முகம் காணா நட்புகள்

அகமும் முகமும் அருவமாய் கலந்து
ஆழ்மனதில் அன்பாய் பதிந்து
சிந்தனை வடிவில் வளரும் நட்பே
சிந்தையில் மலர்ந்த அழியா கற்பே
தீந்தமிழின் சுவைதனை
செவ்வனே யானும் சுவைக்க எண்ணி
முகம் காணா நட்புகளுடன்
அகம் குளிர ஆசைப்பட்டேன்
வார்த்தைகளில் நிதம் பிறந்து
வண்ணத்தமிழால் காதில் நுழைந்து
தென்றலாய் வீசும் தேனினமே
தெவிட்டாத அன்பின் மறுதோற்றமே
அகிலத்திலே தடம் பதித்த
எத்தனையோ உறவுகளும்
நித்தமும் கவிபடித்து
நீண்ட பயணம் செல்லுதிங்கே
பௌர்ணமியின் ஒளியினிலே
பாசாங்கு காட்டும் காதலரே
பாசத்தின் மொழியறிய
பாசமழைப் பொழிய வாருங்களே

0 comments:

Post a Comment