கடல் வாழ்க்கை

அதிகாலைச் சூரியன் 
எப்போது உதிப்பான்/
அந்திச் சாய்கையில்
எப்போது மறைவான்/
மீனவர் வாழ்வை மீட்டும் போது/
மின்னலாய் ஏழ்மை மின்னி மறையுதே/

வலைகளின் சிக்கும்
மீனின் இனமும்/
வாஞ்சையில் திளைக்கும்
மீனவன் குணமும்/
ஒருமனதாய் சேர்ந்து
ஒத்துழைப்பு நல்குதடா/

பறவைகள் பறக்கும் 
வான வீதியிலே/
பரவையில் அசைப்போம்
துடுப்பின் கைகளிலே/
குடும்பத்தின் சுமையை
மனதில் சுமந்தே/
கொத்து கொத்தாய்
மீன்பிடிப்போம் நிதமே/

மனையின் காதல்
மனதில் மிதக்க/
கடலின் காதல் 
நாசியில் கலக்க/
உயிரை மாய்த்து
வயிற்றை நிரப்பி/
வணிகம் செய்யும்
வாலிபம் யாமே/

மக்கள் நினைப்போ
மன்னவன் மீது
மன்னவன் நினைப்போ
மக்கள் மீது/
அலைகளைப் போலே
அசைந்து வந்து/
அன்றாட வாழ்வை
கடக்குது இங்கே/

கடலின் வாழ்க்கை 
கரைசேரும் வரை/
கர்ணனின் வாழ்க்கை
 கொடை வழங்கும் வரை/
உடலின் வழியே
ஒட்டாத உயிராய்/
நலமாய் வாழ
நாணயம் தருமே/

0 comments:

Post a Comment