ஹைக்கூ


விடியலை நோக்கி


கொழுந்தினை பறிக்கும் ஈரைந்து விரல்களும்
கொங்காணியில் தவழும் தேயிலைத் தளிர்களும்
எம்மினத்தின் வேதனையை
எப்போதும் மறவாதே

காலத்தின் வேகம் கடுகதியில் பயணிக்க
ஞாலத்தின் மோகத்தில் நாவறன்டு துடிக்க
அடுத்தவனை சுரண்டும் அட்டைப் பூச்சிகளே
அங்கீகாரம் உனக்கு கொடுத்தது யாரோ

இரத்தத்தில் ஓடும் செங்குருதி துணிக்கைகளும்
எப்போதும் அயராத நம்மின உழைப்பும்
மூச்சியின் சூட்டில் மும்முரமாய் திகழ்ந்து
பேச்சியின் வழியே பெருமை சேர்க்குதிங்கே

மழையையும் வெயிலையும் மாலையாய் அணிந்து
மக்களின் நாவினில் சுவையாய் கலந்து
நாட்டினது வளர்ச்சியில் நற்பங்காற்றிடும்
நாங்கள்தான் உங்களின் உயிர் மூச்சுடா

பொதுநல எண்ணம் பூமிக்கு இருக்கு
புத்தரின் போதனையோ பொழியுதே எமக்கு
நல்வழி உணர்ந்த நாயக்க கணக்கு
எம்வலி உணர்ந்து ஏற்றிடு விளக்கு

கவிதை

புரிந்தோர் என்றும் புல்லரென்று
புரவலர் பாடிய கவியில் மிதந்து
புத்தெழில் வண்ண கவியூற்று
புரிந்தே நன்றாய் சிரம் தாழ்த்து
புத்தகம் தந்த புதுயுகமும்
புத்திரன் சேரும் சகா உறவும்
புத்தி மங்கி போவதாக
புத்திமதி கவி உரைத்தீரே
புதுமைதனை இதில் நுழைத்தீரே
புன்னகையான வாழ்த்துகள் ஐயா
புத்துணர்ச்சி இனி மலரட்டுமையா

ஹைக்கூ


விடியும் வரை காத்திரு



விடியும் வரை காத்திரு
வியூகங்களை வகுத்திடு
விந்தைகளை காட்டிடு
விருப்பங்களை நிறைவேற்றிடு

இரவுகளை சுவாசித்திடு
இரவல் வாழ்வை நினைத்திடு
இல்லறத்தை உயர்த்திடு
இழிவு குணத்தை வெறுத்திடு

நல்லறத்தை வளர்த்திடு
நல்குணத்தை விதைத்திடு
நன்மலராய் உதித்திடு
நறுமணத்தை பரப்பிடு

அணிச்சயாய் பூத்திடு
அடியேனை நினைத்திடு
அன்பையே தெளித்திடு
அமிர்தமாய் பருகிடு

ஏக்கத்தை துரத்திடு
ஏணியை மதித்திடு
ஏழ்மையை சுவைத்திடு
ஏற்றத்தில் வாழ்ந்திடு

காதலை போற்றிடு
கயவனை தூற்றிடு
காலைவரை காத்திரு
கண்மணியே
நானே உன் திரு

நடுவர் சான்றிதழ் வெளிச்ச விதைகள்