செயலாய் நான்


அன்பையும் பண்பையும் மனதில் நிறுத்தி

அகச் சிந்தனைகளை மெழுகாய் உருக்கி
தீந்தமிழின் வாசம் திக்கெங்கும் வீச
தியாகம் செய்தே வளர்த்தேன் தமிழை

தமிழென்ற கடலில் தவறாது நீந்தி
கரையென்ற இலக்கை சிந்தையில் பதித்து
முகநூலின் வழியே முத்தமிழ் பரப்ப
அகநூலில் விதைத்தேன் அருந்தமிழ் விதைகளை

எண்ணற்றோர் எப்போதும் இயற்றமிழ் அழகென்று
போற்றாதோர் யாருமிலர் பூவுலக வாழ்வினிலே
தமிழாழியிலே கண்டெடுத்த தங்கத்தமிழ் அற்சரத்தை
வெளியுலகில் வேரூன்ற விரைந்தேன் கவியாக

நற்றமிழின் புகழோங்க நாற்றிசையும் தூதுவிட்டு
இசைத்தமிழின் பெருமைதனை இனிமையாக பதியமிட்டு
இன்னுமின்னும் தமிழ் இம்மையில் ஓங்கிடவே
வண்ணத்தமிழால் படைப்பதுவே வரகவியின் செயலென்பேன்

0 comments:

Post a Comment