தந்தையின் தாய்மை

ஆயுள் வரை எமை சுமந்து/
அத்தனைத் தியாகத்தையும் வாழ்வினில் கடந்து/
நிறைமாதத் தாயாய் நேரிலே உதித்த/
நிமலனே உன் பணி நிறைகுடமே/




முத்தம்


கருவறை தூளியிலே களிப்போடு விளையாடி/
முன்னூறு நாட்களிலே முழுமையாக வெளியேறி/
அன்னையின் அரவணைத்த முத்த மழையும்/
ஆனந்த ஊஞ்சலிலே ஆடிய உணர்வும்/
மீண்டும் பிறந்து பெற்றால் சுகமே/








நோய்களே வெளியேறு

உலகையே ஆட்டிப் படைக்கும்
உயிர்க்கொல்லியே//

உன்னைப் பிரசவித்த
கருவறையும் தெரியலையே//

அரைமுதல் அம்பலம்வரை
ஆவேச உன்னாட்சி//

அழிவை நோக்கி
பயணிப்பதா உன்முயற்சி//

மண்ணுலகில் வாழ்ந்திடவே
ஆசையுறும் மாந்தர்களை//

கண்களிலே காட்டாதபடி
கண்முன்னே மாய்ப்பதேனோ//

வந்தவழி திரும்பி விடு
வசந்தகாலம் திருப்பிக் கொடு//

உன்பெயரை உச்சரிக்க
உள்ளுணர்வு வெறுக்குதிங்கே//
உடனடியே உலகை மறந்து
ஓடிவிடு பெருபிணியே//

நோகாமலே வெளியேறு நுண்மியே//

நோய்களையெலாம் நொடியில் விரட்டியே//



தன்முனைக்கவிதை


ஊஞ்சல்

மாலையில் மயக்கும் மன்மத கானமும்/
மாருதம் தேடும் மங்கையின் தேகமும்/
ஒய்யாரம் ஆடும் ஊஞ்சலின் அழகும்/
ஆரோக்கிய வாழ்வில் ஆன்றோர் உரைத்தும்/
நவீன உலகில் நடத்துபர் யாரோ/






மின்னலாய் ஒரு பின்னல்

ஆரணியம் என்றால் அர்த்தமோ காடு/
அழகாய் மேயுதே ஆடு/
மழையின் வரவையே நாடு/
மகிழ்வாய் நனைந்தே கீதம் பாடு/

ஹைக்கூ


ஹைக்கூ


காதலும் காதலியும்


இதயங்கள் பேசிய இனிய மொழி/
இரண்டற கலந்த இன்ப ஒளி/
அன்றில் புள்ளாய் அரவணைத்த நதி/
ஆனந்தமாய் ஓடுதே காதலும் காதலியும்/



விழி தேடுதே உன்னை



மூவாறு வயதினிலே முக்கனியாய் சுவைத்தவளே
முத்தமிழின் வடிவினிலே மூச்சாகி
திகழ்ந்தவளே//

திக்கெல்லாம் உன்னுருவம் திருவிழாக் காட்சியாக
தேடியே அலையுதடி
திருட்டுப்போன மகவையாக//

அன்பை விதைத்து நீ உறங்க
ஆசைக் காதலை நான் பருக
பாதுகாப்பு வேலிதனை பார்வையிலே இட்டதாரோ//

மனதில் ஓடும் காதல் நதி
மாமனைப் பாடி விழி யசைக்க
விண்மீனின் விழியாலே விவேகமாய் தேடுதடி//