம்
பண்புக்கு பாசுரம்
உண்மையான சொத்து உன் தாரம்
உறவுகளோடு வாழ்ந்தால் நிரந்தரம்
மறக்காதே நான் சொன்ன மந்திரம்
மணமேடையின் சிறப்பு என்றும் விளம்பரம்

வெட்கம் உன்னிடத்தில் வெட்கப்படும்குழந்தையாய் இருந்தபோது

கும்மாளம் போட்டத் தளிரே
சிம்மாளம் புகுந்து நித்தம்
சீதேவியை வரவேற்றதுவே
(10)
பேதைமை தெரியா அகவையது
பெற்றோர் சுமந்த பிள்ளையிது
காலங்கள் ஓடி மறைந்துமே
கணப்பொழுதில் கட்டிளம்
அடையாளங் காட்டியதே
(13)
புத்தம் புதிய பூவே
சித்தமெல்லாம் கிலியே
பித்தம் அதிகம் சிரசிலேறி
நித்தம் நிம்மதியை குழப்பியதே
சுற்றம் கூடி வரும்போது
சொக்கத் தங்கம் முற்றம் நாடி
அன்பெனும் மலரைத் தூவி
அன்று அகமகிழ்ந்து வரவேற்றதுவே
(24)
நாணம் வந்து நயனம் பாட
நங்கையவள் மனதில்
வெட்கமும் கூட
கார்குழலில் கண்ணை மறைத்து
ஓரவிழியில் உருவம் பார்க்கும்
ஒற்றை ரோஜா இவள்தானோ
(17)
மொட்டு விட்ட முழுமலர் நீ
மொய்க்கும் வண்டு நெருங்கும் இனி
வெட்கம் உன்னிடம் விருந்து வைத்தால்
விருந்தாளி வந்து சுவைப்பான் கண்ணே
(16)

மழலைகள்

அழகுத் தங்க பொம்மைகள் இரண்டு
அரவணைப்பு கிடைக்குமோவென்று
ஆதங்கத்தில் தேடுதிங்கே
அன்புத்தேர் எப்போது வருமென்று

உண்டிகளை வாங்கிடவே உத்தமியிடம் பணமிருக்கா
வண்டியிலே ஏறிவர வசதியான இடமிருக்கா
ஒன்றுமறியா உன்னதத் தெய்வங்கள் இங்கே
தாய்வரவை தேடித்தேடி நித்தம்
கோடிப்பக்கம் தவமிருக்குதம்மா

திங்கள் வட்டத் திலகம் நுதலிலிட்டு
கால்களிரண்டில் கொலுசுமிட்டு
வசதிக்காரத் தாயின் முந்தானையைத் தொட்டு
பணக்கார சுவையை பதம் பார்க்குது இங்கே
மற்றதொன்று விரலை சூப்புதிங்கே
மாற்றுவழி எதுவுமின்று

அவள் ஓர் இலக்கியம்

கட்டழகு காரிகையொருத்தியே
கையிருப்பை வண்டியில்
பொருத்தியவளே
செம்மொழி பேசும்
செந்தாமரை இவளோ
சிகப்பாய் தளிர்வது
இவளது தமிழோ
குறிலும் நெடிலுமாய்
இருந்த கரங்கள்
உயிரும் மெய்யுமாய்
ஒன்றாய் கலந்த உத்தமியே
இயல் இசை நாடகமாய்
இசைந்து நடக்கும் இனியவளே
கயல்விழியெனும் வீச்சருவாள்
கொண்டு எதிரியை வதைக்க
வந்த இளவரசியே
வல்லினமும் மெல்லினமும்
இணைந்து  இடையினையெனும்
இன்னிசை பாட
இலக்கணமும் கூடவே ஒத்தூத
செவிகளுக்குள் நுழைந்து
ரீங்காரமாய் ஒலிக்குதடி
சிறுகதையின் கருப்பொருளாய்
சித்திரத்தின் வர்ணமாய்
நாடகத்தின் நாயகியாய்
நம்கதையின் தேவதையாய்
நளினமான பெண்மகளே
கம்பனின் அழகு கவிதையாய்
காவியத்தில் மெழுகு பொம்மையாய்-நம்
கலாசாரத்தின் உயிர் தோழியாய்
ரசிக்க ரசிக்க ருசிக்கும்
மகரந்த தேனிவளே
இவளுக்காகவே எத்தனையோ
நாள் காத்திருந்திருந்தேன்
இவ்விலக்கியத்தை
இயம்பிடவென்று

பாரதம் பெற்ற பாரதி

பாப்பா பாட்டு பாடிய கவியே
பாவலர்கள் மனதிலோடும் நதியே
இசை வரியாய் வந்த சுதியே
அசைந்தாடுது அழகிய புவியே
எதுகையும் மோனையும் இருவரியே
ஈன்றெடுத்த தாய்க்கவியே
நவீன கவி வழியே வந்து
நர்த்தனம் புரிகின்றாயே
ஆண்டுகள் பல உருண்டோடியே
அச்சுப்பதித்ததுன் தேனகவையே
மா கவியின் மரியானா ஆழியே
மாந்தரின்னும் காணாத தொணியே
செம்மொழி வளர்த்த சித்திரமே
சங்காய் முழங்குதுமுன் சரித்திரமே
சந்தங்கள் வந்து சங்கீதம் பாட
சமரசம் காண்கிறதே அதனிசையோட
காலங்கள் கடந்து போக
கவிநயமோ மனதிலூற
துளியாய் துளியாய் சுவைக்கின்றேன்
திகட்டிவிடும் என்றெண்ணி
எனக்கு வாழ்த்த தகுதியில்லை-கவியே
இன்று முளைத்த காளான் நானே

விளையாடிப் பார்த்தாய் வினையாகிப் போனது


அன்றொரு நாள் காதல்
காதல் வாசம் வீசி
என் இதயத்தை
ஸ்பரிசம் செய்தாய் நீயே
இதையறிந்து என் மனசு
காதல் ஏற்று உனக்கு
அத்திவாரமிட்டு
அடைக்களம் தந்துவிட்டதே அன்பே
சல்லாபம் கொள்ள ஆசைப்பட்ட நீ
காதல் சங்கமிக்க மறுத்ததேன்
மாமனார் மகளே
காதல் பெயரை சொல்லி
மோதல் செய்தது நீதான் காதலியே
விளையாடிப் பார்க்க நானென்னை
விளையாட்டு பொம்மையா
அறியா எனது தூய மனது
அடிமையாகிப் போனது
உன் வாசகத்திற்கு
வாழ்க்கையில் விளையாடாதே பாவியே- காரணம்
வஞ்சகக்காரியறியா என் மனதே
வாழும்போதே வாழ்த்திவிடுகிறேன்
நீ வளமுடன் வாழ்கவென்று

தந்தை போலாகுமாஅன்னை பிறந்த ஊரை நோக்கி

அப்பாவும் நானும் அழகாய் உடுத்தி
வீதியோரம் வந்து நின்றபோது
வேகமாய் வண்டியும் சென்றிடவே

கால்கடுக்க காத்திருக்க
காரிருளும் பகலை மறைக்க
என்ன செய்வோம் மகனென்று
ஏக்கத்துடன் கேட்டார் அப்பா

தாத்தா ஆச்சி பார்க்க வேணும்-
பிடிவாதம் பிடித்து நின்றேன் நானே
நடந்து போவோம் வா மகனே
தைரிய வார்த்தை மொழிந்தார் சிவனே

நான்கு மைல் சென்றதுமே
நானோ சோர்வில் துவண்டதுமே
காவல்நிலைய வாகணமொன்று
எங்களை கண்டு நின்றதன்று

எங்கே போகிறீர் என்று கேட்க
இன்னதென்று தந்தை இயம்ப
ஏற்றி இறக்கி சென்றார் -அந்த
இரக்கமுள்ள மனிதனன்று

செல்ல கதைகள் கதைத்து கொண்டு
சீக்கிரமாய் சென்றடைந்தோம் வீடு
தனயனது சுவையை உணர்ந்த -என்
தந்தை போலாகுமா இவ்வுலகில்-
ஆயுள்வரை நான் மறவேன் அறிவுக்கடல் நீங்கள் தானே

ஓரவிழிப்பார்வையிலே

உள்ளத்து மெய் காதல்தனை
உன் கயல்விழிகள் சொல்லுதிங்கே
செவ்விதழும் சிறப்பாய் இருக்கு
செந்தேனும் கூடவே அதிலிருக்கு
காந்தவிழி சைகை காட்டியிருக்கு
கச்சுதமாய் காதல் மலர்ந்திருக்கு
வண்டுகள் மொய்த்து போகுமுன்னே
அள்ளி காதல்தேனை பருகுடா என்றாள்
இத்தனை சக்தியுமிங்கே எதிலிருக்கு
அத்தனையும் கண்டேனடி ஓரவிழிப்பார்வையிலே

குழந்தைப் பருவம்

தத்தி தத்தி அடியெடுத்து
தாண்டி தாண்டி நடைபயில
தாத்தா செய்த நடைவண்டி
தோதாய் வழி சமைத்த வண்டி

அமாவாசை தின நிசியன்று
அசந்து போய் தானமர்ந்து
அம்மாவூட்டிய சாதம்தனை
அறவே உண்ண முடியாதென
அடம்பிடித்த குறும்பு காலமது

கதைகள் பல நிதம் கேட்டு கேட்டு
பலாசுளைகள்போல இனிமை பெற்று
நிதமும் கதைகள் பல கேட்கவென்று
ஆச்சியின் பக்கம் மெல்ல சென்று
அடிமனதில் பசுமரத்தாணியாய்
பதிந்த பருவமது

வறுமையின் கொடுமை வந்து
வெதும்பியை தமக்கை வகுந்தபோது
சமபங்கு கிடைக்கலனு
சண்டைபிடித்த காலமது

விசுகோத்து சுவையும்
வெந்நீரில் கலக்கி தந்த
பால்மாவின் இனிமையும்
ஒன்னாய் தொட்டு உறிஞ்சு
உண்ட உன்னதமான காலமது

எத்தனை காலம் பிறந்தாலும்
இன்ப நினைவுகள் மலர்ந்தாலும்-இனி
குழந்தை பருவம் வந்திடுமா-இது
இலந்தைப்பழம்போல் இனித்திடுமா

உணர்வுகளான உண்மைகள்
நீ காயப்படுத்தி
சென்ற என் மனசுக்கு
உன் நினைவுகள் எனும்
மருந்தை போட்டும்
ஆறவில்லை-காரணம்
நினைவோடு கலந்து
ஆடம்பரம் எனும்
விசக்காற்று வந்து
வேதனையை
அதிகரிக்கிறது

இலைமறை தவறுகள் நியாமாக்கப்பட்டால்
பள்ளி செல்லும் பருவத்திலே பலரது பொருட் திருடிய
புதல்வர்களை தட்டிகேட்காது கட்டி அரவணைத்த
அன்பு பெற்றோரினால்
இலைமறை தவறுகள் நியாமாக்கப்பட்டால்

படாதபாடு பட்டு உழைத்து பெற்ற பணத்தை
 பயணச்சீட்டு வழங்குனர் பலனடைந்து மீதிகாசு கேட்டால்
மாசுக்காரனென்று சொதைப்பது உரியவரினால்
இலைமறை தவறுகள் நியாமாக்கப்பட்டால்

சோமபானம் நிதம் அருந்தி குடும்பசுமைதனை மறந்து
வீதியெங்கும் வியாக்கியானம் பாடும் வீரர்களின்
விபரீத விளையாட்டுகளை கண்டு காவற்துரையினரால்
இலைமறை தவறுகள் நியாமாக்கப்பட்டால்

தரக்குறைந்த சாமானை தந்து தனவாளன் வாழும்
இத்தரணியிலே இலத்திரனிய துலாபாரம் என்ன
செய்யும் பைகளின் நிரை புறக்கணித்து பத்து பைசா
 இலாபமடைகின்ற இலைமறை தவறுகள் நியாமாக்கப்பட்டால்

வாழ்வாதார செலவுகள் வரையரையற்று வாழுகின்ற
இக்காலத்திலே உரிமையை கேட்டு உதாசீனப்படுத்தும்
நிலைமாறி உன்னத  காலம் உதித்து ஞாலம்
போற்ற நலமுடன் வாழ்ந்திடட்டுமே


கார்குழல்


விண்ணுலக தேவதைகள் விரைந்து வந்து

பூலோகத்தில் பூச்சூடிய பூங்கோதைகளாகினர்
கார்குழலுக்குள் தஞ்சம் புகுந்த கனகாம்பரம்
காலாகாலம் வாசணை தராதென்பது நிரந்தரம்

மலரை சூடியதால் உன் கூந்தலுக்கு மணமா-இல்லை
பலரை கவர்வதே மலரின் மகத்துவ குணமா
இயற்கையிலுள்ள மலர்களை சூடுவதால்
இளவரசிகளின் மேனிக்குள்ளே இன்பம் பெருகும்

படைக்கப்பட்ட மலர்கள் அத்தனையும்
பாவையின் கூந்தலுக்கு அடிமையே
நுதலிலே இட்ட திலகம் சந்திரனை
வசியமாய் வளைத்திழுத்து கார்கூந்தலிலே
சிறை வைத்ததேனோ

உன் அழகிய கார்குழல் அவ்வப்போது
கலைந்து ஆடவர் வதனத்திலே
அட்டாகாசம் செய்கிறது
மேகத்தை கேட்டு தூதனுப்பியது காற்று
மென்மையாய் துயிலுறங்க மெல்லிய 

அழகிய வஞ்சிக்கொடியின் கார்கூந்தலிலே 
துள்ளி விளையாடென்றது கார்மேகம்

நதியுடன்.........


உன்னழகை நான் காண - என்
உள்ளத்திலே காதல் மலர
சித்தியின் கல்யாணத்தன்று-நாம்
துள்ளிவிளையாடியதை சுகமாக
ரசித்ததடி நதியென்ற ரதிதேவி
சாயம் பூசா உன் செவ்வாயும்
சந்திரவட்டமான என்னிதழும்
சரிசமமாய் சல்லாபித்தடி
கட்டழகான உன்மேனி
காந்தமாய் எனையிழுத்து
மாராப்புக்குள்ளே பூட்டி
சிறைவைத்து கொண்டதடி
பார்க்கும் பொருள் அனைத்திலுமே
தெரிந்த சிலை நீதானே
பாய்ந்து வந்த நதிகூட நாமும்
பரவசமாய் ஊர்வலம் போனோமடி
முத்தமழை யாம்பொழிய
அழகிய நதியார் நாதமிசைக்க
நதியும் நாமும் ஒன்றாய் சேர்ந்து
காதலெனும் கடலுக்குள்ளே கலந்து
கல்யாணம் செய்தோமடி
களிப்பாய் நிதம் வாழ்ந்தோமடி-தினம்
அன்பால் இணைந்து வாழ்ந்தோமடி
நல்லுறவால் உலகை வென்றோமடி

கிராமத்துச்சமையல்


மலை மலையாய் நாமேறி
மிலாருகளை தான் பொருக்கி
விறகு கட்டை சென்னியிலே
சுமந்து கொண்டு வந்ததுமே
தூளு பைய அம்மா எடுத்து
துப்பரவா தேனீர் போட்டு
உள்ளங்கையில சீனியயிட்டு
உறிஞ்சி உறிஞ்சி குடிக்கையிலே
நறுமணமும் எங்கும் வீசும்
அடுத்த வீட்டு நல்லெண்ண கறி
கிராமத்துச்சமையல் பெயர சொல்லி
வயிறு நிறைய சாப்பிட்டதுபோல
வக்கணையான நிறைவைதருமே

தலையணைமந்திரம்


காதல் கொண்ட பைங்கிளியே
கடலலையாய் கனவை தந்தவளே

தலையணையின் காதுக்குள்ளே
தந்திரமாய் என்ன சொன்னாய்

போன மச்சான் திரும்பி வந்தாள்
வேனா சகவாசம் இவன்மேலென்று
விபரமாய் சொல்லிட்டாளோ
நிசப்த நேரவேளையிலே நிம்மதியை
தொலைத்த கதைய சொல்லு

தூங்க நானும் போகையிலே
தொந்தரவாய் வந்து போன
தொலைபேசியிடம் கேட்க சொல்லு
குறுஞ்செய்தி எழுதி எழுதி
கொடுமைபட்ட உன் மனதை கேளு

உறக்கம் வரும் போதெல்லாம்
உனையனைத்து கொள்வாளே
அவள் சொன்ன மந்திரத்தால்
அவதிபட்டது நீதானே
தந்திர கார ராட்சசியினு
சட்டமன்றத்தில் வழக்குத்தொடு

மக்கள் போற்றும் மாமனிதன்


கருணையுள்ளங் கொண்ட அப்துல்கலாம் ஐயாவே
நானும் உங்கள் தொப்புல் கொடி பையாதானே
மெய்ஞானம் பல கற்று அதில்
விஞ்ஞானத்தை வென்றவரே
அமுத மொழி பொழிந்தவரே-அதை
தேனமுதாய் நாவில் தினித்தவரே

பிரம்மசரியம் பூண்டு நிதம்
பெரும் தியாகிகளை வென்றவரே
எரிகணைகளை தான் செய்து
எதிரிகளை நிதம் மிரட்டியவரே

இலங்கையிலிருந்த மானிடர்களை
இறக்குமுன்பு வந்து பார்த்தவரே
காலங்களும் கடந்து போச்சி
கனவுகளும் இன்று கலைந்து போச்சி
இலட்ச்சிய கனவு கானுகின்றோம்
நிச்சயமாய் மீண்டும் பிறப்பீர்களென்று

கனவு பழிக்க வேண்டுமையா-தமிழ்
களைபிடுங்கி செழிக்க வேண்டுமையா
வருத்தம் வந்து உங்களை வாட்டியபோது
என்னுயிரை எடுயென இயமனிடம் சொன்னேன்
நீங்கள் விதைத்து சென்ற சிந்தனை விதைகளெல்லாம்
எனது மனச்சோலையிலே விருட்சமாய் நிழல் தருகுதையா
விண்ணிலிருக்கும் உங்கள் விம்பத்துக்கு
மண்ணிலிருந்து மலர் தூவுகிறேனையா

பசித்த வயிறு

 பசிக்க தெறிந்த வயிற்றுக்கும்......
ருசிக்க தெறிந்த நாவுக்கும்.......
வறுமையின் கொடுமை
தெறிவதில்லையே
இளமையில் வறுமை
கொடுமையென்று
எழுதி வைத்தான்
ஏட்டிலன்று
இறைவன் எதுவுமறியா பிஞ்சிகளை
வஞ்சனை செய்கிறான் இன்று
அண்ணா உண்ணும் சாதத்தை
அசந்து போய் பார்க்கின்றான்
ஒருபிடி தருவானோ அல்லது
உள்ள பசியை போக்கி கொள்வானோ
யோசித்து எதுவும் பயனுமில்லை
யாசித்து நிதம் புசிப்போமண்ணா
பசித்த வயிறு என்ன செய்யும்-இப்போ
பத்திகிட்டு எரியுதெனக்கு

ஆசிரியரெனும் அன்பு தெய்வங்களே!ஆண்டவன் அருளிய ஆசிரிய தெய்வங்களே
அறிவை புகட்டிய அழகிய ரத்திணங்களே
இன்னொரு அன்னையான தாய்குலங்களே
இறைவன் படைத்த அன்பெனும் ஊற்றுக்களே
பொதுமொழி கற்றுத்தந்த பொக்கிசங்களே
பொறுமையில் சிறந்த புண்ணியவான்களே
கணிதத்தை கற்றுத்தந்த கணவான்களே
புனிதத்தை தன்னகத்தே கொண்ட புத்தன்களே
வரலாற்றை சொல்லித்தந்த வாத்தியார்களே -நீங்கள்
வரலாறு படைக்க வாய்ப்பை தந்தவர்களே
தமிழின் சுவையுணர்த்திய தளபதிகளே
கவி பாவலராய் தடம் பதிக்க செய்தவர்களே
பாடங்கள் பல புகட்டிய பாக்கியவான்களே –இன்றும்
மனதில் கல்வெட்டாய் பதிந்திருப்பது வாக்கியங்களே
பல்லாண்டு பல்லாண்டு வாழனும் தெய்வங்களே -அடியேன்
தலை வணங்கி வாழ்த்துகின்றேன் வாத்தியார்களே