வாழத்தண்டு கறியாக்கி


வயல்காடு மத்தியிலே
வாய்க்காலு பக்கத்துல
வழக்கம்போலே வந்தவளே
வசியக்கார குலமகளே

தூக்குச்சட்டிய தூக்கிக்கிட்டு
துள்ளிவரும் கண்மணியே
ஏமனச தூண்டியிட்டு
இழுக்குதடி கறிவாசோம்

வாழத்தண்டு கறியாக்கி
வாத்தியாரா வினாவெழுப்பி
கீரிசம்பா சாதத்துல
கேட்டு கேட்டு பரிமாறயில
ஊறுகாயி சுவப்போல
உள்ளமெல்லாம் புளிக்குதடி

கட்டுனவன் கழனியில
காலவெயில் சுடுகையில
வேர்வயெல்லாம் மேனியில
விறுவிறுனு மொளைக்கிறதே

ஆக்கி எடுத்த கறியெல்லாம்
ஆறிப்போகும் முன்னாலே
வந்து நீயும் சாப்பிடுயையா
 வாழத்தண்டும் ருசிக்குமையா

விதவிதமா நா சமைச்ச
     வீட்டுல காச்ச வாழத்தண்டு
ஒன்நாக்குல ஒட்டனுமுனு
 ஒத்தக்கால்ல நிற்கையில
ஓடிவந்து சாப்புடுவே
    உடம்ப நல்லா பாத்துக்கவே



0 comments:

Post a Comment