எதிர்பார்ப்பு




இயனக்கூட்டை என்னவன் இடுப்பிலணிந்து!
இன்ப ஊற்றில் தென்னை மரத்தில் நகர்ந்து!
எழில்கொண்ட மங்கை இதனைக் கண்டு!
ஏக்கமுடன் கேட்டாள் என்னவென்று!
இது காதல் போதையல்ல....கண்ணே!
களிப்புடன் ஆடவர் பருகும் கள்ளு என்றான்.....

ஆடிக்காற்று

ஆடிக்காற்று  வீசுதையா!
ஆள  பிரட்ட   பார்க்குதையா!
தேநீர் தந்த தேயிலையே -இன்று
தேகம் மெலிந்து காயுதையா!
மலையகம் காத்த மாதாவோ -இன்று
மதி மயங்கி நிற்குதையா!
கயவர்களின்  தீய பழக்கத்தால் 
காடே பற்றி எரியுதையா!
நிவாரணம் தரும் நிர்வாகமென்று-மாந்தர்
நிம்மதி முச்சி விடுகிறார்களையா!
ஆடித் திங்களின்  அவலநிலையால்
ஓங்கி  வளருது வாழ்க்கை செலவையா!
ஆடி விழா  தொடங்கியதால்
அதிலே காலம்  கழியுதையா.........!இதிலே
அழகன் முருகனின் அருள் கிடைக்குதையா!

அந்தி நேர வானம்


திங்களின் தியாகம்

நிலவு தேவதையை முற்றுகையிட.....
நீந்திவரும் மேக கூட்டங்களே....
என்னை எத்தனைமுறை சுற்றி வலைத்தாலும்.... 
கதிரவனிடம் கடனாக ஒளியை பெற்று...
காதலர்களுக்காக ஒளியை தருவேன்....
இதுவே எனது சத்தியபிரமானம்
பசறை காவத்தை கனகராஜா

பசறை தேசிய பாடசாலையில் நடைபெற்ற கவிஞர் நீலாபாலன் அவர்களின் கடலோரத் தென்னை மரம் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் காவத்தை கனகராஜா அவர்களால் பாடப்பட்ட கவி வாழ்த்து

கவி வாழ்த்து சொல்ல வந்தேன்!
கவிஞரையா நீலாபாலனுக்கு!
கல்முனை மண்ணில் முளைத்த வித்து நீ!
கவி கடலில் விளைந்த முத்து நீ!
பதுளை சரஸ்வதியில் பனுவல் வெளியிட்டாய்!
இன்று பசறை மண்ணின் முத்திரையிட்டாய்!
உம்மை ஆலாபிப்பது அற்சரத்தாலா? அல்லது
அழகிய மலர் புச்சரத்தாளா?
பாமாலை பாடிச்செல்வார் பலகோடி இன்று
கவிமாலையில் வாழ்த்த வந்தேன் பலர்கூடி
கடலோரத் தென்னைமரம் தந்த காற்று- இன்றும்
உடலோடு உரசி செல்லுது எம்மை பார்த்து!
மட்டகளப்பில் மலர்ந்த மன்னன் நீ!
மலைகவி வட்டத்தில் விளைந்த மதியுக மைந்தன் நீ!
கவிதைக்கு நான் அன்று கன்றுக்குட்டி!
கவி கற்றுத்தந்த நீரோ எந்தன் செல்லக்குட்டி!
கிழக்கில் உதித்த புதல்வன் நீ!
ஊவாவில் இணைந்த உன்னத மாப்பிள்ளை நீ!
கவண் கொண்டு விரட்டுவார்கள் பறவைகளை!
பணம் கொண்டு திரட்டுவார்கள் உன் பனுவல்களை!
தொலைபேசியில் அழைப்பு தந்தீர் அன்று! – இன்றும்
விலைவாசியாய் உயருது உனது அன்பு!
வாழ்க உனது கவிச்சேவையையா!
வாழ்நாள் முழுக்க எங்களுக்கு தேவையையா!
நீடூடி வாழ்க நீலாபாலனே!
நிதமும் வாழ்த்துகின்றேன் கவியுடனே!
கவிதைக்கு நீர் சக்கரவர்த்தி!
களிப்புடன் வாழ்த்த வந்தேன் கைகள்தட்டி!

எனது ஊர்





காவத்தை ஊரடா!
கற்பக சுரங்கமடா!
வீதியோரம் விழாகோலம்!
பலா மரங்களின் வர்ணஜாலம்!
குழந்தை முதல் முதியோர் வரை
பசிதீர்க்கும் கும்பகோணம்!
அறிவாளர்களை உறுவாக்கிய
அற்புத கலாசாரம்!
மான்புமிகு மனிதர்களின்
மதிக்கதக்க மந்திரஜாலம்!
நான் பிறந்தது காவத்தையா?
அல்லது என்னை பெற்றது காவத்தையா?
கோணக்கலை தேசமடா!
கொண்டாடுவது சிறப்படா!
பிறந்த மண்ணடா பெருமிதம் கொள்ளடா!
மாதாவை போற்றடா! மறுபடியும் பிறந்திடடா!
தோணிகள் இல்லாவிடினும் தோல்விகள் இல்லையடா!
சமுத்திரம் இல்லாவிடினும் சரித்திரம் படைக்குமடா!
முத்திரை பதிக்குமடா முத்தான காவத்தையூரடா!

என் இதயம் சந்தித்த இனிய காதல்

அன்பான ஜெயந்தி!
ஆனால் நீ ஒரு செவ்வந்தி!
நீ எழுதிய மடல்களோ தினதந்தி!
என் மனதில் தினமும் குந்தி!
என்னைப் பற்றி என்னாலும் சிந்தி!

டெங்குவை ஒழிப்போம்

ஆதியில் வந்தது சிரங்கு!
அதிரடியா வந்தது டெங்கு!
அதனால ஊதுராங்க சங்கு!
அனைவரும் செலுத்த வேண்டும் பங்கு!
செட்டிபாளயத்தில் குடிக்குராங்க நுங்கு!
சிறட்டையில் உருவாகுது டெங்கு!
பசறையில் வந்தது டெங்கு!
பலருக்கு அடையாளங் கண்டு!
ஒரு கிழமையில் ஒருநாள் நின்று!
உருப்படியா துப்பரவு செய்து கொண்டு!
உயிர்வாழ வேண்டுமென்று வந்து!
உதரி சென்றார்கள் கண்டு!
இனியாவது இடையில் இறக்காமல் இருந்து!
இன்பமயமாக வாழ்வது நன்று………

காதலின் திருப்பம்

வைகறையில் தானெழும்பி
வாகணத்திற்கு நிற்கையிலே
வஞ்சியவள் கொஞ்சிகொண்டு 
வழக்கம் போல வந்தாளையா 
கால்கடுக்க காத்திருந்த காதலனோ
காதல்தனை சொல்வதற்கு- பதிலாக 
கன்னியவள் காதல்தனை மலர்ந்தாளையா.

காதலின் தவிர்ப்பு

ஈருருளியில் நான் போகையிலே......
என்னவளின் ஞாபக அலையினிலே.....
உள்ளத்து காதலென்று சொன்னவளே.....
உதட்டினில் பொய்யை உரைத்தவளே.....
நடிப்பினில் திலகத்தை மிஞ்சியவளே...
நலமுடன் நீ வாழ நாமகளை நான் வேண்டுகிறேன்........
………………………………………………………………

அன்னபூரணம் எனும் அம்மம்மா
அகிலத்துக்கு பரிசளித்தது எனதம்மா
அம்மாவின் நாமமோ தங்கம்மா
அறிவை புகட்டுவதில் வள்ளலம்மா
அம்மாவின் அகவையோ அறுபத்துநான்கு
அகம் மகிழுது அதனை கண்டு
வாழ்க தாயே இன்னும் பல்லாண்டு-என்றும் 
வாழ்த்துகின்றேன் உங்கள் கல்கண்டு.........

அம்மா




















அன்னபூரணம் எனும் அம்மம்மா
அகிலத்துக்கு பரிசளித்தது எனதம்மா
அம்மாவின் நாமமோ தங்கம்மா
அறிவை புகட்டுவதில் வள்ளலம்மா
அம்மாவின் அகவையோ அறுபத்துநான்கு
அகம் மகிழுது அதனை கண்டு
வாழ்க தாயே இன்னும் பல்லாண்டு-என்றும் 
வாழ்த்துகின்றேன் உங்கள் கல்கண்டு
.........

சொல்லடா கவிதை தம்பி....

சொல்லடா கவிதை தம்பி...
சுகமான காலை பொழுதில்
பொங்கு புதனில் கவி சொல்லு
புதிய கவிஞர்கள் திரும்பி பார்க்க
பாமர மக்களுக்கு விளங்கும் படி
பக்குவமான கவிதை சொல்லு
உலக மக்கள் வாழ்வில் உயர
உன்னதமான கவிதை சொல்லு
மாணவர்கள் மனதினிலே
மதியூகம் வளர கவிதை சொல்லு
சமத்துவம் ஓங்கி வளர

மகத்துவமாய் கவிதை சொல்லு....

தந்தையர் தினமொன்றில்

அறிவின் இருப்பிடம்  தந்தை
நான் உங்கள் அறிவில் வளர்ந்த குழந்தை
தந்தையர் தினத்தில் உமக்கு ஆலாபனம்
தன்னிகரில்லா  மண்ணில் என்னை விதைத்தமைக்கு
பகிர்ந்து அறிவு நல்கியதால்
பாதியில் இறைவன் எடுத்துவிட்டான்
பள்ளிக்கு செல்லடா மகனே
பக்குவமாய் கற்றுக் கொள் உடனே
எதிர்காலம் இயந்திரமாய் இயங்கும்
கலிகாலம் சுதந்திரமாய் கொல்லும்
அன்பில் விளைந்த ஆறமுதே
பண்பில் விளைந்த ஆறாக்கனியே
விண்ணில் வாழும் தந்தைக்கு 
தன் முயற்சியில் நீ வாழ 
தரணி விட்டு நான் சென்றேன்
விண்ணில் வாழும் தந்தைக்கு

மண்ணிலிருந்து மகனின் ஆலாபனம்

காதலின் மோகம்

புரிந்துணர்வு வேண்டுமடி
பிரிந்துணர்வு வேண்டாமடி
நேரத்திற்கு வரலேயடி
நேயம் என்றும் குறையாதடி
நீ எனக்கு இருக்காயடி
நான் உனக்கு உண்டேனடி
சந்தேகம் கொள்ள வேண்டாமடி
சந்தோசம் என்றும் அழியாதடி
மஞ்சம் என்றும் ஏங்குதடி
கஞ்சம் கொள்ள வேண்டாமடி
சினம்  கொண்ட வதனமடி
சிகப்பாய் இருப்பது சிறப்படி
காத்திருக்க வேண்டாமடி

காதலிக்க நான் வாறேனடி

அன்னை ஈன்ற அழகியவூர்

மடுல்சீமை  ஊரடா

மாதாவின் பிறப்பிடமடா
மஹாதோவ  குரூப்படா
மகிழ்ச்சி கொள்வது சிறப்படா
புகுந்த ஊரு புகழுதடா
பிறந்த ஊரு பெருமை கொள்ளுதடா
நாள் முழுவதும் சீதமடா
நன்றாக மக்கள் வாழ்கிறார்களாடா
காளி கோயில் வீதியடா
கருணை  தேவியின் இல்லமடா
சிறு வயதில் சென்று இருந்தேனடா
சித்தியின் அறவனைப்பில் வாழ்ந்தேனடா
தாத்தாவின் நாமத்துக்கு தனி இடமடா
தக்க வைக்கிறார்கள் தமயனடா
சித்திக்கு தேநீர் கொண்டு சென்றேனடா
சிறுதுண்டு ரொட்டியை பகிர்ந்து உண்பாலடா
மறக்க முடியாத மடுல்சீமையூரடா
மதிப்பு மரியாதைக்குரிய ஊரடா
மடுல்சீமை சதாசிவமடா
கவி உறவுகளின் பிதாமகனடா
அமுனுதோவ டிவிசனடா 
அன்பு அம்மாவின் அடித்தளமடா
மடுல்சீமையூர் செழிக்கனுமடா
மகிழ்ச்சியில் மாந்தர் வாழனுமடா