தண்ணீர்


மலைதனில் ஊற்றெடுக்கும் மகத்தான தண்ணீரே/
மாந்தரின் தேவைகளை தீர்த்திடும் பன்னீரே/
நீயின்றி உயிர்கள் நிம்மதி அடையாது/
காடின்றி மழையும்
மண்ணில் பொழியாது/

யாழ்



இசையால் ஈர்க்கும் யாழ் ராகமே/
பசையாய் ஒட்டிய பரவச நாதமே/
ஓசையாய் உள்ளத்தில் ஊடுருவிய வேதமே/
காலத்தால் அழியாத காவிய மானயே/

கனாக்காலம்


கட்டுசோறு கட்டி தலையில் சுமந்து

கடகடவென கழனிப் பக்கம் விரைந்து
நெல்லுக்கு நீரை பாய்ச்சு முடித்ததுமே
நிறைவாய் உண்ட காலம் கனாக்காலமே

வான்மதி

மெய்ப்பிரத்தில் நீந்தி வளரும் வெண்ணிலாவே/
நுதலினிலே பதிந்து ஒளிரும் பெண்ணிலாவே/
சீதமதில் சேர்ந்து ஆடும் முழுநிலாவே/
சிந்தையெங்கும் மகிழுதடி  உன் வருகையாலே/

கிறுக்கல் #சித்திரம்



எழுதுகோலின் பெருமை அறியாப் பாலகனே/
கிறுக்கவே ஆசை கொண்டான் சுவரினிலே/
பிறந்ததே வண்ணச்
சித்திர உருவங்களே/
சிறந்ததே வருங்கால நம் செல்வங்களே/

மழலை உலகம்


மழலைச் செல்வங்களோடு மகிழ்வாய் ஒன்றுகூடி/

அழகிய பரவைதனிலே ஆனந்தமாய் நீராடி/
அந்திமாலை வேளையிலே ஆடிப்பாடி விளையாட/
குதூகலம் நிரப்பிடும் குழந்தைகள் உலகமே/

தனிமை

நினைவுகளை பரிசாய் கனவுகளில் தந்து/
உறவுகளை நீடிக்க பிரிவுகளை உணர்ந்து/
உன்னையே எந்நேரமும் மனதில் நுகர்ந்து/
உத்தமனாய் வாழ்வது தனிமையில் இனிமையே/

தலைப்பு-தாலாட்டு


ஓராட்டு கீதம் நான் இசைக்க/

உன் கண்களோ துயில் சுமக்க/
என் வேலைகளோ மீதி கிடக்க /
தாலாட்டு கேட்டு தூங்குடா கண்ணா

உழைப்பு



உருவமற்ற உன்னத கடின உழைப்பே/

உன்னை நேசிப்பதே எனது விருப்பே/
எதிர்கால வாழ்வில் இனிமை சேர்க்கவே/
என்னோடு கலந்தாயே
இன்னொரு மனைவியாய்/

தலைப்பு -கனாக்காலம்


கட்டுசோறு கட்டி தலையில் சுமந்து

கடகடவென கழனிப் பக்கம் விரைந்து
நெல்லுக்கு நீரை பாய்ச்சு முடித்ததுமே
நிறைவாய் உண்ட காலம் கனாக்காலமே

பௌர்ணமி நிலவு



சீதமான உடலோடு சிவக்காமல் வந்தாயே/

செந்தமிழ் வடிவாய் சீதேவியாய் கலந்தாயே/
உந்தனது வருகையாலேஉவகையும் தந்தாயே/
உள்ளத்திலே காதல் குளிர்ச்சியை பொழிந்தாயே/

சிந்தையில் சுமந்த தந்தை

#தியாக உணர்வை மனதில் சுமந்து
#சிசுக்களையே உயிராய் நினைந்து
காலத்தால் அழியாத #கற்பக விருட்சமே
#கனகராஜாவின் கருணைத் தந்தை

தனியே வாழ்வில் நீச்சலடித்து
தலைக்குனியா கம்பீரமாய் திகழ்ந்து
வாணியே நாவில் தவழ்ந்திட
#அமிர்தமாய் தமிழை நுகர்ந்திட
உயிரணுக்களுக்கு உயிரூட்டம் தந்த
உன்னத தெய்வமே #தகப்பனார்

#நகைச்சுவை பேசுவதில் நாகேசை தள்ளி
தாத்தாவின் செயல்களை #தமயனிடம் சொல்லி
கொஞ்சிப் பேசும் #பிஞ்சி உறவே
அறிவுத் #தந்தையே ஔசத மகவையே

விண்ணில் இருந்தால் #வீரமகனுக்கு ஆசி
மண்ணின் இருந்தால் #மகனுக்கு ராசி
எங்கிருந்தாலும் என்னை #தினம் பேசி
தங்கிவாழும் மனசே #அழகிய காசி

#தகப்பனார் என்பதோ தகப்பன் ஆனார்
#தத்துவம் சொல்லவே #மடலில் பதிந்தார்
#உண்மையான உணர்வை #உயரில் கலந்தார்
#உடம்பில் நுழைந்தே #நிமலனாய் பதிந்தார்

நினைக்காத நேரம் #நிலவும் மலரும்
மனைக்காக வீரம் தினமும் வளரும்
சிந்தையில் வாழும் அன்புத் தந்தையே
எ(இ)ன்றுமே வாழ்வின் #சுடரொளியே

அன்பென்றால்



அன்பின் அட்சயபாத்திரமானவளே
பண்பின் பாச கோர்வையானவளே
சித்தமெல்லாம் ரத்தம் நிரப்பி
சிறியதாய் பிம்பம் உருக்கி
காதலாய் வார்த்த திருமகளே

உயிரையும் உடலையும் கருவில் பூட்டி
வயிறையும் வாயையும் நிதமும் கட்டி
நினைவுகளும் கனவுகளும் அகத்தில் காட்டி
நிறையுணவாய் அன்பூட்டினாயே
எல்லையில்லா பாசம்
இனிதான பால் வாசம்
சிகரமெனும் உயிர் நேசம்
சித்தரித்தாயே முதல் சுவாசம்
உயிர்கள் வாழும் இவ்வுலகில்
ஒவ்வொன்றும் மாயைதானே
உன்னை மட்டும் கண்டேனம்மா
உண்மையான தெய்வமாக
தன் கவலையெல்லாம் மறந்து
என் நிலையை தினமும் உணர்ந்து
அன்பென்ற கோயில் கட்டி
அனுதினமும் பூசை செய்தாயே தாயே