தாய்மையின் கனவுகள்


தாய்மையின் கனவுகள்
தளராத தங்க நினைவுகள்
பதினைந்து நிமிடங்களில் மலரும்
பளிச்சென்ற மாணிக்க வைரங்கள்


மனதென்ற மாளிகையினை
மாதக்கணக்கில் சோடினை செய்து
பத்துத் திங்கள் காத்திருந்து
பாரினில் கொண்டாடும் திருவிழாவே

நல்ல பிள்ளையாய் தான்பிறக்க
நாடிய கோயிலோ பல இருக்க
மென்மையெனும் மேனியை கொண்டு
பெண்மையை போற்ற பிறந்த கனவு

கலைகள் பற்பல நித்தம் கற்று
அலைகளாய் படர்ந்த அருமந்தக் காற்று
சுவாசபப் பைக்குள் தானே நுழைந்து
சுகமாய் சுற்றிய சுந்தரக் கனவிதுவே

பிறந்த ஊரும் புகுந்த ஊரும்
பெருமை பல பேசிட எண்ணி
தூக்கம் கூட இல்லாமல் தினம்
ஏக்கமாய் கண்ட இனியக்கனவு

எழுபவத்தோடு இம்மையில் உதித்த
இன்னொரு தெய்வம் இவளிருக்க
ஒவ்வொரு கனவாய் மீண்டும் காண
ஒத்திகை காட்ட பிறந்துடு மகனே

கனவுகளும் பழிக்க வேண்டும்
பட்டபாடுகளும் ஒழிய வேண்டும்
அரங்கேற்றம் யானும் செய்திடவே
அவனியில் எப்போ பிறப்பாய் கன்னா

0 comments:

Post a Comment