நதியுடன்.........


உன்னழகை நான் காண - என்
உள்ளத்திலே காதல் மலர
சித்தியின் கல்யாணத்தன்று-நாம்
துள்ளிவிளையாடியதை சுகமாக
ரசித்ததடி நதியென்ற ரதிதேவி
சாயம் பூசா உன் செவ்வாயும்
சந்திரவட்டமான என்னிதழும்
சரிசமமாய் சல்லாபித்தடி
கட்டழகான உன்மேனி
காந்தமாய் எனையிழுத்து
மாராப்புக்குள்ளே பூட்டி
சிறைவைத்து கொண்டதடி
பார்க்கும் பொருள் அனைத்திலுமே
தெரிந்த சிலை நீதானே
பாய்ந்து வந்த நதிகூட நாமும்
பரவசமாய் ஊர்வலம் போனோமடி
முத்தமழை யாம்பொழிய
அழகிய நதியார் நாதமிசைக்க
நதியும் நாமும் ஒன்றாய் சேர்ந்து
காதலெனும் கடலுக்குள்ளே கலந்து
கல்யாணம் செய்தோமடி
களிப்பாய் நிதம் வாழ்ந்தோமடி-தினம்
அன்பால் இணைந்து வாழ்ந்தோமடி
நல்லுறவால் உலகை வென்றோமடி

கிராமத்துச்சமையல்


மலை மலையாய் நாமேறி
மிலாருகளை தான் பொருக்கி
விறகு கட்டை சென்னியிலே
சுமந்து கொண்டு வந்ததுமே
தூளு பைய அம்மா எடுத்து
துப்பரவா தேனீர் போட்டு
உள்ளங்கையில சீனியயிட்டு
உறிஞ்சி உறிஞ்சி குடிக்கையிலே
நறுமணமும் எங்கும் வீசும்
அடுத்த வீட்டு நல்லெண்ண கறி
கிராமத்துச்சமையல் பெயர சொல்லி
வயிறு நிறைய சாப்பிட்டதுபோல
வக்கணையான நிறைவைதருமே

தலையணைமந்திரம்


காதல் கொண்ட பைங்கிளியே
கடலலையாய் கனவை தந்தவளே

தலையணையின் காதுக்குள்ளே
தந்திரமாய் என்ன சொன்னாய்

போன மச்சான் திரும்பி வந்தாள்
வேனா சகவாசம் இவன்மேலென்று
விபரமாய் சொல்லிட்டாளோ
நிசப்த நேரவேளையிலே நிம்மதியை
தொலைத்த கதைய சொல்லு

தூங்க நானும் போகையிலே
தொந்தரவாய் வந்து போன
தொலைபேசியிடம் கேட்க சொல்லு
குறுஞ்செய்தி எழுதி எழுதி
கொடுமைபட்ட உன் மனதை கேளு

உறக்கம் வரும் போதெல்லாம்
உனையனைத்து கொள்வாளே
அவள் சொன்ன மந்திரத்தால்
அவதிபட்டது நீதானே
தந்திர கார ராட்சசியினு
சட்டமன்றத்தில் வழக்குத்தொடு

மக்கள் போற்றும் மாமனிதன்






கருணையுள்ளங் கொண்ட அப்துல்கலாம் ஐயாவே
நானும் உங்கள் தொப்புல் கொடி பையாதானே
மெய்ஞானம் பல கற்று அதில்
விஞ்ஞானத்தை வென்றவரே
அமுத மொழி பொழிந்தவரே-அதை
தேனமுதாய் நாவில் தினித்தவரே

பிரம்மசரியம் பூண்டு நிதம்
பெரும் தியாகிகளை வென்றவரே
எரிகணைகளை தான் செய்து
எதிரிகளை நிதம் மிரட்டியவரே

இலங்கையிலிருந்த மானிடர்களை
இறக்குமுன்பு வந்து பார்த்தவரே
காலங்களும் கடந்து போச்சி
கனவுகளும் இன்று கலைந்து போச்சி
இலட்ச்சிய கனவு கானுகின்றோம்
நிச்சயமாய் மீண்டும் பிறப்பீர்களென்று

கனவு பழிக்க வேண்டுமையா-தமிழ்
களைபிடுங்கி செழிக்க வேண்டுமையா
வருத்தம் வந்து உங்களை வாட்டியபோது
என்னுயிரை எடுயென இயமனிடம் சொன்னேன்
நீங்கள் விதைத்து சென்ற சிந்தனை விதைகளெல்லாம்
எனது மனச்சோலையிலே விருட்சமாய் நிழல் தருகுதையா
விண்ணிலிருக்கும் உங்கள் விம்பத்துக்கு
மண்ணிலிருந்து மலர் தூவுகிறேனையா

பசித்த வயிறு

 பசிக்க தெறிந்த வயிற்றுக்கும்......
ருசிக்க தெறிந்த நாவுக்கும்.......
வறுமையின் கொடுமை
தெறிவதில்லையே
இளமையில் வறுமை
கொடுமையென்று
எழுதி வைத்தான்
ஏட்டிலன்று
இறைவன் எதுவுமறியா பிஞ்சிகளை
வஞ்சனை செய்கிறான் இன்று
அண்ணா உண்ணும் சாதத்தை
அசந்து போய் பார்க்கின்றான்
ஒருபிடி தருவானோ அல்லது
உள்ள பசியை போக்கி கொள்வானோ
யோசித்து எதுவும் பயனுமில்லை
யாசித்து நிதம் புசிப்போமண்ணா
பசித்த வயிறு என்ன செய்யும்-இப்போ
பத்திகிட்டு எரியுதெனக்கு

ஆசிரியரெனும் அன்பு தெய்வங்களே!



ஆண்டவன் அருளிய ஆசிரிய தெய்வங்களே
அறிவை புகட்டிய அழகிய ரத்திணங்களே
இன்னொரு அன்னையான தாய்குலங்களே
இறைவன் படைத்த அன்பெனும் ஊற்றுக்களே
பொதுமொழி கற்றுத்தந்த பொக்கிசங்களே
பொறுமையில் சிறந்த புண்ணியவான்களே
கணிதத்தை கற்றுத்தந்த கணவான்களே
புனிதத்தை தன்னகத்தே கொண்ட புத்தன்களே
வரலாற்றை சொல்லித்தந்த வாத்தியார்களே -நீங்கள்
வரலாறு படைக்க வாய்ப்பை தந்தவர்களே
தமிழின் சுவையுணர்த்திய தளபதிகளே
கவி பாவலராய் தடம் பதிக்க செய்தவர்களே
பாடங்கள் பல புகட்டிய பாக்கியவான்களே –இன்றும்
மனதில் கல்வெட்டாய் பதிந்திருப்பது வாக்கியங்களே
பல்லாண்டு பல்லாண்டு வாழனும் தெய்வங்களே -அடியேன்
தலை வணங்கி வாழ்த்துகின்றேன் வாத்தியார்களே

ஆதங்கத்தின் அறைகூவல்







அறுவடையை நாள்தோறும் 
அள்ளி தந்தோம்
ஆயிர கணக்கில் அந்நிய செலாவணியை 
பெற்றுத் தந்தோம்
கொழுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும்
 யாம் கொழுந்தை கிள்ளி கிள்ளி தந்தோம்-நிதம்
கொடுமைபடுத்துவது உனது வேலையா போச்சி?
வந்தவன் வந்தவன் என்று தினம் வசை பாடுகின்றாய்
நீயோ வந்த திசை மறந்து தம் பூர்வீகமென்று
பொய் வேசம் போடுகின்றாய்
வட்டி வட்டியாய் கொட்டிய பணமெல்லாம்
கொழுந்து கூடையில் சுமக்க முடியாதே
அந்நியனின் நோக்க அசுர செயலானது
மூளையை இயங்கவிடாத  திட்டமானது-இதில்
தலை நரம்பு வேரெல்லாம் நசுங்கி போனது-
விட்டு விடாமல் தொடருவது வேடுவகுலம்.-
இதை வேடிக்கை பார்ப்பது மனிதகுலம்
 உரிமையை கேட்டால் ஓடிப்போ என்கிறாய்
வறிய மக்களை வஞ்சித்து வாஞ்சையடைகிறாய்
நாக்கென்ற ஆயுதம் சொல்வது நல்வாக்கு
நயவஞ்சகனாய் செயல்படுவது உனது போக்கு
அடி வயிறு பற்றி எரியுதுங்க
சிறு நொடியேனும் சிந்தித்து பாருங்க
நாங்கள்  நாட்டு பொருளாதாரத்தின் முதுகெழும்பு
நோட்டை தரும்வரை போராடுவது எங்கள் தெம்பு