திவசம்=தெய்வத்தின் வசம்


அப்பா இறந்து ஆண்டுகளோ பதினாறு
அன்பு என்றும் வற்றாத தேனாறு
எண்ணங்களை கல்லாக்க நினைத்தபோதும்
இரு விழிகளோ ஏற்க மறுக்கிறதே
கடந்து வந்து பாதைகளும் கலங்குகிறது
காப்பாற்றிய உந்தன் குழந்தைகளும் ஏங்குகிறது
கண்ணீரும் பாவமென்று யோசித்த கண்மணிகள்
வெளிவரும் போதெல்லாம் வேலி இட்டதப்பா
உங்களை ஒருபோதும் கடவுள் வெறுத்ததில்லை
எங்களை சுமந்த பூமியே சாட்சியானதால்
பொறுமையின் அடையாளமான பூமித்தாயும்
போட்டியிட உங்களை அழைக்குதப்பா
தங்க மனசோ தர்மருக்கு அதிகமப்பா
தங்காவை அழைக்கையில் தடுமாறி நின்றாரப்பா
கவலை வந்து மனசில் புகுந்ததுமே
கனகு உங்களை இழந்து தவிக்கிறேனப்பா
வாருங்களப்பா கடைக்குட்டியின் கனவினிலே
ஓடிப்பிடித்து ஒன்றாய் நாம் விளையாடிடுவோம்
கத்தி அழுதிடவும் அடியேனுக்கு ஆசையப்பா
அக்காவை பார்த்ததும் கண்கள் மறுக்குதப்பா
வாழ்க்கையின் விதியப்பா வாரிசை பிரிந்தது
வந்து பிறந்துடுங்களப்பா பூலோகத்திலின்று
உங்களை நான் மறக்கவே இல்லையப்பா
தங்களைபோல் தந்தை இனி கிடைக்குமாப்பா
நினைவுகளை நித்தமும் அசைபோட்டு
நிமலனின் அருளை அதிகம் பெற்றப்பா
நிம்மதியா வாழ கருணை காட்டுங்களப்பா

0 comments:

Post a Comment