தன்முனை

தாய்மொழி எம்
வாழ்வின் மூச்சாகும்/
பொதுமொழி புகுந்திட
தாயாய் உருமாறும்/

ஹைக்கூ

தண்டவாளம்/
எதிர்பார்த்து காத்து கிடக்கிறது/
தாய்பறவைக்காக குருவிக்குஞ்சு/

ஆவியில் கலந்த நாவினிக்கும் செந்தமிழே

செந்நீரில் கலந்திட்ட செந்தமிழ் ஓடையே//
நாவினில் நீந்தியே நற்சுவையும் அளித்தாயே//
மூச்சியிலும் பேச்சியிலும் முத்தமிழ் வடிவமாய்//
மூவுலக படைப்பிலும் முன்னிலை பிரவாகமாய்//
காசினியில் வலம் வரும் கன்னலே//
தமிழென்ற நெடுங்கணக்கில் தனித்துவமாய் மலர்ந்தாயே//
தாய்மொழியும் சேய்மொழியும் நாவினிலே உலாவிடவே//
தமிழனின் மரபணுவில் தனியாக உதித்தாயே//
உலகமொழி பிறந்திடவே உயிர்மெய்யாய் நீயாகி//
செந்தமிழில் நாவினிக்க
செயலாற்றிய தாயானாய்//
உன்புகழை நாம்பாட
உச்சரிக்கும் போதெல்லாம்//
மெய்மறந்து மேகநாதன்
வான்மழையும் பொழிந்திடுவான்//



ஹைக்கூ

அடர்ந்த காட்டில்/
அவ்வப்போது வந்து போகும்/
மயில் அகவும் சத்தம்/




ஹைக்கூ

பனித்துளிகள்/
எங்கும் பரவி கிடக்கிறது/
தேயிலைத்தூள் வாசம்/


தன்முனை கவிதைகள்

நினைவில் வாழ்ந்த
நிதர்சனமான உறவுகள் நீழும்//
கனவில் மட்டும் வந்து
போலியாய் கலைந்து போகும் //


ஹைக்கூ

குளத்தில் குளியல்/
பிரிந்து வழி விடும்/
படர்ந்திருந்த பாசி/




ஹைக்கூ



முளைத்த காளான்/
மீண்டும் எப்போது வருமோ/
அடைமழை/



ஹைக்கூ

புதிய கட்சி
கேட்க சலிக்கவில்லை
பொய் வாக்குறுதி
காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
new party
not boring
to hear false promises. 
Trans: Bommidi Mohandoss.