கடனும் வட்டியும்



தன்னிடம்  வாங்கிய இரவல்தனை
தந்துவிடுயென்றது   ஆழி
தாமதித்து தருவதாக உறுதி
பூண்டது கார்மேகம்
வரட்சியின் கோரத்தால்
வரண்டுப்போனது  பூமி
அதர்மத்தின் அதிகரிப்பால்
அழிந்துபோகுது நீதி 
உடனே தா! உயிர்நண்பனே!
உயிர்கள் அழியுது நாள்தோறுமே!
சினத்தின் வேகத்தால் சீன்ட
நினைத்தது மேகம் 
அடைமழையாய் 
அள்ளிதெளித்தது 
வட்டியும் கடனையும்!
கடனைதானே திருப்பி
கேட்டேன் தோழனே
கனத்த  உயிர்களை 
காவு கொண்டது
ஏன்  முகிலா!
கடனை மட்டும் கேட்டிருந்தால்
கச்சுதமாய் தந்திருப்பேன்
வட்டியுடன் கேட்டதாள்தான்
வாரி வழங்கிவிட்டேன்
அநியாயத்தை கண்டு தினம்
அமைதிகாக்க முடியாதெனக்கு 
அழுத அழுத  கண்ணீரையெல்லாம்
ஆத்திரத்தில் தூவிவிட்டேன்!
வட்டியுடன் தந்ததாள்தான்
கெட்டியாக உயர்ந்ததுவே
பொய்கைகளின்  நீர்மட்டம்!
தனப்பேராசை கூடியதால்
தாண்டவத்தை ஆடலானேன்
தர்மத்தை கூட்டி
அதர்மத்தை விரட்டி
ஆன்மீகத்தை ஊட்டி
அகமகிழ்ந்து அன்பாய்
வாழ வாழ்த்துகின்றேன் 
என்றது அழகிய வானம்



6 comments:

Unknown said...

அருமை அருமை :)

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT TO KNOW YOUR POEMS! READ MORE! WRITE MORE POEMS & STORIES ON UC TAMILS' LIFE & PROBLEMS!

கனகராஜா கனகராஜா said...

நன்றி தாஸ்

மேமன்கவி பக்கம் said...

அருமை

கனகராஜா கனகராஜா said...

lot of thanks mr shan nalliah i will do it

கனகராஜா கனகராஜா said...

நன்றிகள் மேமன்கவி அவர்களே!

Post a Comment