விடியலை நோக்கி


கொழுந்தினை பறிக்கும் ஈரைந்து விரல்களும்
கொங்காணியில் தவழும் தேயிலைத் தளிர்களும்
எம்மினத்தின் வேதனையை
எப்போதும் மறவாதே

காலத்தின் வேகம் கடுகதியில் பயணிக்க
ஞாலத்தின் மோகத்தில் நாவறன்டு துடிக்க
அடுத்தவனை சுரண்டும் அட்டைப் பூச்சிகளே
அங்கீகாரம் உனக்கு கொடுத்தது யாரோ

இரத்தத்தில் ஓடும் செங்குருதி துணிக்கைகளும்
எப்போதும் அயராத நம்மின உழைப்பும்
மூச்சியின் சூட்டில் மும்முரமாய் திகழ்ந்து
பேச்சியின் வழியே பெருமை சேர்க்குதிங்கே

மழையையும் வெயிலையும் மாலையாய் அணிந்து
மக்களின் நாவினில் சுவையாய் கலந்து
நாட்டினது வளர்ச்சியில் நற்பங்காற்றிடும்
நாங்கள்தான் உங்களின் உயிர் மூச்சுடா

பொதுநல எண்ணம் பூமிக்கு இருக்கு
புத்தரின் போதனையோ பொழியுதே எமக்கு
நல்வழி உணர்ந்த நாயக்க கணக்கு
எம்வலி உணர்ந்து ஏற்றிடு விளக்கு

0 comments:

Post a Comment