அன்பென்றால்



அன்பின் அட்சயபாத்திரமானவளே
பண்பின் பாச கோர்வையானவளே
சித்தமெல்லாம் ரத்தம் நிரப்பி
சிறியதாய் பிம்பம் உருக்கி
காதலாய் வார்த்த திருமகளே

உயிரையும் உடலையும் கருவில் பூட்டி
வயிறையும் வாயையும் நிதமும் கட்டி
நினைவுகளும் கனவுகளும் அகத்தில் காட்டி
நிறையுணவாய் அன்பூட்டினாயே
எல்லையில்லா பாசம்
இனிதான பால் வாசம்
சிகரமெனும் உயிர் நேசம்
சித்தரித்தாயே முதல் சுவாசம்
உயிர்கள் வாழும் இவ்வுலகில்
ஒவ்வொன்றும் மாயைதானே
உன்னை மட்டும் கண்டேனம்மா
உண்மையான தெய்வமாக
தன் கவலையெல்லாம் மறந்து
என் நிலையை தினமும் உணர்ந்து
அன்பென்ற கோயில் கட்டி
அனுதினமும் பூசை செய்தாயே தாயே

0 comments:

Post a Comment