மனமே கோவிலானால்.....


நேர்மறைச் சிந்தனையின்

நிம்மதித் தடமே/
நினைவுகளை சுமந்து செல்லும் அகக்கூடமே/
தீவினையும் நல்வினையும்
திக்குமுக்காடும் திருத்தலமே/
எண்ணங்களை பிரித்து
காட்டும் திரவியமே/
எப்போதும் நீயே
இம்மையின் ஆலயம்/
சுமுகமாக செயற்படும்
சுந்தர நாதமே/
உன்னை சுடுகாடாக்குவது
கயவனின் வேலையே/
ஆற்றுப்படுத்தும் அழகான
மனமென்றும் திருக்கோயிலே/

விடியலும் இருண்டதோ


விடியலும் இருண்டதோ
விந்தைகளும் நிகழ்ந்ததோ

வெளிச்சங்கள் காரிருளாய்
விம்மி விம்மி அழுததோ
நல்சிந்தனை யாவரும் பெற்று
நலமுடனே யாவையும் கற்று
ஞாலம் மிளிரும் நிலை பிறந்தால்
நாமும் நாடும் சிறக்குமன்றோ
உதிரத்தை பாலாய் தந்து
உதித்த மனிதம் தாய்தானே
அன்பு எனும் அடையாளம்தனை
அகிலத்தில் விதைத்தவளும்
மாதாவன்றோ
இத்தனையும் பறைசாற்றி நீயோ
இம்மையில் பிறந்த பெண்குலமே
ஒருபிடி சோற்றுக்காய் உன்னை மறந்து
உதித்த சிசுக்களை மாய்த்தாய் ஏனோ
விடியலாய் விடிந்த தாய்க்குல ஒளி
வீழ்ந்துப்போனதே உன் அறிவிலியாலே
கயவர்கள் காட்டிய காட்டுமிராண்டி செயலை
கணப்பொழுதில் நீயும் செய்தாயடி
இனியும் இருட்டை தூக்கியெறிவோம்
எதிர்கால வாழ்வை ஒளிரச்செய்வோம்

பாடல் போட்டி

பாடல்:வா வெண்ணிலா
படம்:மெல்ல திறந்த கதவு
இசை:இளையராஜா
விரகதாபக் காதல்
***************************
பல்லவி
ஏ காதலா என்னைநீயே ஏய்ப்ப தேனடா
ஏ காதலா என்னை நீயே ஏய்ப்ப தேனடா
பூமேடை தேடியே கார்காலமாய் ஆனதேன்
பூமேடை தேடியே கார்காலமாய் ஆனதேன்
ஏ காதலா என்னை நீயே ஏய்ப்ப தேனடா
ஏ காதலா என்னைநீயே ஏய்ப்ப தேனடா
சரணம்:1
லா லாலா லாலலா லா லாலா லாலலா
லாலாலலா லாலாலலா
தினம் வாட்ட தேகம் தீராத தாகம்
சிறைப்போட்டு என்னை வதைத்தாலே சோகம்
திருமுறை ஓதும் ஹா ஹா….
திருவருள் போதும் ஹெ ஹெ
திடம் வர மீண்டும் ஹோ ஹோ
நகைப்பது தீரும் ஹெ
மனைச் சேர மனைச்சேர பூங்காற்று
இன்று காதல்கீதம் பாடுதே
வா வெண்ணிலா
சரணம்:2
லலலலாலலா லலலலா லலா
லலலலலலலலலலலலலலலல லலலலாலலலலா
லால லால லால லா
ஏ காதலா என்னைநீயே ஏய்ப்ப தேனடா
பூமேடை தேடியே கார்காலமாய் ஆனதேன்
சரணம் 2
வயலோரம் நீயும் வரச்சொன்ன நானும்
தினந்தோறும் பெண்ணை தீண்டாமல் வாடும்
விழிதனில் தேடும் ஹா ஹா
விரசமும் கூடும் ஹெ ஹெ
உனையறியாமல் ஹோ ஹோ
எனை தர தோன்றும் ஹெ
நமக்காக ஆஆஆஆஆஆ
நமக்காக குயில்ப்பாட்டை
தினம் பாடி சாட்சி கூறுவேன்
ஏ காதலா என்னை நீயே ஏய்ப்ப தேனடா
ஏ காதலா என்னை நீயே ஏய்ப்ப தேனடா
பூமேடை தேடியே கார்காலமாய் ஆனதேன்

அழகிய கிராமம்


சேவலும் காலையிலே சீதேவியா கூவ
செழிப்பான கிராமமோ கண் விழிக்க
ஆலய மணியின் ஓச கேட்டுக்கிட்டே
ஆசயோட மனக்கண்ணை கசக்கினரே
குருவிகளோ கூச்சிலிட்டு கொண்டாட்டமா பவனிவர
கொழுந்துமலஅழகயல்லாம் குதூகலமா பாக்கயில
பச்சபச்சயா படந்திருக்கும் பாப்பவர கவந்திழுக்கும்
கல்விசால கடக்கும் பாத எல்லாம்
பலா மரமோ நெரைய இருக்கு
ஆச வந்தா புடுங்கி சாப்பிட
அதிகாரமோ எங்களுக்கிருக்கு
கிராமத்து வாசோம் காற்றோட வந்து
கிளுகிளுப்ப தூண்டிருக்கு
நகர வாழ்க்கை தந்த வெறுப்ப
நம்ம கிராமம் விரட்டி அடிக்கும்
நந்தவன மனமாக
நாளெல்லாம் செறகடிக்கும்

ஐக்கூ

விஞ்ஞானக் கண்டுப்பிடிப்பு
வேகமாக வளர்கிறது
வயலில் களைகள்




















அழகான சிலை
அலைமோதிக் கொண்டிருக்கிறது
திருடியவனின் மனது..!

மேக ஓவியம்/
அங்குமிங்கும் அசைகிறது/
தூரிகை.

விவசாய நிலத்தில்
செழிப்பாக வளர்கிறது
மண்புழு

 

தொடருந்து பயணம்
மன நிறைவைத் தருகிறது
புத்தக வாசிப்பு

எரியும் தீச்சுவாலை
விட்டு விட்டு தொடர்கிறது
மரணவீட்டு அழுகை