நிலவின் நகல் நீ

நிலவின் நகலே நீ
நீந்தும் தாரகையும் நீ
ஞாலத்தில் மலர்ந்த நந்தவனமும் நீ
நறுமணம் வீசும் சுகந்தமும் நீ

வானத்தில் தாரகைகள் இருபத்தேழு
வந்துதித்த தங்கரதம் நீதானே தேனு
விரல்களின் மகுடங்கள் மின்னியதும்
விரசங்கள் மௌனமாய் தூங்கியதே

அசைந்து வரும் அன்னமே
அகிலத்தின் முதல் சின்னமே
சீதமாய் சிரிக்கும் சின்ன நிலாவே
சித்தமெல்லாம் குளிருது உன்னாலே

இரவென்றாலே உந்தன் நினைவு
இன்பமென்றதும் பறக்கும் மனது
பிரம்மனுக்கோ பெரிய களிப்பு
உனை பார்த்ததும் உடனே திகைப்பு

வானத்து தேவதைகள் வாழ்த்து முழங்க
வடிவாய் ஆடிடும் மயிலும் தாங்க
உனை பார்த்த உள்ளங்களுக்கு
போட்டி போட நிலாவை இறக்கு

இம்மையிலே படைப்புகள் பலகோடி
செம்மையாய் பிறந்தவளே நீதானடி
நிலாவின் வாழ்க்கையோ நிர்க்கதியே
நிம்மதியான விம்பம் நீதான் ரதியே

0 comments:

Post a Comment