கோதையரின் கொந்தளிப்பு


கொழுந்தை பறிக்குது கரங்கள்
கொதித்து எழும்புது கோதையரின் மனங்கள்
வதைத்தெடுப்பது உங்களது குணங்கள்
சிதைந்து போவது எங்களது இனங்கள்
நாட்டுக்கு எப்போதும் நல்ல வருமானம்
நோட்டை கொடுக்க ஏன் இத்தனைகாலம்
அட்டைப்பூச்சிக்கு எந்நாளும் ஆனந்தம்
அமைச்சர்களின் அகத்திலே நாளும் ஆரவாரம்
தேயிலை வேர்கள் கூட நாளும் வளரும்
தினந்தோரும் எங்கள் வறுமை ஊஞ்சலாடும்
பச்சையாய் பசேளையோடு தொடரும்பயணம்
பசுமையாய் மிளிர்வது இனி எந்தகாலம்?
இச்சையாய் பார்ப்பது இளைஞனின் சுபாவம்
நிச்சயமாய் ஊதியம் தருவது எந்தகாலம்?

தேயிலை செடியின் கீழே

தேயிலை செடியின் கீழே
தேங்காயும் மாசியும் 
திரண்டு வழியுதென்று
தேனான மொழி மலர்ந்து
திறமையாக தான் கதைத்து
திட்டமிட்டு அழைத்தானடி
திருட்டு கூட்ட மானிடனிங்கே
பஞ்சம் தலைவிரிக்க 
பாரதத்தை பாவி மிதிக்க
பசப்பு மொழிக்கு தான்மயங்கி
கசப்பு வழி கயவரென்று 
கண்கூடாய் காண தவறிவிட்டு
தஞ்சம் என தானினைத்து
தாய்நாட்டை தான்விட்டு
தாயகம் தேடி வந்தானடி
தல்லாடி மனம் நொந்தானடி-இதில்
தரங்கெட்டு போனானடி
அந்நியனின் ஆதிக்கத்தில்
அடிமைப்பட்டு வாழ்ந்தானடி

தென்னை மர உச்சியினிலே 
திரவியமாய் தொங்கும் தேங்காய்
கடல்தனிலே வசிக்கும் இனம்
கறுப்பு மாசி என்று மனம்
கருத்தாய் யோசிக்க மறுத்ததேனோ?
ஏமாற்று கூட்டமென்று 
இழிவாய் கதை வளர்த்து
இம்சை தர தொடங்கினானடி
நம் வம்சதனை தானழிக்க
வாய்ப்பை சிறப்பாய் கொண்டானடி

காடுகளை தானழித்து 
கச்சுதமாய் மலையமைத்து
உச்சிவரை தான் சென்று
உதிரத்தை உரமாய் தந்து
ஒவ்வொரு நாளும் மனம் நொந்து
உடுக்க உடை இழந்து 
படுக்க பாயில்லாமல்
நடக்க காலில்லாமல்
கந்தைதனை தானனிந்து
விந்தை பல தான் கண்டு
மந்தை கூட்டம் போல
மலைகளில் தானடந்து
வனம் என்று சொன்ன மனம்
பணம் என்றும் தந்த இடம்
பணத்தை மட்டும் பார்த்த இனம் 
நம்-இனத்தை மட்டும் வெறுத்த குணம்
இரு
னூறு ஆண்டு கடந்தும் 
எப்போ வரும் இன்பமென்று 
ஏங்கி தவிக்கும் இளைஞர்  குழாம் 
ஒளி எப்போ பிறக்குமென்று 
விழி திறந்து பறக்கும் வண்டு................

  


இயற்கையின் விந்தை 

தொடர்ந்து பெய்யுது மழை... 
துன்பப் படுகிறார்கள் மக்கள் அலை...... 
மண்சரிவு வருமோ என்ற கவலை..... 
மாயவனே பொழியப்பா அருள்மழை...... 
மறுக்காமல் ஏற்றுகொள் இவ்வேண்டுதலை.........
பசறை காவத்தை கனகராஜா

அப்பாவின் அமரத்துவ நினைவுநாள்

அன்புள்ள எனது தங்க அப்பா
அகிலத்தை விட்டு பிரிந்தது ஏனப்பா-இது
ஆண்டவனின் ஆழமான கட்டளையாப்பா-இதனால்
அன்புகொண்ட உறவுகள் தவிப்பது தெறியலையாப்பா
ஆண்டுகள் பதிமூன்றை கடந்தாலுமப்பா-நீங்கள்
அடிமனதில் பதித்து சென்ற நினைவுகள்
என்றுமே இதயத்திலிருந்து பிரியாதப்பா
நல்ல உள்ளங்களை வாழ வைப்பதில்
நாட்டமில்லை இறைவனுக்கப்பா-நாம்
அவதரித்த தரணியில் தனக்கென இடமில்லாமல்
போகுமென்று ஆண்டவனுக்கு பயமப்பா-ஆகையால்தான் உங்களின் ஆத்மாவை தன்வசம் இழுத்துக்கொண்டாரப்பா
நீங்க தெய்வ திருவடியில் அடைக்களம் புகுந்ததாளப்பா
இன்று யான் உங்களுக்கு திவசம் செய்கிறேனப்பா
ஒவ்வொரு நொடியும் உங்கள் நினைவுகள்-என்னை
ஊக்கபடுத்தனுமப்பா
உளமார யான் தங்களிடம் கெஞ்சி கேட்கிறேனப்பா.....உங்கள் ஆத்மா சாந்தியாக இருக்க ஆண்டவன் அருள்மழை பொழிவாரப்பா.....