ஹைக்கூ


கரிசக் காட்டு குயிலே

காட்டினிலே உலாவி வரும்
கரிசக் காட்டு குயிலே நீ/
பாட்டினிலே கலந்த சுதிபோல
பாதியாத்தான் இருக்குறீயே/
எண்ணத்துல பலக்கனவு
எல்லத் தாண்டி பறக்கையில/
கன்னத்துல முத்தமிட
காத்துருக்கேன் நாந்தானே/
வீசிவரும் காற்றலையும்
விலாசங் கேட்டு தவழயில/
நாசியெங்கும் உன் வாசோம்
நறுக்குனுதான் இருக்குதடி/
ஒன் அழக நான்கண்டு
ஒத்தையா வர நெனச்சபோது/
செத்தையெலாம் காதலமெல்ல
செவிக்குள்ளே சொன்னதடி/
பரிசோம் போட நாமும் வாறோம்
பாதாம் பருப்பும் கலந்து தாறோம்/
தேனா இனிக்கும் ஓங்குரலால்
தேவகானங் பாடு குயிலே/



ஐந்திணைக் காதல்

குறிஞ்சி
*********
குறிஞ்சி மலை அடிவாரத்திலே
குடியிருக்கும் சிலையழகே/
உன் காந்த பார்வையிலே
உள்ளமெங்கும் நெகிழுதடி/
பாய்ந்துவரும் நதியினூடே
தேய்ந்துபோகா கூலாங்கல்லாய்
தைரியமாய் வாழும் காதல்
தனித்துவத்தின் நம்பிக்கையடி/
வசந்தகால பொழுதினிலே
வந்தமர்ந்த அறுவடையாய்/
காதல் ராகம் பாடியுந்தான்
தேடல் வேகம் கூட்டுதடி/
சில்லென்ற குளிர்காற்றும்
சிவந்த வான முகவழகும்/
நெஞ்சமெல்லாம் நிறைகுடமாய்
நிறைவுதனை வழங்குதடி/
சங்கு போன்ற உன் கழுத்தும்/
சாந்தமான திருமுகமும்
கயல்விழியின் பொய்கையிலே
காதல்மொழி பேசுதடி/
மார்கழியின் கடுங்குளிரும்/
மங்கையரின் நீராட்டும்/
குவிந்த மலர் சோலையாக
குறிஞ்சிக் காதல் இயம்புமடி.....