காதலின் உயிரோசை


எண்ணமெனும் மேடையிலே

இசைக்கும் என்னவளே

கன்னலாய்ப் பாட்டிசைக்கும்

பாடகியும் நீதானே

கன்னக்குழி ஓரத்திலே

கயல்மீனும் நீந்தயிலே

உள்ளமெனும் முற்றத்திலே

உயிரோசை கேட்குதடி


மழைத்துளியின் ஓசையிலே

மாயமாய் வந்தவளே

மல்லிகைப்பூ மணம்போல

உயிரினில் கலந்தவளே


தென்றலுமே பாடாதத்

தெம்மாங்கு ராகத்திலே

தேன்மதுர பல்லவியை  

திகட்டாமல் வடித்தாளே


உயிருக்கும் உடலுக்கும் உள்ளதா தூரம்

உண்மையான பக்தியே ஓயாமல் நீளும்

அன்பினது உணர்வை அறியவா முடியும்

அழியாது  வாழுமே நம் தெய்வீககானம்


கட்டிளம் பருவமும் காதலரின் மோகமும்

காற்றிலே கலந்து கருவறையில் சேரும்

நெற்றிலே மலர்ந்த நிலையான பிரவாகம்

நெஞ்சமே நீதானே உயிரின் தனிராகம்




ஹைக்கூ


ஹைக்கூ

நிசப்த இரவு/
வேலியில் எட்டிப் பார்க்கின்றன/
ரோசா  மலர்கள்/

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா 

noiseless night
peeps out from fence
rose flowers.

Trans: Bommidi Mohandoss.






ஹைக்கூ


தன்முனை

சந்திப்பு மகிழ்வூட்டும்
சந்தோச மழைத்துளியாய்
சங்கடங்கள் கலைந்திடும்
எண்ணங்களின் உதயமாய்



ஹைக்கூ


பசுமை வயல்/
பதுங்கி இருக்கிறது/
கடன் கொடுத்தவனின் காசு/



ஹைக்கூ


கடின உழைப்பு/
நாளுக்கு நாள் அதிகரிக்கிறது/
முகாமையாளரின் அராஜகம்/


ஹைக்கூ


குடிசை வீட்டில்/
புதிய வரவாய்/
ஓட்டையில் நிலா/


பூக்கள் பூக்கள் நேரம்

ஆதவன் ஒளியால்
           அனைத்தும் துளிர்க்கும்/

ஆண்டவன் வழியால்
                       அற்புதம் நடக்கும்/
பூக்கும் மலர்கள்
           புன்னகை சேர்க்கும்/
புத்தம் புதிய
                      பொழுதும்  வாழ்த்தும்/
சித்தம் கவர்ந்த 
                   அத்தனை மலர்களும்/
சிந்திய வாசத்தால் 
               எண்ணங்களும் மகிழும்/
வாழ்க்கையின் தத்துவமதை
          வைகறையில் உணர்த்தும்/
வசந்தகாலமாய் மாறியே
      வண்ணத்தமிழாய் மணக்கும்/



தன்முனைக் கவிதை


கரையை தாண்ட
அலைகள் நாடும்/
முயற்சியின் குருவாகி/
படிப்பினை ஊட்டும்/



ஹைக்கூ

காலைச் சூரியன்/
தினமும் வந்துபோகும்/
மணிப்புறா/

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

dawning sun
goes coming daily
spotted dove.




ஹைக்கூ

காலைச் சூரியன்/
தினமும் வந்துபோகும்/
மணிப்புறா/

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

dawning sun
goes coming daily
spotted dove.


ஹைக்கூ

போட்ட கோலத்தை பார்த்து/
பூரித்துவிடுவதில்லை/
பூக்களை தூவிய மரம்/.

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

not getting elated
seeing the kolam drawn
tree having strewn flowers .

Trans: Bommidi Mohandoss.

ஹைக்கூ


ஹைக்கூ

எழுதிய கவிதைக்கு/
எப்போது கிடைக்குமோ/
மனநிறைவு/

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
poem writing
when be attained
satisfaction.

தன்முனைக் கவிதை -முதுமை

இளமைக் காலம்
      எண்ணத்தில் பூக்கும்
முதுமைக் காலம்
     ஓய்வை ஒலிக்கும்



தன்முனைக் கவிதை -இதயம்

இதயத்தின் பார்வையால்/
காதல் மலர்ந்திடும்/
இல்லற வாழ்வினில்/
இனிமையை தந்திடும்/



ஹைக்கூ

குளத்து நீரில்/
கும்மாளம் போடுகிறது/
வானத்து நிலா/




ஹைக்கூ

குளத்து நீரில்/
கும்மாளம் போடுகிறது/
வானத்து நிலா/



தன்முனைக்கவிதை


கடின உழைப்பால்/
கிடைப்பது விருதாகும்/
காலம் கடந்தும்/
மனதிலே அசைபோடும்/



ஹைக்கூ


தன்முனைக் கவிதை



வசந்த காலமென்றால்/
வாழ்வோ மகிழ்வாகும்/
வானத்து தேவதைகளோ/
வாழ்த்தி கீதம் பாடும்/


ஹைக்கூ



ஹைக்கூ

பரீட்சை நேரம்/
பாதியில் வந்து போகும்/
வகுப்பறை நினைவு/



ஆத்மேட்டு ஆலமரம்


ஆத்துமேட்டு ஆலமரம்
அடியினிலே களுங்கடியான்/
ஊருமக்கள காத்திடவே
ஒத்தயாக காவலிருப்பான்/
பள்ளிக்கால பருவத்திலே
துள்ளி நாங்க வந்ததுமே/
வாதுல தொங்கி ஆடிடவே
வசதியாக எமக்கு இருந்ததுவே/

ஆடிப்பாடி முடிஞ்சதுமே
அடிவயிற பசி கிள்ளியதும்/
காய்ச்சிருந்த ஆலம்பழம்
    கனிவா பசி போக்கியதே/
எங்க ஊரு ஆலமரம்
   எல்லோர் மனசிலும் வாழும்மரம்/
எல்லையில்லா இன்போம் தந்து
  எப்போதும்  நிழல் பரப்பும் மரம்/

ஒத்தயா நாங்க போனாலும்
ஒட்டுமொத்தமா ஆடிப் பாடினாலும்/
பெத்த புள்ளகல போல எம்மை
     பேதமின்றி  ஆதரிக்கும் மரம்/




தன்முனைக் கவிதை

அன்பு
********
தூய அன்பினால்/
வாழ்வோ செழிப்பாகும்/
போலி பாசத்தால்/
பிரிவோ குடிகொள்ளும்/


Hykki world record


ஹைக்கூ


உழைப்பாளர் சிலை/
ஒதுங்கியே இருக்கிறது/
ஊதிய பேச்சுவார்த்தை/






தன்முனைக்கவிதை

பெய்த மழையால் 
பேரானந்தம் உழவனுக்கு/
அறுவடை நன்நாளில்
செல்வமோ குடும்பத்துக்கு/



ஹைக்கூ

பழைய வானொலி/
இன்னும் அப்படியே இருக்கிறது/
அந்தநாள் ஞாபகம்/



ஹைக்கூ


பசுமை வயல்/
பார்த்ததும் மனதை கவர்கிறது/
சோளக்காட்டு பொம்மை/




குளத்து நீரில்/
பாய்ந்து சத்தம் எழுப்புகிறது/
சிறுவன் எறிந்த கல்/





கிராமியக் கலைகள்/
முதலிடம் பிடிக்கின்றன/
அரிதாரம் பூசிய முகங்கள்/





பொங்கல் பொங்கினால் பொலிவும் தங்கிடும்



பொங்கல் பொங்கிட பொலிவும் தங்கிடும்/
புன்னகை குவிந்து புத்துணர்வு தருமே/

பகலவன் வரவால் பக்தியும் கூடும்/
பண்பாட்டு செயலால் பண்டிகையும் சிறக்குமே/

பொங்கல் பொங்கிட மங்களம் தங்கிடும்/
கன்னல் சுவையாய் கலந்தே இனிக்குமே/

நன்றி செலுத்திட நல்மனம் மலரும்/
நாயகனை வணங்கிட நாதமும் ஒலிருமே/



ஹைக்கூ

பறக்கும் பலூன்கள்/
அங்குமிங்கும் அசைகின்றன/
வானத்து மேகங்கள்/



ஹைக்கூ

உழுத நிலம்/
ஒட்டிப்போய் கிடக்கிறது/
உழவனின் வயிறு/




வாழத்தண்டு கறியாக்கி


வயல்காடு மத்தியிலே
வாய்க்காலு பக்கத்துல
வழக்கம்போலே வந்தவளே
வசியக்கார குலமகளே

தூக்குச்சட்டிய தூக்கிக்கிட்டு
துள்ளிவரும் கண்மணியே
ஏமனச தூண்டியிட்டு
இழுக்குதடி கறிவாசோம்

வாழத்தண்டு கறியாக்கி
வாத்தியாரா வினாவெழுப்பி
கீரிசம்பா சாதத்துல
கேட்டு கேட்டு பரிமாறயில
ஊறுகாயி சுவப்போல
உள்ளமெல்லாம் புளிக்குதடி

கட்டுனவன் கழனியில
காலவெயில் சுடுகையில
வேர்வயெல்லாம் மேனியில
விறுவிறுனு மொளைக்கிறதே

ஆக்கி எடுத்த கறியெல்லாம்
ஆறிப்போகும் முன்னாலே
வந்து நீயும் சாப்பிடுயையா
 வாழத்தண்டும் ருசிக்குமையா

விதவிதமா நா சமைச்ச
     வீட்டுல காச்ச வாழத்தண்டு
ஒன்நாக்குல ஒட்டனுமுனு
 ஒத்தக்கால்ல நிற்கையில
ஓடிவந்து சாப்புடுவே
    உடம்ப நல்லா பாத்துக்கவே



பழைய சோறு பச்ச மொளகா

வல்லரசோட உண்டியிலே வாடிக்கையான ஆகாரமாய்/
தமிழேன் சொன்ன தனி மருந்தே/
தைரியமா உலாவும் பழைய சோறே/
தயிரும் மோரும் தமுக்கோம் அடிக்க/
தமிழைத் தானே சேர்த்து குடிக்க/
காலையிலே நானும் கண் விழிக்க/
கட்டில் பக்கத்துல மொளகா மணக்க/
குடும்பத்தோட நாளும் ஒன்னா கூடி/
குடிச்ச கதைய சொல்றேன் கேளு/
அதுதான் நம்ம அடித்தளம் மானு/


குறள்வெண்செந்துறை-பொது இலக்கணம்



இயற்கையே வாழ்வினில் இனிமை
***************************

இயற்கையே வாழ்வில் இன்பத்தை தந்திடும்/
இறைவனின் படைப்பால் இன்னலை போக்கிடுமே/

இயற்கையின் பாடம் இம்மையில் உணர்த்தும்/
இணைந்தே பயணிக்க இன்னலை விரட்டுமே/

இயற்கையின் அழகில் இறைவனும் உறைவான்/
எளிமையின் வடிவில் எப்போதும் துணையே/

மாருதம் வீசி மாந்தரை வெல்லும்/
மாசற்ற செயலால் 
மாணிக்கமாய் ஒளிருமே/