நீங்காத நினைவுகள்

சந்திக்காமல் வந்த சரித்திரகாதல்
சந்தித்த பின்பு வந்த சத்தியகாதல்
பார்க்காமல் வந்த பரவசக் காதல்
பார்த்த பின்பு வந்த பக்குவகாதல்
நம் இருவருக்கும் உண்டான காதல்
நமக்கு இருவர் என்றான உன்னதகாதல்
மலையக மைந்தனின் மகத்துவகாதல்
மட்டகளப்பு மங்கையை வசீகரித்த காதல்
சிங்கத்தை பெற்றுத்தந்த சிறத்தைகாதல்
சிறப்புடன் வாழும் செம்மைக்காதல்
ஆரம்பத்தில் வந்த அற்புதக்காதல்
இன்றுவரைத் தொடரும் இன்பக்காதல்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட சுந்தரக்காதல்
பூலோகத்தில் நிச்சயிக்கப்பட்ட சொர்க்கக்காதல்

0 comments:

Post a Comment