காதலின் உயிரோசை


எண்ணமெனும் மேடையிலே

இசைக்கும் என்னவளே

கன்னலாய்ப் பாட்டிசைக்கும்

பாடகியும் நீதானே

கன்னக்குழி ஓரத்திலே

கயல்மீனும் நீந்தயிலே

உள்ளமெனும் முற்றத்திலே

உயிரோசை கேட்குதடி


மழைத்துளியின் ஓசையிலே

மாயமாய் வந்தவளே

மல்லிகைப்பூ மணம்போல

உயிரினில் கலந்தவளே


தென்றலுமே பாடாதத்

தெம்மாங்கு ராகத்திலே

தேன்மதுர பல்லவியை  

திகட்டாமல் வடித்தாளே


உயிருக்கும் உடலுக்கும் உள்ளதா தூரம்

உண்மையான பக்தியே ஓயாமல் நீளும்

அன்பினது உணர்வை அறியவா முடியும்

அழியாது  வாழுமே நம் தெய்வீககானம்


கட்டிளம் பருவமும் காதலரின் மோகமும்

காற்றிலே கலந்து கருவறையில் சேரும்

நெற்றிலே மலர்ந்த நிலையான பிரவாகம்

நெஞ்சமே நீதானே உயிரின் தனிராகம்

0 comments:

Post a Comment