இணைத்தின் வாசல்



உடலெல்லாம் இரத்த ஓட்டம்

ஒரு நாளும் பார்க்காத கூட்டம்
எப்போதும் உன்மீது நாட்டம்
இதுவே என் பூந்தோட்டம்

காலத்தின் தேவையிலே
கடுகதியாய்
பிறந்தவனே
உன்னை பார்த்து கற்றதனால்
உலகில் மிளிரும் தங்கம் ஆனேன்

கல்லாருக்கு தெரியாது
கற்பது எப்படி உன்னிடமென்று
நல்லார் உலாவும் பந்தியில்
நானும் முதலிடம் பெற்றேன் அன்பே

கல்விச்சாலை சென்றதுண்டு
கரிசனையோடு கற்றதுமுண்டு
ஏட்டுசுரக்காய் கரிக்கு உதவாதென்று
எத்தனையோ பேர் சொன்னார்கள் அன்று

அத்தனை பேரும் சொன்னதையெல்லாம்
அடிமனதில் பதியமிட்டு
உந்தன் விதையால் பயனடையும்
ஊர்க்குருவி நானன்றோ


தீயவைகளை கண்டு
இங்கே தித்திக்கும்
வாலிப கூட்டம்
நல்லதை கற்றுக்கொள்ள
நல்மனமும் இல்லை இங்கே

வாழ்வுதனின் தத்துவத்தை
வசிய செய்ய ஆசைப்பட்டு
உந்தன் காலடியில் சரணடைந்து
ஓராயிரம் விடயம் கற்றோம் யாமே

பல்கலைக்கழகம் நீதான் எனக்கு
பகுத்தறிவும் கலந்த மிடுக்கு
சிவனின் கிருத்தியமும் கிருபை நமக்கு
கிடைத்ததாலே நல்ல அறிவு பெருக்கு

1 comments:

கனகராஜா கனகராஜா said...

இந்திய சாரல் பதிப்பகம் வெளியீடு செய்த ''குடை விரித்திடும் சாரல்''எனும் நூலில் இடம்பிடித்த கவிதையிது

Post a Comment