ஆதங்கத்தின் அறைகூவல்அறுவடையை நாள்தோறும் 
அள்ளி தந்தோம்
ஆயிர கணக்கில் அந்நிய செலாவணியை 
பெற்றுத் தந்தோம்
கொழுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும்
 யாம் கொழுந்தை கிள்ளி கிள்ளி தந்தோம்-நிதம்
கொடுமைபடுத்துவது உனது வேலையா போச்சி?
வந்தவன் வந்தவன் என்று தினம் வசை பாடுகின்றாய்
நீயோ வந்த திசை மறந்து தம் பூர்வீகமென்று
பொய் வேசம் போடுகின்றாய்
வட்டி வட்டியாய் கொட்டிய பணமெல்லாம்
கொழுந்து கூடையில் சுமக்க முடியாதே
அந்நியனின் நோக்க அசுர செயலானது
மூளையை இயங்கவிடாத  திட்டமானது-இதில்
தலை நரம்பு வேரெல்லாம் நசுங்கி போனது-
விட்டு விடாமல் தொடருவது வேடுவகுலம்.-
இதை வேடிக்கை பார்ப்பது மனிதகுலம்
 உரிமையை கேட்டால் ஓடிப்போ என்கிறாய்
வறிய மக்களை வஞ்சித்து வாஞ்சையடைகிறாய்
நாக்கென்ற ஆயுதம் சொல்வது நல்வாக்கு
நயவஞ்சகனாய் செயல்படுவது உனது போக்கு
அடி வயிறு பற்றி எரியுதுங்க
சிறு நொடியேனும் சிந்தித்து பாருங்க
நாங்கள்  நாட்டு பொருளாதாரத்தின் முதுகெழும்பு
நோட்டை தரும்வரை போராடுவது எங்கள் தெம்பு

0 comments:

Post a Comment