4ஆம் ஆண்டுவிழா பாடல் போட்டி - 1 பாடல் : காற்றின் மொழி



தலைப்பு-வாழ்வின் தேடல்
*************************************
பல்லவி:

வாழ்வின் கனி சுவையா சுமையா
மீனின் வழி கடலா திடலா
மடலின் வரி சிலையா வலையா
தேடல் இனி மதியா விதியா

தமக்கையின் தொனிகள் தெரிந்துவிடில்
தம்பியின் பணிகள் வேறுயில்லை
உதயத்தின் உளிகள் மழுங்கிவிடில்
புனிதர்க்கு தொழிலே சேவையெல்லை

வாழ்வின் கனி…

சரணம் 1:

தோற்று கோரும் தூது விதிகள் மதியாது
கூடல் கூசும் மாது வழிகள் அறியாது
தாயின் வீட்டைக்காண தவமும் கிடையாது
பெண்கள் தேடும் வாழ்க்கை பயமும் நுகராது
மனதிற்பதியும் மாமனுக்கு பருவம் மீட்ட விடியாது
தேடல் கூடும் வலியெல்லாம் சொற்பப் பாட்டில் விளங்காது

தமக்கையின் தொனிகள் தெரிந்துவிடில்
தம்பியின் பணிகள் வேறுயில்லை
உதயத்தின் உளிகள் மழுங்கிவிடில்
புனிதர்க்கு தொழிலே சேவையெல்லை

வாழ்வின் கனி…

சரணம் 2:

தென்றல் தீண்டும்போது தீயும் அணையாது
திங்கள் நீந்தும்போது வலியும் உணராது
உரித்த வாழைத் தோலால்
தண்ணீர் தெளிவாகும்
பெண்மை கீதை நூலால்
வானம் விழியாகும்
வாழத் தெரிந்த மனிதனுக்கு வாக்குவாதம் ஆகாது
சோகம் நீழும் ஆயுளுக்கு சொர்க்கம் கூட வடிவேது

தமக்கையின் தொனிகள் தெரிந்துவிடில்
தம்பியின் பணிகள் வேறுயில்லை
உதயத்தின் உளிகள் மழுங்கிவிடில்
புனிதர்க்கு தொழிலே சேவையெல்லை

வாழ்வின் கனி…

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
23.08.2019

காடு வெளஞ்சென்ன மச்சான் - நமக்குக் கையும் காலுந்தானே மிச்சம்



பெண்:
கனவுகள் பல நீயும் கண்டு
நினைவுகள தெனம் நெஞ்சுல சுமந்து
நித்தமும் வயலுக்கு போற மச்சான்
சித்தமும் மகிழ்ந்து இருந்தாயே மச்சான்
காசுபணம் தேடி நாமும்
கல்யாண வேற நடத்த முன்னே
வெறுங்கையா நீயும் இருக்குறீயே
வேதனையில் கண்ணீர் வடிக்கிறீயே

ஆண்:
சேர்த்த பணத்த எல்லாத்தையும்
செலவு செய்ய மனசுவச்சி
அள்ளிப் போட்டேன் அறுவடைக்கி புள்ள
அத்தனையும் வீணாப் போச்சி புள்ள
செட்டியார்க்கிட்ட கடன வாங்கி
கெட்டியா புடிச்சி வேலைய தொடங்க
நேர்மறை எண்ணம் விளையுற மாரி
நிறைவான வார்த்த சொல்லு புள்ள

பெண்:
கவல ஒன்னும் வேணா மச்சான்
கடவுள் தொண இருக்கு மச்சான்
நெஞ்சுல தைரியம் வளத்துகிட்டா
நிம்மதி தானா வந்திடும் மச்சான்
கையுங் காலுங் மிச்சந்தானே
பையும் நாளும் நெரையும் தானே
ஊக்கத்தோட உழைக்கப் பாரு
தேக்கா நானும் இருக்கேன் தேனு

ஆண்:
ஊக்கந் தந்த தேக்கு மரமே
உந்தன் வாக்கு போதுமெனக்கு
கனகதாரா பாட்டுப்பாட
கனகம் பொழிவார் கடவுள் நமக்கு

பெயர்-காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

ஐக்கூ


பொறுமை இழந்தால் வெறுமை


மொட்டு மலர் காய் கனியாய்/
முழுநிலையின் பொறுமை உணர்ந்தே/
உன்னதக் குணத்தால் பூமிதனிலே/
தின்னமாய் மிளிரும் கனகமிங்கே/
புகழைத் தேடும் மானிரிடையே/
இகழும் நிலை மாறிடவென்று/
நிலத்தைப்போல பொறுமைக் காத்து/
வளத்தைப் பெருக்கி வாகைச் சூடு/
பொறுமைத் தாயே நீயும் வந்திடு/
வெறுமை நிலையை விரட்டித் தந்திடு/

தலைப்பு:வணங்குகிறேன் தாயே


பாசத்தையும் பாலையும் ஒன்றாய் கலந்து
பத்துத் திங்களாய் தவமும் கிடந்து
உதிரத்தின் ஊடே உடலைத் தந்தவளே
உத்தமியே பத்தினியே உன்னை வணங்குகிறேன்


வறுமையை தினம் பொறுமையாய் கற்றுணர்த்தி
சிந்தையில் செதுக்கிய சிலையாய் ஆற்றுப்படுத்தி
பண்பாய் பட்டைத் தீட்டிய பார்வதிக்கு
இதயச் சேயாய் இருகரம் கூப்புகின்றேன்

சுவாசம் எனும் சுந்தரக் காற்றை
சுக்கில வடிவில் கருவில் ஏற்றி
ஒளித் தந்த உயிருள்ள தெய்வமே
ஒவ்வொரு நொடியும் உன்னைப் பணிகின்றேன்

மண்தரையில் மலரும் தங்கம் போலே
கருவறையில் உலகைக் காட்டியத் தாயே
அட்சயபாத்திரமே நீதான் அழகுச் சிலையே
ஆயுள்வரை உன்னை வணங்குகிறேன் அம்மா