தன்முனை

மனிதனாய் வாழும்போது
மனிததுக்காக கிடைக்கும்/
தீய செயலால்
அடுத்தவர் ஊடாக இழக்கும்/



ஹைக்கூ

கண்ணாடிக்குள் கிளி/
எப்போதும் திறந்தே இருக்கும்/
துணையை தேடும் விழிகள்/



தன்முனை

நம்பிய மனிதனுக்கு
சொல்லாமல் வீடு செல்லுமாம்/
விளக்கம் கேட்க
காரணம் கூறி நகருமாம்/



ஹைக்கூ

கடும் வெயிலில் பாட்டி/
கவலையின்றி ஒதுங்கிய நிலையில்/
மரநிழல்/

கவிஞர்.காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

Old lady under hot sun/
Being on one side without worry/
Shadow of the tree

Translated by
Dr.Sivagamasundari Nagamani
Chennai

தன்முனை

தமிழர்களின் வாழ்வில்
தனித்துவமான தைத் திருநாள்/
புத்தாண்டு தொடங்க
வழியாய் பிறக்கும் நன்நாள்/



ஹைக்கூ

வைத்தியசாலை வளாகம்/
வந்துவிட்டு திரும்பியது/
டெங்கு நுளம்பு/

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

hospital premises
returned visiting
dengue mosquito

ஹைக்கூ

எப்போது திறப்பேன்
என்ற எதிர்ப்பார்ப்போடு
புதிய ஹைக்கூ புத்தகம்
காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

when will I open
awaiting with expectation
new haiku book


தன்முனை

மனிதனாய் வாழும்போது
மனிததுக்காக கிடைக்கும்/
தீய செயலால்
அடுத்தவர் ஊடாக இழக்கும்/



ஹைக்கூ

ஓடும் மிதிவண்டி
சேர்ந்தே பயணிக்கும்
குழந்தையின் எதிர்காலம்



தன்முனை கவிதை

வள்ளுவரின் வரிகளில்
வாழ்க்கையின் ஆற்றுப்படுத்தல்/
இன்றும் பயன் தருதே
எக்கணமும் கற்றுணர்த்தல்/

ஹைக்கூ

நாளைய பணியை செய்ய
இன்றே தயாராகிவிட்டது
புதிய நாட்காட்டி

கவிஞர் காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

For doing tomorrow's work/
It's ready today itself/
New calendar