இதயம் துடிக்காதோ

இதயம் துடிக்காதோ
என்னவளை நினைக்காதோ
நேசமென்றும் கசக்காதோ
நெஞ்சினிலே சுமக்காதோ
பக்தியும் பிறக்காதோ
முக்தியும் கிடைக்காதோ
காதலை மறுக்காதோ
காலகாலமாய் இனிக்காதோ

#தண்ணீரெனும் #தீர்த்தம்



இயற்கை அன்னையின் உடையே
எமக்கு கிடைத்த கொடையே
மண்ணைக் காக்கும் மரமே
மழையை தந்த குணமே

ஊருக்கெல்லாம் உதவிடும் நீயே
ஓய்வில்லாது போராடும் நீரே
தனத்தை கொடுப்பது தர்மமே
தான்தோன்றியாய் வீணடிப்பது பாவமே
ஓடும் நீருக்கோ ஒற்றுமையுண்டு
ஒருநாள் கடலில் சேர்வதுமுண்டு
கிடைத்த பொக்கிசத்தை கிழிந்தெரிந்து
பீலி சண்டைகளோ நாளும் மூண்டு
காவல் பணிமனை முன்னே இன்று
கைக்கட்டி நிற்பது ஏனடா மனிதா
தண்ணீர் பஞ்சம் வரும்போது-நீயோ
தவமிருப்பாய் பீலிகரையில் நின்று
எப்போ தண்ணீர் வருமோவென்று
ஏக்கத்துடன் கலங்குவாய் நின்று
வெறுமனே குழாய்களை திறந்து சென்று
வெட்டிக் கதைகள் பேசினாய் அன்று
சிந்திய துளிகளையெல்லாம் தினமளந்து
திருப்பி தருவாயா நீயே இன்று
கடவுளுக்கே வந்த கோபமென்ன
கலங்க வைத்த சாபமென்ன
இத்தனைக்கும் இனிய பதில்
இறைவன் நம்மை சபித்ததாலே

நினைவே சங்கீதம்


நினைவே சங்கீதம்
நீந்துதே மனதில் எந்நாளும்
கானங்களும் ஒலிக்கிறதே
காதலின் நினைவுகளும் பிறக்கிறதே

உண்மைக் காதலின் உத்தரவாதம்
ஊன்றிப் பார்த்தால் கானம் பாடும்
அலைகளின் ஓசையோ அடையாளம்
அன்பிலே மலர்ந்த கீதாசாரம்
நினைவுகளை நீந்தவிட்டு
நெடுநேரம் காத்திருந்தேன்
வெற்றிவாகை சூடிக் கொண்டு
நெற்றில் திலகம் இட்டதிங்கே
அன்பு என்ற வார்த்தையெல்லாம்
அவ்வப்போது மலரும் கானலல்ல
ஆயுள்வரை நிழலைத் தந்து
ஆதரிக்கும் அசையா ஆலமரமே
உன்னை நினைத்து மூச்சிவிடும்
உயிர்க்காதல் சங்கீதமாய்
உலகம் அழியும் காலத்திலே
தடம் பதிக்கும் சாதனை நினைவே
இசையால் வசையாகா இதயந்தனிலே
இனிமை சேர்க்கும் உன் நினைவே
ஒவ்வொரு நொடியும் நினைத்து நினைத்து
உள்ளத்தில் பதிந்த ரீங்காரமே

தொடு வானம் தூரமில்லை


இலக்கு என்ற விளக்கு
ஏற்றினால் எங்கும் சிறப்பு
இருளை நீக்க எத்தனையோ ஒளியிருக்கு
இமயம்தனை தொட்டிட பாதையை வெட்டு

முயற்சி எனும் பயிற்சி எடுத்து
முன்னேற்ற கோணத்தில் வாழ்வை நகர்த்து
சாதனை புரிந்த சாம்பவான்களெல்லாம்
சோதனைகளை தாங்கி வந்தவர்கள்தான்
கவியென்ற விதை முளைப்பதற்கு
கணநாட்கள் சென்றதுதான்
கரிசனையோடு கிறுக்கியதால்
பரிசுகளையெல்லாம் வாரி தந்ததுவே
விருதுகளை பெற்றிடவே
விடாமுயற்சியை விடவில்லை
தன்னம்பிக்கையும் வளர்ந்து வளர்ந்து
தானாய் சிகரம் தொட்டதிங்கே
குறிக்கோள் என்ற இமயமலையை
கூடிய சிக்கிரம் அடைந்திடவே
தைரியமென்ற ஏணியை எடுத்து
தடம் பதித்த சிங்கக்குட்டியடா

#அந்தகால #சித்திரயே #வா #வா


சித்திரையும் வந்துரிச்சி
நித்திரையும் கலஞ்சிரிச்சி
அந்த கால வாழ்க்கையெல்லாம்
அப்படியே மனசுல ஒட்டிக்கிச்சி

கல்விய புகட்டுனுமுனு -அப்பா
கடையில வச்ச நகைகளெல்லாம்
அடகுல மூழ்கி போக முன்னே
ஆதாய காசுல மீட்டுனாரே
பட்டாசு கொளுத்த கூடாது மகேன்
சுட்டா கையில புன்னாகிடுமுனு
பக்குவமா அம்மா சொன்னதுமே
மத்தாப்பும் சுத்தி மகிழ்ந்தேனே
மகிழ்ச்சியா நானும் இருந்தேனே
பணிய கானுலபோய் குளிச்சிட்டு
படபடனு வந்தேனே வீட்டுக்கு
பலகார வடையெல்லாம் எடுத்துவந்து
பத்திரமா அப்பாட்ட நானுங்கொடுக்க
மொறப்படி வாழையிலயில படையலிட்டு
மூத்த குலதெய்வத்த வணங்கினோமோ
முந்தி விநாகனை நாங்க நெனைத்து
முதல் தேவாரத்தை அம்மா தொடங்க
பள்ளியில படிச்ச தேவரத்தயெல்லாம்
பக்தியோட படிச்சோம் மூவருமே
அக்கம்பக்கம் சொந்தங்களுக்கென்று
அக்காவும் நானும் பொதி செய்து
ஆசையுடன் கொண்டு சேர்த்த
அந்தநாட்களெல்லாம் மீண்டும் வருமா
ஒன்றுமறியா பருவமது
உள்ளத்துலே இல்ல சூதுவாது
நல்லதே படிச்சி வாழ்ந்ததாலே
நானும் கவியில சொல்லலானேன்
வா வா எமது சித்திரயே
வாழ வழி காட்டிடுங்க புத்தரே
சந்தோசமா வீசுங் காற்றலையே
சமாதான வாசம் வீசிடுவே
நேரம் காலை 8.09

பாடல் போட்டி 17


பாடல் ; தாஜ்மஹால் தேவை இல்லை
அன்னமே அன்னமே
#பல்லவி
காசுபணம் தேவையில்லை
தங்கமே தங்கமே
பாசமழை பூமியெல்லாம்
என்றுமே பொழியுமே
சொந்தபந்தம் சூடி தந்ததோ
காலமெல்லாம் வாழ்த்தி மகிழுமோ
காசினி கண்டும் போற்றும் காதல் இதுவோ
(காசுபணம் தேவையில்லை)
#சரணம்-1
ஒற்றையடி பாதையில்
ஒன்றாக போகலாம்
ஒய்யாரமாய் நம் கூடலோ
மெருகேறி ஆடி பாடலாம்
கல்யாணம் என்பது
சொல்லாமல் ஆகலாம்
கண்ணாலனே நம் பாசமே
காவியம் வேண்டி வாழலாம்
பன்னீரிலே வாசமாகி
பறைசாற்றும் தேடலே
சுடர் ஏற்றி நாமும் சொல்ல
மலை ஏற வேண்டுமே
சோலை தரும் தென்றல்
எம்மை பண்பாடுமே
(காசுபணம் தேவையில்லை)
#சரணம்-2
காலங்கள் என்பது
கடிகாரம் போன்றது
ஒன்றை விட்டு ஒன்று பிரிந்தால்
பயணிக்க பாதை காட்டுமா
காதல் வந்த வேளையில்
கைதட்டும் பந்தமே
நீயும் நானும் ஒன்றாய் வந்தால்
நதிமீன்கள் கீதம் பாடுமே
பார்க்காத காதலெல்லாம்
எம்மண்ணில் வாழுமே
இன்னிசையின் கானமழையில்
இதயங்கள் பேசுமே
கண்கள் இரண்டும் கவிதை பாட
வா தங்கமே
(காசுபணம் தேவையில்லை)

திவசம்=தெய்வத்தின் வசம்


அப்பா இறந்து ஆண்டுகளோ பதினாறு
அன்பு என்றும் வற்றாத தேனாறு
எண்ணங்களை கல்லாக்க நினைத்தபோதும்
இரு விழிகளோ ஏற்க மறுக்கிறதே
கடந்து வந்து பாதைகளும் கலங்குகிறது
காப்பாற்றிய உந்தன் குழந்தைகளும் ஏங்குகிறது
கண்ணீரும் பாவமென்று யோசித்த கண்மணிகள்
வெளிவரும் போதெல்லாம் வேலி இட்டதப்பா
உங்களை ஒருபோதும் கடவுள் வெறுத்ததில்லை
எங்களை சுமந்த பூமியே சாட்சியானதால்
பொறுமையின் அடையாளமான பூமித்தாயும்
போட்டியிட உங்களை அழைக்குதப்பா
தங்க மனசோ தர்மருக்கு அதிகமப்பா
தங்காவை அழைக்கையில் தடுமாறி நின்றாரப்பா
கவலை வந்து மனசில் புகுந்ததுமே
கனகு உங்களை இழந்து தவிக்கிறேனப்பா
வாருங்களப்பா கடைக்குட்டியின் கனவினிலே
ஓடிப்பிடித்து ஒன்றாய் நாம் விளையாடிடுவோம்
கத்தி அழுதிடவும் அடியேனுக்கு ஆசையப்பா
அக்காவை பார்த்ததும் கண்கள் மறுக்குதப்பா
வாழ்க்கையின் விதியப்பா வாரிசை பிரிந்தது
வந்து பிறந்துடுங்களப்பா பூலோகத்திலின்று
உங்களை நான் மறக்கவே இல்லையப்பா
தங்களைபோல் தந்தை இனி கிடைக்குமாப்பா
நினைவுகளை நித்தமும் அசைபோட்டு
நிமலனின் அருளை அதிகம் பெற்றப்பா
நிம்மதியா வாழ கருணை காட்டுங்களப்பா

பௌர்ணமி நிலவில்


வானவீதியில் உலாவரும்
வளர்மதியே
வசியமாகிப் போனேன்
உன் பார்வையிலே
கதிரவன் உன்னை
காண எண்ணுகையில்
நாணத்தில் மறைந்து
நளினம் காட்டுவதேனடி

மெய்ப்பீரமோ மெல்லிய
போர்வையால் மூடுகையில்
விரகதாபத்தால் மனதோ
விடலை பருவமானதடி
என்னவளை அழகென்று
இவனின்று ரசிக்கையிலே
வானரதத்தில் நீ வருகையிலே
தடுமாறிப் போனேனடி
எப்பொழுதும் வருவாயானால்
முப்போழுதும் மகிழ்ந்திடுவேனே
எதிர்ப்பார்த்த விழிகளிரண்டோ
விடுமுறையும் கேட்டதிங்கே
முழுமதியாய் நீந்திடும்
மூவுலக தேவதையே
பூவுலகில் அவதரித்து
வீடுபேறு தந்துவிடு
எமதர்மராசாவே
இன்னொரு பிறவி தந்துவிடு
பௌர்ணமி நிலவின் அனுமதியோடு
பவனி வர அவா இன்று

பணமெங்கே பாசமங்கே

வாலி சான்றிதழ்
******************
பணமெங்கே பாசமங்கே
***************************

அன்பென்ற மனமோ தாராளம்
அடங்கி கிடப்பது ஏராளம்
பணமென்ற வேசத்தால்
பாதாளத்தில் துயிலுதிங்கே

நட்பெனும் ஒலியெழுப்பி
நாடெங்கும் மடலனுப்பி
அகங்கார அரக்க குணத்தால்
அழிந்து போனது பாசமெல்லாம்

காதலிக்கவும் காசு வேண்டும்
கரம் பிடிக்கவும் காசு வேண்டும்
உண்மையான உள்ளத்திற்கு உத்தரவாதம் யாருமில்லை
பொய்யான காதலுக்கெல்லாம்
பொற்கிழி கொடுக்குது பூமியிங்கு

பாசமென்ற வார்த்தையைக்கூட பகிரங்கமாய் செப்பிட இயலாமல்
பணமென்ற மாளிக்கைக்குள்
பலநாட்களாய் தடுமாறுதடா

கயவரிடம் பணமிருந்தால்
கற்றவரெல்லாம் காண்பதெங்கே
மேடைதனில் ஒலிக்கும் சத்தம்
தனம் தானே கைகளைத் தட்டும்

சிறப்பான கல்விதனை சீரழிக்க விட்டிடாமல்
நல்வழி காட்டி நடந்தால்
நாடெங்கும் சந்தோசம் முழங்கும்

மனைவியினது மாங்கலியத்தை
மனதிலே சுமந்து வாழும்
மானிடரை நீ கண்டதுண்டா
உண்மைக் காதல்தனை
உள்ளத்தில் பதித்து
ஒவ்வொரு நொடியும்
அவளையே நினைத்து
உத்தமரும் வாழும்
உன்னதமான உலகமிது

பணத்தை பார்க்கும் குணத்தை விரட்டி
பாசமென்ற விதையை நாட்டி
பாண்போடு வாழ்வோம் நாமே
பாசாங்கு இனிமேல்
வேண்டாம் மானே

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா