சொன்னது நீதானா?

காதலென்ற வலை வீசி
கச்சிதமான மொழி பேசி
இதயங்கள் இரண்டற கலக்க
இன்புடன் வாழ்வோமென்றது நீதானா?

உண்மைக் காதல் ஊற்றெடுக்க
ஊமை நினைவுகள் மெதுவாய் சிரிக்க
மிதிவண்டியில் செல்கையிலே
மென்மையை உணர்த்தியவள் நீதானா?

பிரியாத வரம் கேட்டு
சரிபாதியாய் உயிரில் கலந்து
பிரார்த்தனை செய்த மனமின்று
பெருமிதத்துடன் வாழுதிங்கே

சொன்ன சொற்களும் சோர்வுற்று
சுவீகரித்த மனமும் திகிழுற்று
தனிமையில் இனிமை பெற
தவிக்கவிட்டவளும் நீதானா

நிலையாமையின் வெளிபாட்டை
நீயோ மெதுவாய் கற்றுத் தந்தாய்
நிம்மதியாக வாழ்ந்திடவே மீண்டும்
நீந்தி கரையை கடப்போம் கண்ணே

பழனியாண்டி கனகராஜா
நி.மு-1197

0 comments:

Post a Comment