பணமெங்கே பாசமங்கே

வாலி சான்றிதழ்
******************
பணமெங்கே பாசமங்கே
***************************

அன்பென்ற மனமோ தாராளம்
அடங்கி கிடப்பது ஏராளம்
பணமென்ற வேசத்தால்
பாதாளத்தில் துயிலுதிங்கே

நட்பெனும் ஒலியெழுப்பி
நாடெங்கும் மடலனுப்பி
அகங்கார அரக்க குணத்தால்
அழிந்து போனது பாசமெல்லாம்

காதலிக்கவும் காசு வேண்டும்
கரம் பிடிக்கவும் காசு வேண்டும்
உண்மையான உள்ளத்திற்கு உத்தரவாதம் யாருமில்லை
பொய்யான காதலுக்கெல்லாம்
பொற்கிழி கொடுக்குது பூமியிங்கு

பாசமென்ற வார்த்தையைக்கூட பகிரங்கமாய் செப்பிட இயலாமல்
பணமென்ற மாளிக்கைக்குள்
பலநாட்களாய் தடுமாறுதடா

கயவரிடம் பணமிருந்தால்
கற்றவரெல்லாம் காண்பதெங்கே
மேடைதனில் ஒலிக்கும் சத்தம்
தனம் தானே கைகளைத் தட்டும்

சிறப்பான கல்விதனை சீரழிக்க விட்டிடாமல்
நல்வழி காட்டி நடந்தால்
நாடெங்கும் சந்தோசம் முழங்கும்

மனைவியினது மாங்கலியத்தை
மனதிலே சுமந்து வாழும்
மானிடரை நீ கண்டதுண்டா
உண்மைக் காதல்தனை
உள்ளத்தில் பதித்து
ஒவ்வொரு நொடியும்
அவளையே நினைத்து
உத்தமரும் வாழும்
உன்னதமான உலகமிது

பணத்தை பார்க்கும் குணத்தை விரட்டி
பாசமென்ற விதையை நாட்டி
பாண்போடு வாழ்வோம் நாமே
பாசாங்கு இனிமேல்
வேண்டாம் மானே

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

0 comments:

Post a Comment