ஏமாற்றம்

கனவுகள் பற்பல கண்டும்
நினைவுகளை நாளும் சுமந்தும்
அம்சமான பெண்ணொன்று தேடி
அலைந்த நாட்கள் அறிந்ததாரோ

எத்தனையோ பாவைகள் தேடிய போதும்
இவனை தேடிய இத்துணையை கண்டு
வடிசத்தில் சிக்கிய மீனைபோல
புழுவை கண்டு ஏமாந்ததேனோ

மீலம் காட்டும் காட்சியெல்லாம்
மெய்யாய் உணர முடியாதுதானே
இயற்கை செப்பும் இம்சைகளை
எளிதில் உணர முடியாதன்றோ

ஏமாற்றம் கற்பித்த படிப்பினைகள்
எண்ணம் முழுதும் பதிந்திருக்கு
எடுத்தியம்ப முடியாது  மெய்ப்பிரமாய்
மாறியிருக்கு

தோற்றுப்போன  சம்பவமெல்லாம்
துளிர்விட்டு வாழ்த்தும்போது
ஏமாற்றி வாழ்ந்த கூட்டத்திற்கு
என்றோ  பாடம் புகட்டிடுமன்றோ

 

சொன்னது நீதானா?

காதலென்ற வலை வீசி
கச்சிதமான மொழி பேசி
இதயங்கள் இரண்டற கலக்க
இன்புடன் வாழ்வோமென்றது நீதானா?

உண்மைக் காதல் ஊற்றெடுக்க
ஊமை நினைவுகள் மெதுவாய் சிரிக்க
மிதிவண்டியில் செல்கையிலே
மென்மையை உணர்த்தியவள் நீதானா?

பிரியாத வரம் கேட்டு
சரிபாதியாய் உயிரில் கலந்து
பிரார்த்தனை செய்த மனமின்று
பெருமிதத்துடன் வாழுதிங்கே

சொன்ன சொற்களும் சோர்வுற்று
சுவீகரித்த மனமும் திகிழுற்று
தனிமையில் இனிமை பெற
தவிக்கவிட்டவளும் நீதானா

நிலையாமையின் வெளிபாட்டை
நீயோ மெதுவாய் கற்றுத் தந்தாய்
நிம்மதியாக வாழ்ந்திடவே மீண்டும்
நீந்தி கரையை கடப்போம் கண்ணே

பழனியாண்டி கனகராஜா
நி.மு-1197

நிலவின் நகல் நீ

நிலவின் நகலே நீ
நீந்தும் தாரகையும் நீ
ஞாலத்தில் மலர்ந்த நந்தவனமும் நீ
நறுமணம் வீசும் சுகந்தமும் நீ

வானத்தில் தாரகைகள் இருபத்தேழு
வந்துதித்த தங்கரதம் நீதானே தேனு
விரல்களின் மகுடங்கள் மின்னியதும்
விரசங்கள் மௌனமாய் தூங்கியதே

அசைந்து வரும் அன்னமே
அகிலத்தின் முதல் சின்னமே
சீதமாய் சிரிக்கும் சின்ன நிலாவே
சித்தமெல்லாம் குளிருது உன்னாலே

இரவென்றாலே உந்தன் நினைவு
இன்பமென்றதும் பறக்கும் மனது
பிரம்மனுக்கோ பெரிய களிப்பு
உனை பார்த்ததும் உடனே திகைப்பு

வானத்து தேவதைகள் வாழ்த்து முழங்க
வடிவாய் ஆடிடும் மயிலும் தாங்க
உனை பார்த்த உள்ளங்களுக்கு
போட்டி போட நிலாவை இறக்கு

இம்மையிலே படைப்புகள் பலகோடி
செம்மையாய் பிறந்தவளே நீதானடி
நிலாவின் வாழ்க்கையோ நிர்க்கதியே
நிம்மதியான விம்பம் நீதான் ரதியே

வசந்தங்களே வாழ்த்துங்களேன்


இருமனம் இணைந்த திருமணத்திலே
நறுமணம் வீசப்போகும் நந்தவனமே
பிறந்த வீட்டுக்கு பெருமையையும்
புகுந்த மனைக்கு புகழையும்
ஈட்டித் தந்திடு இனியவளே
அன்பை தெளித்திடு அன்னமே
ஆயுள்வரை வளரும் இன்பமே
அன்பென்ற அத்திவாரத்திற்கு
அடிக்கல்லாய் சென்று
தியாக நிறத்தால் சித்திரம் வரைந்து
சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றேன்
செல்லமே

நினைத்தாலே இனிக்கும்


நினைத்தாலே இனிக்கும்
நினைவுகளோ நாளும் புளிக்கும்
மசக்கையின் இணக்கம்
மனதிற்குள் பிறக்கும்
பிண்டத்தின் ஏக்கம்
பேதைமையை மறக்கும்
பிறந்ததும் சுவர்க்கம்
பேரன்பின் மயக்கம்
மழலையர் இயக்கம்
குவளையாய் சிறக்கும்
நித்திரையின் சிம்மம்
நீந்துவதோ தாய்மனம்
நினைத்தாலே இனிக்கும்
சுவைத்தாலே திகட்டும்

தாய்மையின் கனவுகள்


தாய்மையின் கனவுகள்
தளராத தங்க நினைவுகள்
பதினைந்து நிமிடங்களில் மலரும்
பளிச்சென்ற மாணிக்க வைரங்கள்


மனதென்ற மாளிகையினை
மாதக்கணக்கில் சோடினை செய்து
பத்துத் திங்கள் காத்திருந்து
பாரினில் கொண்டாடும் திருவிழாவே

நல்ல பிள்ளையாய் தான்பிறக்க
நாடிய கோயிலோ பல இருக்க
மென்மையெனும் மேனியை கொண்டு
பெண்மையை போற்ற பிறந்த கனவு

கலைகள் பற்பல நித்தம் கற்று
அலைகளாய் படர்ந்த அருமந்தக் காற்று
சுவாசபப் பைக்குள் தானே நுழைந்து
சுகமாய் சுற்றிய சுந்தரக் கனவிதுவே

பிறந்த ஊரும் புகுந்த ஊரும்
பெருமை பல பேசிட எண்ணி
தூக்கம் கூட இல்லாமல் தினம்
ஏக்கமாய் கண்ட இனியக்கனவு

எழுபவத்தோடு இம்மையில் உதித்த
இன்னொரு தெய்வம் இவளிருக்க
ஒவ்வொரு கனவாய் மீண்டும் காண
ஒத்திகை காட்ட பிறந்துடு மகனே

கனவுகளும் பழிக்க வேண்டும்
பட்டபாடுகளும் ஒழிய வேண்டும்
அரங்கேற்றம் யானும் செய்திடவே
அவனியில் எப்போ பிறப்பாய் கன்னா

கலைவாணியின் பாணி


சரஸ்வதி பூசை இன்று
சகாக்களோடு தொழுதேனே அன்று
வைகறையிலே தானே எழுந்து
ஆசையோடு ஆற்றிலே குளித்து
வண்ண மலர்களையெல்லாம் கொய்து
வாஞ்சையோடு பள்ளியறை சென்றோம்

பாதையோரம் பூத்துக் குழுங்கும்
பலகோடி மஞ்சற் பூக்களையெல்லாம்
ஆர்வத்தோடு அவசரமாய் பரித்து
நேர்த்தியாக பையிலே குவித்து
நிர்வாகத்திடம் கொடுத்ததுமே
நிறைவாய் மனதிற்கு இருந்ததுவே

பாமாலை நாமும் பாட
பரவசமாய் நாமகளும் கூட
பக்திமயம் சக்தியாய் பிறந்து
பாலர்கள் மனதில் கலந்துவே

பூசையும் இனிதே நிறைவு பெற்றதுமே
பொங்கலை கதவருகே கொண்டு வந்ததுமே
பந்தி பந்தியாக நாமும் வந்துமே
பகிர்ந்து உண்டோம் நட்பூக்களோடுமே

பக்தி சக்தியும் இரண்டற கலந்து
புத்தியும் சித்தியும் தூய்மை மலர்ந்து
பாகுபாடு ஒன்றும் தெரியா
பச்சிளங் குழந்தையாய் கற்றோம் யாமே

ஆன்மீகச் சுவையும் அகத்திலூற
இன்சொல் கல்வியும் தேனாய் சேர
நல்லெண்ணம் ஊட்டி வளர்த்த
நாற்குரவர்களுக்கும் நன்றியையா

அகரத்தின் சிகரம்
அகரத்திற்கு  அத்திவாரமிட்ட  அறிவுக்கூடமே
அதுவே யான் பயின்ற இப்பள்ளிக்கூடமே
காவத்தையிலிருந்து கல்லூரிக்கு இரண்டு கட்டை
கல்வியை கற்பதிலே நாங்கள் காய்ந்த சிரட்டை
ஓடியோடி சளைத்தவர்கள் ஏராளம்-நித்தம்
தேடித்தேடி படித்தோமே தேவாரம்
காலையிலே தொடங்கிடுவார்  மேலதிக வகுப்பு
காலக் கிரமத்திற்கு வருவதே எங்களது சிறப்பு
தோட்டப்
பாடசாலையாய்  தொடங்கிய  கல்விக்கூடமே-இன்று
ஆயிரம் கல்விசாலையாய்  அங்கீகரித்த அறிவுச்சுரங்கமே
எண்ணற்ற பட்டதாரிகளை  ஈன்றெடுத்த தாயே
கவிஞனாய் மிளிர்கின்ற  நானுமுந்தன் சேயே
ஆசிரியக் குழாம்களின்  அயராத  விடாமுயற்சி
அதுவே  நீ   கண்ட  அற்புத  வளர்ச்சி
ஆண்வனுக்கு அழகிய நாமமோ பதியையா
அறிவூட்டிய தேவரோ நடணசபாபதி ஐயா
அமரர் இளங்கோ ஐயாவின் தியாகம்
ஆத்மா சூடிகொண்டதே இம்மகுடம்
நல்குணம்  கொண்ட  எண்  நவமென்பார்கள்
நல்வழிக் காட்டிய மகான் நவரத்தினமென்றார்கள்
கோணங்கள்
 கணிதத்தில்  பல  உண்டு
கோபுரமாய்  உயர்ந்துவே  கோணக்கலை  இன்று
சரித்திர விதைகளை விதைத்து விதைத்து
சாதனைகள்
பல படைத்து படைத்து
படர்ந்த  விருட்சமாய்  பார் போற்ற  வாழ
பாவலனாய்
 உன்னை வாழ்த்துகின்றேன்
வாழ்க வாழ்க நீ பல்லாண்டு
வாழ்துகின்றேன்  உன் கற்கண்டு
வாழ்க வாழ்க மாணவர் குழாம்
வளர்க வளர்க நமது மனிதகுலம்
கவிஞர்
 பழனியாண்டி கனகராஜா