நிலாமுற்ற கவியரங்கம்-198





















தமிழ் வணக்கம்
*****************முத்தமிழ் சித்திரமே
முழங்கிடும் வெண்சங்கே
சித்திரப் புதுத் தேரே
சிந்தனையின் கனிச்சுடரே
எத்திக்கும் ஒலித்திடுமே
இன்பமழை பொழிந்திடுமே
அன்னைத்தமிழ் உந்தனையே
அடியேனும் மகிழ்வாய் வணங்குகின்றேன்

தலைமை வணக்கம்
****************************
தமிழின் சுவை அறிந்தவரே
தனித்துவ திறனால் மிளிர்பவரே
இருவரி பாடிய வள்ளுவரே
இருந்தால் திகைக்க செய்பவரே
தீந்தமிழ் அழகில் கலந்தவரே
திடமாய் நயமாய் கவியுரைப்பவரே
அன்பால் ஈர்த்த அருந்தமிழே
பண்பால் சேரந்த பாவலரே
உந்தனுக்கு எந்தன் எண்ணத்தாலே
ஒரு கோடி வந்தனம் செப்புகிறேனையா

அவை வணக்கம்
***********************
அவைதனிலே வீற்றிருக்கும்
அன்புத்தமிழ் உறவுகளே
கன்னல் மொழி சுவைத்திடவே
காத்திருக்கும் பெரியோரே
விழிகளுக்கும் செவிகளுக்கும்
விருந்துபடைக்கும் கவியோரே
அத்தனை செம்மொழி உயிர்களுக்கும்
அடியேனின் கோடி வந்தனங்கள்

கவிதைக்கு தேவை
சொல்நயம்
****************
சொல்லின் பொருளை சூட்சுமாய் பாடிடவே
சுந்தரத் தமிழும் இனிதாய் கலந்திடவே
எண்ண ஓலையில் இன்பம் பரப்பிடவே
வண்ண மலர்களே வாயுரைக்கும் சொல்லாகும்

மாந்தரின் மனமோ நாளும் மகிழ்திடவே
மந்திரச் சொல்லால் சந்தமும் முழங்கிடவே
தூவிய வார்த்தைகளோ துள்ளிசை பாடிடவே
ஆழமாய் பதிந்த ஆணிவேராய் ஆகிடுமே

அன்று முதல் இன்று வரை
ஆன்றோர் உரைத்த நம் மொழியில்
பாலும் தேனும் கலந்தாற் போல
பாவலர் சொல்லாய் பவனி வருகுதிங்கே

சொல்லின் நயமே சிறப்பு என்போம்
சொல்லவே விளங்கும் இதுதானென்போம்
தெள்ளுத் தமிழிலால் கவி பாடிடுவோம்
செம்மொழிப் பலனை உலகில் உணர்த்திடுவோம்

கவிமழை யான் பொழிய
களமமைத்த நிறுவுனரே
தனித்தழிலால் கவிபாடும்
தார்மீக தலைமையாரே
பாவினிலே நானுரைத்த
கவிப் பாகுதனை சுவைத்தோரே அவையோரே
அனைவருக்கும் அன்புத்தமிழின் நன்றியையா
அடுத்த வாரம் மீண்டும் சங்கமிப்போமையா
ஆண்டவனும் அருள்மழை பொழிவாரையா
நன்றி வணக்கம்

0 comments:

Post a Comment