கையூட்டு


முகமூடிதனை அணிந்து கொண்டு
முழு உலகை ஆக்கிரமிக்கும்
சூசகமான கையூட்டே
சுகத்தை தந்தாய் தனியே புறப்பட்டே

எந்தவொரு வேலை செய்வதற்கும்
இனிமையாக உடனே பிறக்கும்
அந்தரங்கமான அசட்டு செயலை
அனைவரும் இங்கே கையூட்டென்போம்
மாயை நிரம்பிய வாழ்க்கையிலே
நோயை பரப்பிய சடப்பொருளாய்
எங்கும் வியாபிக்கும் விருட்சமே
இதுவே நாளை கிளை பரப்புமே
கல்வி விலையோ அதிகரிக்க
கயவர் கூட்டமோ நித்தம் பிறக்க
பிணியை தீர்க்கா வைத்தியனாய்
தனியே நின்று அழிக்கும் வியாதி
இம்மையில் நீயும் வளர வேண்டாம்
எல்லா நன்மையும் அழிக்க வேண்டாம்
எதிர்கால சந்ததியோ இன்புடன் வாழ
இன்றே மறைந்திடு இழிவான கையூட்டே

தாய்நாடு ************


தாய்நாடு என்றும் எம் தாய்வீடு
மூவின மக்களும் செறிந்து வாழும்
முழங்கும் சங்காய் என்றும் திகழும்
முத்தாய் விளங்குவதே இத்திருநாடு


உரிமையை உடனே கேட்டு பெற்றிட
சுதந்திர குருகாய் எங்கும் பறந்திட
இறைமையை தந்த இதயநாடாம்
இதுவே எமது சொந்த வீடாம்

உலகெங்கும் வாழும் உறவுகளிடையே
பாலமாய் இணைந்து பாசம் பிணைத்திட
குடியுரிமை அனுமதி வழங்கிய நாடாம்
கூட்டுறவால் ஞாலத்தை வென்ற நாடாம்

தொழிலை நித்தம் தூய்மையாய் செய்ய
தொந்தரவின்றி மனையோடு வாழ
நாம் வாழும் நாடே ஈழத்திருநாடு
உரிமை போராட்டம்
உச்ச நிலையை அடைகிறது
பேரினவாத ஆக்கிரமிப்பு

பாடல்: தை பொறந்தா வழி பொறக்கும்

தாய்ப்பாசம்
****************
பல்லவி
சேய் சிரித்தா தாய் மகிழும் சொந்தமே சொந்தம்
அன்பிருந்தா தேன் வடியும் சொந்தமே சொந்தம்…(2)
சேய் சிரித்தா…

சரணம்-1:
கருவினிலே பால் கொடுத்தாய் சொந்தமே சொந்தம்
இடுப்புவலி தான் பொருத்தாய் சொந்தமே சொந்தம்…(கருவினிலே)
வறுமையினை தோற்கடித்தாய் சொந்தமே சொந்தம்
வறுமையினை தோற்கடித்தாய் சொந்தமே சொந்தம்
வயிற்றினிலே எனை சுமந்தாய் சொந்தமே சொந்தம்
சேய் சிரித்தா …
சரணம்-2
தந்தையரின் சிந்தையாலே சொந்தமே சொந்தம்
மதிமழையோ பொழியுதமா சொந்தமே சொந்தம்…(தந்தையரின்)
சின்னவனின் திறமையிலே சொந்தமே சொந்தம்
எண்ணமெல்லாம் குளிருமம்மா சொந்தமே சொந்தம்…(சின்னவனின்)
சேய் சிரித்தா…
சரணம்-3
கலைஞனையே ஈன்றெடுத்தாய் சொந்தமே சொந்தம்
காசினியில் புகழ் நுகர்ந்தாய் சொந்தமே சொந்தம்…(கலைஞனையே)
வயித்தகட்டி வளர்த்தெடுத்தாய் சொந்தமே சொந்தம்
வயித்தகட்டி வளர்த்தெடுத்தாய் சொந்தமே சொந்தம்
வாழ்வதற்கே உயிர்கொடுத்தாய் சொந்தமே சொந்தம்…
சேய் சிரித்தா...

#அந்திப்பொழுதும் #அவளின் #நினைவும்

அந்தி சாயும் வேளையிலே/
மரத்தின் நிழல் தொடுகையிலே/
இருவரும் ஒன்றாய் கூடி அமர்ந்து/
இனியசொல் பகிர்ந்தோமடி/

தென்றல் வந்து தொட்டு பார்க்க/
தேவதை நீயோ தோளில் சாய/
எத்தனை சுகம் நம்மில்
மலர்ந்து/
இதயகீதம் மீட்டியதே/
நினைவுகள் என்றும் நிசமானவை/
நீயோ எந்தன் வசமானவள்/
எதிர்கால வாழ்வுதனை/
எதிர்ப்பார்த்த காலமது/
ஊடலும் மோதலும் ஒரு நொடியில்
தோன்றி மறையும்/
உண்மைகாதல் மட்டும்
உன் பெயரை சொல்லித் திரியும்/
கலாட்டா வந்த நேரமெல்லாம்
கண்ணியமாய் நாம் இருந்தோம்/
காலங்கடந்து போனதுமே
துரோகம் செய்தது ஏன் கிளியே/
சாயங்கால நேரத்திலே
தலைசாயும் சூரியனும்/
சத்தியகாதலை
பறைசாற்ற
சாகாவரம் பெற்றது அன்றே/
அந்தகால கால நினைவெல்லாம் /
ஆயுள்வரை தொடரும் கண்ணே/
நல்லெண்ணம் மலர்ந்திடவே/
அந்திமாலையில் பூத்திடு பெண்ணே/

காற்றுவெளி


அனைத்துயிரும் வாழ்ந்திடவே
அத்திவாரமான காற்றலையே
நீயின்றி எவ்வுயிரும்
நிம்மதியாய் வாழாதிங்கே

இதயம் மெல்ல துடித்திடவென்று
இன்னிசை நாதமாய் நீ புகுந்து
சந்தோச வாழ்வில் பயணித்திடவே
சகலருக்கும் வாழ்வு கொடுத்தாய் தாயே
இயந்திர வாகனங்கள் ஏராளம் உருவாக்கி
இயற்கையின் வெளியில் புகைதனை கக்கி
எண்ணற்ற நோய்களை பரப்பும் திட்டம்
இனியும் வேண்டாம் உனது நாட்டம்
நல்ல மரங்களை நாளும் நேசித்து
செல்ல வாரிசுகளாய் கூடி அரவணைத்து
நல்ல காற்றை நாசினில் நுழைத்திடுவோம்
சூழலை காத்து சுகமாகவே வாழ்ந்திடுவோம்

சந்தப்பாவில் சிந்திப்போமா


வாடா மலரே வாசனை இதழே
தேடா நதியே தேவதை வடிவே
நாடா உறவே நாடிட வருதே
சூடா மணியே சூடிட எழிலே
அன்பென்ற வலைவீசி
தூண்டிலிட்ட காதலியே
அங்கமெல்லாம் பத்துதடி
அடியே நீ மூட்டிய நெருப்பாலே
பொய்யை பேசும் இவ்வுலகில்
பூத்து கருகும் மலர்செடியாய்
காத்திருந்து காசு பறிக்கும்
கன்னியரே நீ தான்டி
எண்ணத்தில் மலர்ந்த இனிய கவியே/
கவியே உயிராக கவர்ந்த உணர்வே/
உணர்வே  கலந்த உடலின் தமிழே/
தமிழே நுழைந்தாயே என் எண்ணத்தில்/
அன்பாலே
மொழி பேசி/
அற்புதமாய் வலை வீசி/
காதல் பந்தம் வளர்த்த காரிகையே/
காலம் எல்லாம் நம் காதல் வாழ்கவே/

செயலாய் நான்


கல்வி கற்க ஆவல் பிறந்து
கற்றேன் நாளும் தினமும் பயின்று
ஏழ்மை வந்து கண்ணில் பதிந்து
வாழ்வும் செழிக்க வழி காட்டியதே

தந்தை மட்டுமே வேலை செய்து
தரணியில் உயர அறிவும் தந்து
உலகம் போற்றும் உன்னத மகனாய்
உருவாக்கிய பதியே தந்தை என்பேன்

எண்ணில்லா துயரை யான் தகர்த்து
சிந்தையிலே பயிரை தான் வளர்த்து
முயற்சி மலரில் முளைத்த முள்ளை
பிடுங்கி எறித்த பிள்ளை நானே

இலக்குதனை விளக்காய் இதயத்தில் ஏற்றி
ஏழ்மையின் வரவை தைரியமாய் விரட்டி
செம்மையான வாழ்வை சிறப்பாய் களிக்க
கரையினை கண்டேன் செயலாய் நானே

முழுப்பெயர் -பழனியாண்டி கனகராஜா

ஊர்- கோணக்கலை, காவத்தை, பசரை

செயலாய் நான்


அன்பையும் பண்பையும் மனதில் நிறுத்தி

அகச் சிந்தனைகளை மெழுகாய் உருக்கி
தீந்தமிழின் வாசம் திக்கெங்கும் வீச
தியாகம் செய்தே வளர்த்தேன் தமிழை

தமிழென்ற கடலில் தவறாது நீந்தி
கரையென்ற இலக்கை சிந்தையில் பதித்து
முகநூலின் வழியே முத்தமிழ் பரப்ப
அகநூலில் விதைத்தேன் அருந்தமிழ் விதைகளை

எண்ணற்றோர் எப்போதும் இயற்றமிழ் அழகென்று
போற்றாதோர் யாருமிலர் பூவுலக வாழ்வினிலே
தமிழாழியிலே கண்டெடுத்த தங்கத்தமிழ் அற்சரத்தை
வெளியுலகில் வேரூன்ற விரைந்தேன் கவியாக

நற்றமிழின் புகழோங்க நாற்றிசையும் தூதுவிட்டு
இசைத்தமிழின் பெருமைதனை இனிமையாக பதியமிட்டு
இன்னுமின்னும் தமிழ் இம்மையில் ஓங்கிடவே
வண்ணத்தமிழால் படைப்பதுவே வரகவியின் செயலென்பேன்

வயல் பாடும் தெம்மாங்கு


நிறம் மாறும் மனிதர்கள்


இலாபங்களுக்காய் இம்மண்ணில் வாழும்
பயங்கர விலங்கே பச்சோந்தி மனிதன்/
தேவைகள் முடிந்ததும்
தெருவிலே வீசும் எச்சியிலைப் போல/
கூடவே உறவாடி கொடுமை செய்பவனே
கொடுக்குள்ள விசமனிதன்/
இன்பத்தில் அரவணைத்து 
துன்பத்தில் தூக்கியெரிந்து/
மெய்யை பொய்யாய் மாற்றும்
மேகவலையே இம்மனிதன்/
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து
உதாசீன வார்த்தையால் அசிங்கப்படுத்தும்/
ஊனமானவனே இம்மனிதன்/
காலத்தின் தேவையறிந்து
கமுக்கமாக செயற்புரிந்து/
அனைவரும் முன் அலட்சியபடுத்தும்
அரைமனிதனே இம்மனிதன்/
மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல
நேரத்துக்கு நேரம் பேச்சை மாற்றும்
பேதமை தோற்றமே இம்மனிதன்/
நல்லுள்ளம் என நம்பி
நாமும் மதிப்பு வழங்கியபோது/
குரங்கிடம் கிடைத்த மாலைபோல/
குதரிப்போட்ட பாவியடா நீ/
இடங்கள் மாறும் இவ்வுலகில்
குணத்தை மாற்றும் நிறமடா நீ/
இறைவா இனியும் படைக்கும்போது/
இழிவாய் மனிதனை படைத்திடாது/
பண்புள்ள மனிதனை பாரில் படைத்து/
அன்புள்ள குணத்தை அரங்கேற்றி காட்டு/