ஹாலிஎல வீரசக்தி விநாயகர் ஆலய கலாசார மண்டபத்தில் நடைபெற்ற கவிஞர் தானா மருதமுத்து  அவர்களின் சிறகிழந்த கிளிகள் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் காவத்தை கனகராஜா அவர்களால் பாடப்பட்ட கவி வாழ்த்து 


கவி வாழ்த்து  சொல்ல வந்தேன் கவிஞர் தம்பி மருதமுத்துக்கு!
புவியடங்க போகுதையா உன் புகழை கேட்டு!
மலையகத் தாய் ஈன்றெடுத்த மைந்தன் நீ!
குவலய மாந்தர்கள் புகழும் கவிஞன் நீ!
கவிதை மட்டுமா உனது படைப்பு!
தமிழ் கலை வளர்ப்பதே உனது சிறப்பு!
கலைகளை வெளிக்கொணர்வது உனது ஆவலடா!
கலை கடலாய் மகிழுது நமது ஊவாவடா!
கற்ற பள்ளியோ கலையகமடா!
களிப்பில்வாழ்த்துவது நமது மலையகமடா!
சிறு வயதில் உன் தந்தையை இழந்தாய்!
செம்மையாய் கற்று கவிதைகளை மலர்ந்தாய்!
இலங்கை திருநாட்டின் இளைய சமுதாயத்திலே!
சலங்கை ஒலியாய் சத்தமிடுவது நமது சாம்ராஜ்யத்திலே!
ஆழ்கடலில் விளைந்த முத்தா நீ!
பால்கடலில் பள்ளி கொள்ளும் பாவலரா நீ!
வாழ்க எங்கள் மலையக மகனே!
வளர்க என்றும் கலையக புதல்வனே!
கவிதைக்கு நீ மருதமுத்து!
களிப்புடன் வாழ்த்த வந்தேன் நீ எங்கள் சொத்து!


எதிர்பார்ப்பு
இயனக்கூட்டை என்னவன் இடுப்பிலணிந்து!
இன்ப ஊற்றில் தென்னை மரத்தில் நகர்ந்து!
எழில்கொண்ட மங்கை இதனைக் கண்டு!
ஏக்கமுடன் கேட்டாள் என்னவென்று!
இது காதல் போதையல்ல....கண்ணே!
களிப்புடன் ஆடவர் பருகும் கள்ளு என்றான்.....