எழுத்துக்களால் ஆயுதம் செய்வோம்














உணர்ச்சிகளை உள்ளத்தில்
ஊற்றெடுக்கும் அருவியாய்/
உண்மைதனை உலகறிய                                              
செய்யும் ஊடகமாய்/
உரிமையெனும் வேட்கைதனை
வென்றிடும்
எழுத்துக்களே/
பதியை வென்றிடும்
பக்குவமான
ஆயுதமே/
மாற்றத்தை மாற்றாது
மறவனாய் களமிறங்குமே/
ஒவ்வொரு நொடியும்
உள்ளத்திலே உலாவிடுமே/
ஊருக்கே உத்தமனாய்
சேவை செய்திடுமே/
உடலை அழிக்கும்
ஒரு  ஆயுதமுமல்ல/
இடரை பதிக்கும்
எழுத்துகளே ஆயுதம்/
ஆதிமுதல் இன்றுவரை
அவைதனிலே வலம்வரும்/
ஆக்கிரமிப்பு செய்திடும்
அற்சரமெனும் அசகாயசூரனே/
நாட்டைக் காக்கும்
இராணுவப்படையல்ல இது/
எண்ணத்தை தாக்கும்
எழுத்துப்படையே இது/
எழுத்துகளால் உண்டான
ஆயுதங்கள் பல/
இன்றும் கூட
துவம்சம் செய்து/
இ(எ)ம்மை காக்க
இறவாமல் வாழுதே

நேர்மை


நேரே வளர்ந்திடும் வாதுகளை
கூரையிட வெட்டும் மாந்தரிடையே
கேண்மை எனும் தேனெடுத்து
கிங்கினியில் ஊற்றி வைத்து
ஞாலமெங்கும் கீர்த்தி பரப்பும்
நண்பர்களின் நேர்மை வாழ்கவே


செய்யும் தொழிலை சிரத்தையுடனே
மெய்யும் மலர பூத்தால் தினமே
நன்மை நம்மை காதலிக்கும்
நம்மவர்க்கும் மகிழ்வு தானே பிறக்கும்

மெய்ப்பிரம் கலைந்து
பொழிந்திடும் மழைத்துளியே
மீலம் பார்த்து மெய்ச் சிலிர்க்கும்
நேர்மை பக்கம் விளைச்சல் துளிர்க்கும்

நேர்மறை சிந்தனைகள்
நின்மனதில் நாளும் உதித்தால்
நேர்மையெனும் பகலவனும்
நிம்மதி தர மறுப்பதில்லை

நல்வழி காட்டி வாழ்ந்த
நம்மவரிடையே நித்தம்
நேர்மையெனும் விதை விதைத்து
நேசமரம் வளர்த்திடுவோம்