நிறம் மாறும் மனிதர்கள்


இலாபங்களுக்காய் இம்மண்ணில் வாழும்
பயங்கர விலங்கே பச்சோந்தி மனிதன்/
தேவைகள் முடிந்ததும்
தெருவிலே வீசும் எச்சியிலைப் போல/
கூடவே உறவாடி கொடுமை செய்பவனே
கொடுக்குள்ள விசமனிதன்/
இன்பத்தில் அரவணைத்து 
துன்பத்தில் தூக்கியெரிந்து/
மெய்யை பொய்யாய் மாற்றும்
மேகவலையே இம்மனிதன்/
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து
உதாசீன வார்த்தையால் அசிங்கப்படுத்தும்/
ஊனமானவனே இம்மனிதன்/
காலத்தின் தேவையறிந்து
கமுக்கமாக செயற்புரிந்து/
அனைவரும் முன் அலட்சியபடுத்தும்
அரைமனிதனே இம்மனிதன்/
மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல
நேரத்துக்கு நேரம் பேச்சை மாற்றும்
பேதமை தோற்றமே இம்மனிதன்/
நல்லுள்ளம் என நம்பி
நாமும் மதிப்பு வழங்கியபோது/
குரங்கிடம் கிடைத்த மாலைபோல/
குதரிப்போட்ட பாவியடா நீ/
இடங்கள் மாறும் இவ்வுலகில்
குணத்தை மாற்றும் நிறமடா நீ/
இறைவா இனியும் படைக்கும்போது/
இழிவாய் மனிதனை படைத்திடாது/
பண்புள்ள மனிதனை பாரில் படைத்து/
அன்புள்ள குணத்தை அரங்கேற்றி காட்டு/

0 comments:

Post a Comment